"கலப்புக் கோட்டுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,545 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
கலப்புக் கோட்டுருவில் [[பாதை (கோட்டுருவியல்)|நடை]] என்பது <math>v_0,c_1,v_1,c_2,v_2,\dots,c_k,v_k</math> என்ற முனைகள் மற்றும் விளிம்புகளின் தொடர்முறையாகும். இத்தொடர்முறையில் <math>v_0,,v_1,,v_2,\dots,v_k</math> கலப்புக் கோட்டுருவின் முனைகள்; மேலும் அனைத்து <math>i</math> களுக்கும் <math>c_i=v_{i}v_{i+1}</math> என்பது கலப்புக் கோட்டுருவின் விளிம்பாகவோ அல்லது <math>c_i=\overrightarrow{v_{i}v_{i+1}}</math> திசைவிளிம்பாகவோ இருக்கும். முதல் மற்றும் இறுதி முனைகள் தவிர வேறெந்த முனைகளோ, விளிம்புகளோ அல்லது விற்களோ மீண்டும் வராத [[பாதை (கோட்டுருவியல்)|பாதை]]யானது "நடை" எனப்படுகிறது. முதல் மற்றும் இறுதி முனைகள் இரண்டும் ஒரே முனையாக அமைந்தால் அப்பாதையானது "மூடிய பாதை"யாகும். முதல் மற்றும் இறுதி முனைகளைத் தவிர வேறெந்த முனைகளும் மீண்டும் வராத மூடிய பாதையானது [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சி]]யாகும். ஒரு கலப்புக் கோட்டுருவில் சுழற்சிகளே இல்லையெனில் அது "சுழற்சியற்றக் கலப்புக் கோட்டுரு" என அழைக்கப்படும்.
 
== நிறந்தீட்டல் ==
[[File:ColoredMixed.png|thumbnail|Example of mixed graph]]
கலப்புக் கோட்டுருவிற்கு நிறந்தீட்டலை அதன் முனைகளுக்கு பெயரிடலாக அல்லது வெவ்வேறு {{mvar|k}} (நேர் முழு எண்) நிறங்களை அதன் முனைகளுக்கு அளிப்பதாகவோ எடுத்துக்கொள்ளலாம்.<ref name="HansenKuplinskydeWerra">{{harvtxt|Hansen|Kuplinsky|de Werra|1997|p=1}}</ref> விளிம்புகளால் இணைக்கப்படும் முனைகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நிறங்கள் தரப்பட வேண்டும். அளிக்கப்படும் நிறங்கள் {{math|1}} முதல் {{mvar|k}} வரையான எண்களால் குறிக்கப்பட வேண்டும். ஒரு திசை விளிம்பில் அதன் வால்முனைக்கு அளிக்கப்படும் எண் அதன் தலைமுனைக்கு அளிக்கப்படும் எண்ணைவிட சிறியதாக இருக்குமாறு கலப்புக் கோட்டுவை நிறந்தீட்ட வேண்டும்.<ref name="HansenKuplinskydeWerra" />
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3000063" இருந்து மீள்விக்கப்பட்டது