அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அனைத்துலக கட்டிடக்கலை, அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணிக்கு நகர்த்தப் பட்டுள்ளது: கூடிய பொருத�
No edit summary
வரிசை 8:
 
[[image:Glaspaleis_front-east.jpg|thumb|300px|left|The [[Glaspaleis|Glass Palace]], a celebration of transparency, in Heerlen, The Netherlands (1935)]]
அனைத்துலகப் பாணி 1920 களில் மேற்கு ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது. அனைத்துலகப் பாணியானது, [[ஒல்லாந்து|ஒல்லாந்தில்]] உருவான [[டி ஸ்டைல்]] (de Stijl) இயக்கம், பிரபல கட்டிடக்கலைஞர் [[லெ கொபூசியே]] (Le Corbusier) அவர்களின் ஆக்கங்கள் மற்றும் ''[[டியூச்சர் வேர்க்பண்ட்]]'' எனப்படும் ஜெர்மன் தொழிலாளர் கூட்டமைப்பு உருவாகக் காரணமாக இருந்த அந்நாட்டில் நடைபெற்ற பல்வேறு கைப்பணி மரபுகளைத் தொழில் மயமாக்கும் முயற்சிகள், [[பிராங்போர்ட்|பிராங்போர்டிலும்]], [[ஸ்ரட்கார்ட்|ஸ்ரட்கார்ட்டிலும்]], கட்டப்பட்ட பாரிய தொழிலாளர் [[வீடமைப்புத் திட்டம்|வீடமைப்புத் திட்டங்கள்]], எல்லாவற்றிலும் மேலாக ''[[பௌஹவ்ஸ்]]'' (Bauhaus) இயக்கம் போன்றவற்றோடு பொது அடிப்படைகளைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 1920 களில், நவீன கட்டிடக்கலையின் முக்கியமானவர்கள் தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொண்டனர். இவர்களுள் மிகக் கூடுதலாக அறியப்பட்டவர்கள் பிரான்சில் லெ கொபூசியேயும், ஜெர்மனியில் [[லுட்விக் மீஸ் வான் டெர் ரோ]] (Ludwig Mies van der Rohe) மற்றும் [[வால்டர் குரோப்பியஸ்]] (Walter Gropius) என்போராவர்.
 
 
[[படிமம்:Lovell beach house.jpg|right|thumb|350px|[[Rudolf Schindler]]'s Lovell Beach House in Los Angeles, California (1926)]]
அனைத்துலகக் கட்டிடக்கலைப் பாணியின் பொது இயல்புகள் இலகுவாக அடையாளம் காணப்படக் கூடியவையாகும். கட்டிடங்களின் எளிமையான உருவமைப்பு, அலங்காரங்களைத் தவிர்த்தல், [[கண்ணாடி]], [[உருக்கு]], [[காங்கிறீற்று]] என்பவற்றின் பயன்பாடு, கட்டிடங்களின் உட்பகுதிகளைக் காட்டும் தன்மையும் அதனால் அதன் அமைப்புமுறைகளை வெளிப்படுத்தும் தன்மையும், தொழில் மயப்படுத்தப்பட்ட [[பெரும்படித் தயாரிப்பு]] நுணுக்கங்களை ஏற்றுக்கொண்டமை, [[இயந்திர அழகியல்]], கட்டிடங்களின் செயற்பாடுகளோடு ஒட்டிய [[வடிவமைப்பு]] என்பன இத்தகைய இயல்புகளுட் சிலவாகும்.
 
[[அலங்காரம் ஒரு குற்றச்செயல்]] (ornament is a crime), செயற்பாடுகளைத் தொடந்தே உருவம் அமைகின்றது (form follows function) போன்ற அக்காலத்தில் பிரபலமான தொடர்களும், லெ கொபூசியேயின், வீடு என்பது ''வாழ்வதற்குரிய இயந்திரம்'' என்னும் விளக்கமும் இப்பாணியின் கொள்கைகளைச் சுருக்கமாக விளக்குகின்றன.
 
==கட்டிடக்கலைஞர்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலகக்_கட்டிடக்கலைப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது