இராசேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 12:
| heir= [[இராஜாதிராஜ சோழன்]]
| father= [[இராஜராஜ சோழன்]]
| year of birth= மார்கழிஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/16576-.html|title=ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் எது?}} இந்து தமிழ் (03 செப்டம்பர், 2014)</ref>
| year of death= கி.பி. 1044}}
 
வரிசை 22:
 
== சோழப் படைத்தலைவன் இராஜேந்திரன் ==
 
இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மாதண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிரரையும் வென்றான்.
 
=== இணை அரசனாக நிர்வகித்தல் ===
 
[[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழரின்]] ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன், இராஜராஜ சோழனின் படைகளுக்குப் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித் தந்தான்.
 
== முடி சூடுதலும் தொடக்ககால ஆட்சியும் ==
 
இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜ சோழனை]] இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். [[இராஜாதிராஜ சோழன்]] கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.
 
வரி 36 ⟶ 33:
 
=== நாட்டின் பரப்பும் அமைப்பும் ===
 
தற்போதைய [[சென்னை]], [[ஆந்திரா|ஆந்திரம்]] பகுதிகளுடன், [[மைசூர்|மைசூரின்]] ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை [[இராஜராஜ சோழன்|இராஜராஜன்]], இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட [[சோழர் படை|படை]] ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. [[ஈழம்]], மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.
 
வரி 49 ⟶ 45:
 
=== பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு ===
 
[[ஈழம்|ஈழப்படையெடுப்பைத்]] தொடர்ந்து [[பாண்டியர்|பாண்டியர்களுக்கும்]] [[சேரர்|சேரர்களுக்கும்]] எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018இல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்றும், தொடர்ச்சியாகக் கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களைப் படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.
 
வரி 55 ⟶ 50:
 
=== சாளுக்கியர் படையெடுப்பு ===
 
இராஜேந்திரன் கி.பி. 1021 இல் தன்னுடைய கவனத்தை [[சாளுக்கியர்|மேலைச் சாளுக்கியர்களை]] நோக்கித் திருப்பினான். இதற்குக் கி.பி. 1015இல் [[ஐந்தாம் விக்கிரமாதித்தன்|ஐந்தாம்]] விக்ரமாதித்தனுக்கு பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய [[இரண்டாம் ஜெயசிம்மன்]] பொறுப்பேற்றதும், [[சத்யாச்சிரயன்]] காலத்தில் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் [[ஈழம்|ஈழத்திலும்]] [[பாண்டியர்]], [[சேரர்|சேரர்களுக்கு]] எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன் இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.
 
வரி 85 ⟶ 79:
 
=== பண்ணை ===
 
இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது.
 
=== இலாமுரி தேசம் ===
 
[[இலமூரி சுல்தானகம்|இலாமுரி தேசம்]] என்பது, [[சுமத்திரா]]வின் வடபகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவாரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள [[ஸ்ரீவிஜயம்|ஸ்ரீவிஜய]] இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது.
 
== இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள் ==
 
[[கடாரம்]] படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல், தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான்.
 
வரி 99 ⟶ 90:
 
=== தெற்கில் குழப்பம் ===
 
[[பாண்டியர்|பாண்டிய]], [[சேரர்|கேரள]] நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே [[இராஜாதிராஜன்]] ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் [[பாண்டியர்|பாண்டிய]], [[சேரர்|கேரள]] நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை. இக்காலத்திய பாண்டியர் கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும்.
 
வரி 107 ⟶ 97:
 
==== சோழப்பேரரசின் கருணை ====
 
[[சோழர்|சோழர்களால்]] கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது.
 
== இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள் ==
 
[[இராஜேந்திர சோழன்|இராஜேந்திரன்]] ஆட்சியின் கடைசி ஆண்டுகள், விஜயாலய சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழநாடு மிகப் பரந்து விரிந்தது; [[சோழர் படை|சோழருடைய பெரும் படையின்]] வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர்.
 
வரி 120 ⟶ 108:
 
=== விருதுகள் ===
 
[[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனைப்]] போன்றே [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திரனும்]] சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான்.
 
வரி 126 ⟶ 113:
 
=== பட்டத்தரசிகள் ===
 
திருப்புவன அல்லது வானவன் மாதேவியார், முக்கோலான்,வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் [[இராஜாதிராஜன்]], இராஜேந்திரன், [[இராஜேந்திர சோழன் II|வீர இராஜேந்திரன்]] ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளிப்பாக அளித்தாள். இம்மன்னனின் மற்றொரு மகள், புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்கனின்]] தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ஆம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் கி.பி 1044இல் காலமாயிருக்க வேண்டும்.
 
வரி 224 ⟶ 210:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இராசேந்திர_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது