நகரும் அச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: விக்கித்தரவில் இணைக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''நகரும் அச்சு''' (''Movable type'' அல்லது ''moveable type'' ) [[அச்சுக்கலை]]யிலும் [[அச்சிடல்|அச்சிடலிலும்]] பயன்படுத்தப்படும் ஓர் [[தொழிநுட்பம்]] ஆகும். இத்தொழில்நுட்பத்தில் நகர்த்தக்கூடிய அச்சுக்களைப் பயன்படுத்தி ஓர் ஆவணத்தின் கூறுகளை (பொதுவாக எழுத்துருக்களும் புள்ளிகளும்) ஊடகம் (பொதுவாக [[காகிதம்]]) ஒன்றின் மேல் அச்சிடுவதாகும்.
 
உலகில் முதன்முதலாக [[காகிதம்|காகித]] [[நூல் (எழுத்துப் படைப்பு)|நூல்களில்]] அச்சிட நகரும் அச்சுக்களைப் பயன்படுத்தியது [[சீனா]]வின் வடக்கு சோங் ஆட்சிப்பகுதியில் இருந்த பை செங் (990–1051) என்பவராகும்; இவர் கி.பி.1040இல் பீங்கான் அச்சுக்களைப் பயன்படுத்தியிருந்தார்.<ref name="needhamb">{{cite book |last = Needham |first = Joseph |title = The Shorter Science and Civilisation in China, Volume 4 |year = 1994 |publisher = Cambridge University Press |page = 14 |isbn = 9780521329958 |quote = Bi Sheng... who first devised, about 1045, the art of printing with movable type}}</ref> தொடர்ந்து 1377இல் கொரியாவில் இந்த நூட்பத்தைநுட்பத்தை வைத்து முதலில் அச்சிடப்பட்ட நூல் வெளியானது. இத்தொழில்நுட்பம் பெரும்பாலும் [[கிழக்காசியா]] பகுதிகளில் மட்டுமே பரவியிருந்தது. இங்கு வந்த கிறித்தவப் பாதிரிமார்களினால் இது ஐரோப்பாவிற்கு பின்னர் கொண்டு செல்லப்பட்டது. இவர்களது ஆவணங்களில் சில [[வாடிகன் நூலகம்|வாடிகன் நூலகத்திலும்]] ஆக்சுபோர்டின் போத்லியன் நூலகத்திலும் சேமிக்கப்பட்டுள்ளன.<ref>{{cite journal | last1 = He | first1 = Zhou | year = 1994 | title = Diffusion of Movable Type in China and Europe: Why Were There Two Fates? | journal = International Communication Gazette | volume = 53 | issue = 3 | pages = 153–173 | doi = 10.1177/001654929405300301 }}</ref> ஏறத்தாழ 1450இல் [[யோகான்னசு கூட்டன்பர்கு]] நகரும் அச்சுக்களைக் கொண்ட [[அச்சு இயந்திரம்|அச்சு இயந்திரத்தை]] ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்; இவரது அச்சுக்கள் அணிகளாகவும் கையால் வார்த்தவையாகவும் இருந்தன. ஐரோப்பிய மொழிகளுக்கு குறைந்த [[அகரவரிசை]] எழுத்துருக்களே தேவைப்பட்டது முதன்மை காரணமாக இருந்தது.<ref>{{cite book |last=Beckwith |first=Christopher I. |title=Empires of the Silk Road: A History of Central Eurasia from the Bronze Age to the Present |publisher=Princeton University Press |year=2009 |isbn=978-0-691-15034-5}}</ref> கூட்டன்பெர்கு தமது அச்சுக்களை [[ஈயம்]], [[வெள்ளீயம்]], [[அந்திமனி]] இவற்றின் கலவையால் செய்தார். இவை 550 ஆண்டுகளுக்கு மாற்றப்படாமல் சீர்தரமாக இருந்தன.<ref>[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]. Retrieved November 27, 2006, [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]—பதிகை "அச்சிடல்"</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நகரும்_அச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது