"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
கடந்த பதினாறாவது ஆண்டு விழாக் கூடலுக்குப் பிறகு பல புதிய பயனர்களை ஊக்குவிக்கும் முயற்சியாகச் சில முன்னெடுப்புகள் செய்து வருகிறோம். மாணவர்களிடம் விக்கித் திட்டங்களைக் கொண்டு செய்வது உலக அளவில் பல விக்கிச் சமூகங்களும் செய்து வரும் முக்கியப் பரப்புரை. அவ்வகையில் கடந்த மாதங்களில் பல இணையவழிப் பயிற்சிகளைக் கொடுத்தும், ஸ்ரீ கிருஷ்ணா அதித்யா கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து ஏழு நாள் தொடர் பயிற்சிகளையும் கொடுத்துள்ளோம். முன்னரே த.இ.க.வின் முன்னெடுப்பில் கணித்தமிழ்ப் பேரவை வழியாகச் சில முயற்சிகளும் செய்துள்ளோம். ஆனால் முழுமையான பயிற்சியைக் கல்லூரி மாணவர்களுக்குக் கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணம் தமிழ் விக்கிச் சமூகத்திற்கும் இத்தகைய நெடிய பயிற்சி கொடுத்த அனுபவமில்லை. ஆனால் இன்று பல தமிழ் விக்கிப் பயனர்கள் பயிற்றுநர்களாக உதவக் கூடிய சூழலுள்ளது, மேலும் பெருந்தொற்றுக் காரணமாக கல்லூரி சார்பாகவும் இணையவழிச் செயல்பாட்டிற்கு ஆதரவும் உள்ளது. இந்நிலையில் ஒரு மாதம் "தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளகப் பயிற்சி" (Tamil Wikipedia Internship Programme) என்ற புதிய திட்டத்தை மதுரை [[பாத்திமா கல்லூரி]] தமிழ்த் துறை மாணவர் கொண்டு நடத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். கல்லூரி சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் ஆர்வம் தெரிவித்தனர். இந்த முதுகலை இறுதியாண்டு தமிழ் மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி என்பது பாடத்திட்டத்தில் உள்ள ஒரு செயல்பாடாகும். எனவே மிகுந்த ஆர்வமுடன் பங்களிக்க உள்ளதால் விக்கித்திட்டங்களுக்கும் அவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும். சி.ஐ.எஸ். உதவியுடன் பங்களிப்புச் சான்றிதழ் வழங்கலாம். வார இரு/மூன்று நாள் பயிற்சியும் மீதி நாட்கள் வீட்டுப்பாடமாகச் சில செயல்பாடுகளையும் மாணவர்களுக்கு அளிக்கலாம். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் திட்டமிட்டது [https://www.youtube.com/watch?v=cdsk1_zObbY&list=PLkaLCAVtOt60dIIhLHiAEKjS1zrIDuwfR போல] முதலில் விக்கிமூலம், விக்சனரி, விக்கிப்பீடியா, பொதுவகம் எனப் பயிற்சியைத் திட்டமிடலாம். செயல்பாட்டுத் திட்டத்தினைத் தனிப் பக்கத்தில் விவாதிப்போம். ஆர்வமுள்ள விக்கிப் பயனர்கள் அனைவரும் பயிற்சி அளிக்கும் வகையில் செயல்திட்டங்களை அமைப்போம். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள, த.வி. சமூக ஆதரவையும் வழிகாட்டலையும் கோருகிறேன். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:45, 13 அக்டோபர் 2020 (UTC)
 
நல்லது. மற்ற சில மாநிலங்களில் இருப்பது போல விக்கித்திட்டங்கள் கல்லூரி மாணவர்களிடம் போதிய அளவு சென்றடையவில்லை. தற்போது கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் நடைபெற்ற ஏழு தினங்கள் பயிற்சி ஒரு நல்ல முன்னெடுப்பு ஆகும். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகம் மதுரை கிளை மற்றும் ஸ்ரீ மீனாட்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஆகியவையும் சிறந்த தொடக்கமாகும். தற்போது மதுரை, பாத்திமா கல்லூரியின் மாணவர்கள் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் இப்படிப்பட்ட ஒரு உள்ளகப் பயிற்சிக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது நல்ல வாய்ப்பாகும்.வரவேற்கிறேன்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 15:37, 13 அக்டோபர் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3046909" இருந்து மீள்விக்கப்பட்டது