மார்லீன் டீட்ரிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
''நீலத் தேவதை'' படத்தின் பன்னாட்டு மட்டத்திலான வெற்றியின் பலத்தினாலும், ஹாலிவூட்டில் ஏற்கெனவே ஓரளவுக்கு நிலைபெற்றுவிட்ட வொன் ஸ்டேர்ன்பர்க் கொடுத்த ஊக்கம் காரணமாகவும் பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு டீட்ரிக் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். இந் நிறுவனம், எம்ஜிஎம் நிறுவனத்தின் புகழ்பெற்ற சுவீடிய நடிகையான கிரேட்டா கார்போவுக்கு மாற்றாக ஜெர்மானியரான டீட்ரிக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்டேர்ன்பர்க் இயக்கிய டீட்ரிக்கின் முதல் அமெரிக்கப் படமான "மொரோக்கோ"வே [[ஆஸ்கார் விருது]]க்காக நியமனம் பெற்ற டீட்ரிக்கின் ஒரே படமாகும்.
 
திரைப்பட வரலாற்றுக்கு டீட்ரிக்கின் மிக முக்கியமான பங்களிப்பு வொன் ஸ்டேர்ன்பர்க் இயக்கி டீட்ரிக் நடித்து 1930க்கும் 1935க்கும் இடையில் வெளிவந்த ஆறு திரைப்படங்களான ''மொரோக்கோ'', ''டிஸ்ஒனேர்ட்'', ''ஷாங்காய் எக்ஸ்பிரஸ்'', ''புளொண்ட் வீனஸ்'', ''த ஸ்கார்லட் எம்பிரெஸ்'', ''த டெவில் இஸ் எ வுமன்'' என்பனவாகும்.
 
[[பகுப்பு: அமெரிக்க நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மார்லீன்_டீட்ரிக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது