மலையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழின் மற்றொரு உருவம் தான் மலையாளம்.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 157.50.165.134ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 17:
 
== தோற்றம் ==
தமிழ், தோடா, கன்னடம் மற்றும் துளுவுடன் இணைந்து மலையாளம் தென் திராவிட துணைக்குடும்பத்தை சார்ந்தது ஆகும். தமிழுடன் மிகுந்த ஒற்றுமையுடைய மொழி மலையாளம். மலையாளம் ஆதித் தமிழ்-மலையாளம் என்ற கூட்டுமொழியிலிருந்து நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளில் வேறுபடத் துவங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழிலிருந்து மிக வேறுபட்டு மலையாளம் ஒரு தனி மொழியாக உருப்பெற்றது என்று கூறுவோர் உண்டு. ஆனால் அப்படி கிடையாது.ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழின் பெருந்தாக்கம் மலையாளத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் நம்பூதிரிகளின் வரவால், வடமொழி ஆதிக்கம் நிலவியது. அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர் வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் உணரலாம்
 
பழங்காலத்தில் கேரளம் என்பது சேர நாடாகத் தமிழக இலக்கியங்களில் அறியப்படுகிறது.
வரிசை 46:
மலையாள மொழியின் வரலாற்றில் நிலையான பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களில் முதன்மையானது நம்பூதிரிமார்களின் சமஸ்கிருத பிரச்சாரமாகும். மேற்குடி சமூக-அரச சம்பவங்கள் இந்த ஒரு மாற்றத்தின் தாக்கத்தை கூட்டுவதாக இருந்தது. பாண்டிய சோழ சேர அரசர்களின் அதிகாரம் தென்னிந்தியாவில் குறைந்ததும், மலையாள நாட்டில் பெருமக்கன்மாரின் ஆட்சி ஏற்பட்டதும் தமிழக மக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. கிழக்கே இருந்த மலையும் தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்குமான தூரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இந்த காரணங்களினால் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாயின. மேலும் மருமக்கன்தாயம், முன்குடுமி, உடை வேறுபாடுகள் போன்றவை பண்பாட்டு வேறுபாடுகளும் தமிழகமக்களையும் மலையாள மக்களையும் வேறுபடுத்தி பிரித்தது.
 
கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் கேரள கிராமங்களில் பிராமண சமூகங்கள் குடியேறத் துவங்கின. தங்களுடைய உடைகளையும் சில ஆசார அனுட்டானங்களையும் திராவிட மக்களுக்க்காகப் புறக்கணித்ததினால் அவர்களுக்கு மலைநாட்டில் ஒரு நீங்காத இடம் கிடைக்குமாறு செய்தது. பிராமணர்களிடமிருந்தும் சமஸ்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் கொடுந்தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து ஒன்று சேர்ந்து மலையாண்ம என்ற மொழியாக உருவம் பெற்றது.மலையாளம் என்பது தமிழின் ஒரு வழக்கே.தமிழின் கிளை மொழி.மலையாள சொற்கள் அனைத்துமே ,தமிழ் அகராதியில் இருக்கிறது.ஆனால் தமிழர்கள் தான் அதை பயன்படுத்துவதில்லை.அதை மலையாளம் என்று ஒரு மொழியாக்கி பயன்படுத்துகிறார்கள்.
 
== நெடுங்கணக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/மலையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது