பேரரசர் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added content
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
'''பேரரசன் அலெக்சாந்தர்''' அல்லது '''மகா அலெக்சாண்டர்''' (''Alexander the Great'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,<ref>[http://www.etymonline.com/index.php?search=Alexander&searchmode=none Online Etymology Dictionary]</ref> ''Megas Alexandros''; சூலை 20, கிமு 356 - சூன் 10/ 11, கிமு 323), [[கிரேக்க நாடு|கிரேக்கத்தின்]]<ref name=pomeroy1>{{cite book|author=Pomeroy, S.|coauthors=Burstein, S.; Dolan, W.; Roberts, J.|date=1998|title=Ancient Greece: A Political, Social, and Cultural History|publisher=Oxford University Press|isbn= 0-19-509742-4}}</ref><ref name=Hammond1>{{cite book|author=Hammond, N. G. L.|date=1989|title=The Macedonian State: Origins, Institutions, and History|pages=12–13|publisher=Oxford University Press|isbn= 0-19-814883-6}}</ref> பகுதியான [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மக்கெடோனின்]] பேரரசர் (கிமு 336–323). '''மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர்''' எனவும் இவர் அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவரது காலத்தில் [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கர்களுக்குத்]] தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டார். இவர் [[பண்டைய அண்மை கிழக்கு]], [[பண்டைய எகிப்து]] மற்றும் [[பாரசீகம்|பாரசீகப்]] பகுதிகளை ஆண்ட [[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசியப் பேரரசர்]] [[மூன்றாம் டேரியஸ்|மூன்றாம் டேரியசை]] வென்றார்.
 
அலெக்சாந்தர் அவரது தந்தை [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்|இரண்டாம் பிலிப்]] இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தார். இவர் [[பண்டைய அண்மை கிழக்கு]] பகுதிகளான [[அனதோலியா]], [[சிரியா]], [[போனீசியா]], [[காசா]], [[பண்டைய எகிப்து]], [[அகாமனிசியப் பேரரசு]], [[பாக்திரியா]], [[மெசொப்பொத்தேமியா]] ஆகியவைகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை விரிவாக்கினார்நீட்டியிருந்தார்.
 
இறப்பதற்கு முன்பே, [[பாரசீக வளைகுடா]]வில் தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே [[கார்த்தேஜ்]], [[ரோம்]], [[ஐபீரியக் குடாநாடு]] ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார். அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_அலெக்சாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது