உரூப் மாலிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய உயிரியலாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''உரூப் மாலிக்''' ''(Roop Mallik)'' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:16, 30 மே 2020 இல் நிலவும் திருத்தம்

உரூப் மாலிக் (Roop Mallik) என்பவர் ஓர் இந்திய உயிர் இயற்பியலாளர் ஆவார். வைரசுகள், மைட்டோகாண்ட்ரியா, எண்டோசோம் உள்ளிட்ட உட்புறம் வாழும் செல்களைக் கடத்தும் இயக்கு புரத மூலக்கூறுகளின் மீநுண்ணளவு பிரிவு தொடர்பான ஆய்வுகளில் இவர் ஈடுபடுகிறார். கினசின் மற்றும் டைனீன் போன்ற இயக்கு புரதங்கள் பல்வேறு செல்லுலார் செயல்முறைகளான செல் பிரிவு, குமிழிப் போக்குவரத்து, உயிரணு உட்கவர்தல் மூலக்கூற்றை கட்டுதல் போன்றவற்றைச் செயல்படுத்த பைக்கோ-நியூட்டன் அளவு சக்தியை உருவாக்குகின்றன. [1] மூலக்கூற்று இயக்கு புரதங்களின் செயல்பாடு மற்றும் கல்லீரலில் நோய்க்கிருமி சிதைவு மற்றும் கொழுப்பு நீர்ச்சமநிலையில் அதன் பங்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இவர் ஆய்வகம் கவனம் செலுத்துகிறது. [2]

குடும்பம்

பேராசிரியர். மாலிக் 1970 ஆம் ஆண்டு வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் சிறிய நகரமான அலகாபாத்தில் பிறந்தார். [3] இவருடைய தந்தை ஓர் இயந்திரப் பொறியாளர், தாயார் மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த இல்லத்தரசியாவார்.

தொழில்

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாலிக் இயற்பியலில் முதுகலை பட்டப்படிப்பை 1993 ஆம் ஆண்டு முடித்தார் . இவரது மாமா ஆலோசனையின் பேரில் 1994 ஆம் ஆண்டு இறுக்கப்பட்ட பொருண்மை இயற்பியல் துறையில் முனைவர் பட்டத்திற்காக மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் ஈவி சம்பத் குமாரின் பரிசோதனைக் கூடத்தில் சேர்ந்தார். [4][5] After the completion of his Ph.D. with over 20 international articles,[6] 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பன்னாட்டு அளவிலான கட்டுரைகளுடன், . கிருட்டிண மூர்த்தி மற்றும் செயந்த் உத்கோங்கரின் ஆய்வகத்தில் பிந்தைய முனைவர் பட்ட ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றினார். இந்த குறுகிய பதவிக்காலத்தில் உயிரியல் உலகிற்கு இவர் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் செல் உயிரியல் துறையில் சிடீவன் கிராசின் ஆய்வகத்தில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு இவர் மீண்டும் உயிரியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். [7] In 2006, he again joined TIFR, as assistant professor in Department of Biological Sciences (DBS).

தனிப்பட்ட வாழ்க்கை

மும்பையின் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் டாக்டர் சிரீலசா நாயரை மாலிக் மணந்தார். [8]

விருதுகள்

•இன்போசிசு விருது- 2018[9] •அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவருப் பட்நாகர் விருது – 2014[10][11]

மேற்கோள்கள்

  1. "Biophysics of molecular motor complexes". Department of Biological Sciences, TIFR. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  2. https://www.infosys.com/newsroom/press-releases/Pages/ISF-announces-infosys-prize-2018.aspx
  3. "Roop Mallik Profile" (PDF).
  4. [1]
  5. Brief Profile of the Awardee
  6. "Roop Mallik's Publication".
  7. "Steven Gross Lab".
  8. "Sreelaja Nair lab webpage".
  9. "Infosys science foundation award, 2018".
  10. "Shanti Swarup Bhatnagar awards for 10 scientists". BusinessLine. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  11. "Dr. P.S.Ahuja Announces Shanti Swarup Bhatnagar Award 2014". Press Information Bureau, Government of India. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூப்_மாலிக்&oldid=2979347" இலிருந்து மீள்விக்கப்பட்டது