ஒலிச்சேர்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஒலிச்சேர்க்கை''' (Dubbing) என்பது [[திரைப்படத் தயாரிப்பு|திரைப்படத் தயாரிப்பிலும்]], நிகழ்படத் தயாரிப்பிலும், '''ஒலிச்சேர்க்கை''' (Dubbing) என்பது, [[படப்பிடிப்பு]]க்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது, முதலில் செய்த [[ஒலிப்பதிவு]]க்குக் கூடுதலான அல்லது குறைநிரப்பு ஒலிப்பதிவு இடம்பெறுகிறது. இந்தச் செயல்முறை, [[தன்னியக்க உரையாடல் பதிலீடு]] அல்லது கூடுதல் உரையாடல் பதிவு என்பதையும் உள்ளடக்குகிறது. இச்செயல்முறையின் போது, படத்தில் நடித்த நடிகர்களின் உரையாடல்களை மீள்பதிவு செய்கின்றனர். [[இசை]] பெரும்பாலும் ஒலிச்சேர்க்கை மூலமே [[திரைப்படம்|திரைப்படத்தில்]] இணைக்கப்படுகின்றது. திரைப்படத்தில் நடித்த [[நடிகர்]]களுக்குப் பதிலாக இன்னொருவர் அதே [[மொழி]]யில் குரல் கொடுப்பதும், திரைப்படங்களை மொழிமாற்றம் செய்யும்போது நடிகர்களுக்குப் பிற மொழியில் வேறொருவர் குரல் கொடுப்பதும் ஒலிச்சேர்க்கையுள் அடங்குவதே.<ref>{{cite web |url=http://www.routledge.com/cw/butler-9780415883283/s1/glossary/ |title=Glossary - Television |accessdate=9 July 2015}}</ref><ref>{{cite web |title=What is ADR?|url=http://www.filmmaking.net/faq/answers/faq154.asp?catid=10 |publisher=filmmaking.net |accessdate=27 December 2013 |first=Benjamin |last=Craig |date=21 February 2005}}</ref>
 
தற்பொழுது வெளிநாட்டு விநியோகத்திற்காக [[திரைப்படங்கள்]], [[தொலைக்காட்சி நிகழ்ச்சி]]கள், [[அனிமே]] மற்றும் [[குழந்தைகள் நிகழ்ச்சிகள்]] ஆகியவை மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றது. [[இந்தியா]] நாட்டை பொறுத்தவரையில் பெருமபாலான வெளிநாட்டுத் திரைப்படங்கள் மற்றும் உள்நாட்டுத் திரைப்படங்கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி]] மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.
 
==தோற்றம்==
வரி 10 ⟶ 12:
வழமையான படத் தயாரிப்புக்களின்போது, [[படப்பிடிப்பு ஒலிப்பதிவாளர்]] படப்பிடிப்பின்போதே உரையாடல்களை ஒலிப்பதிவு செய்வார். ஆனாலும், கருவிகளிலிருந்து எழும் ஒலி, போக்குவரத்து ஒலி, காற்று மற்றும் சூழலிலிருந்து எழுகின்ற பிற ஒலிகள் போன்றவற்றினால், களத்தில் செய்யப்படும் ஒலிப்பதிவுகள் பெரும்பாலும் பயன்பாட்டுக்கு உதவாதவையாக ஆகிவிடுகின்றன. படப்பிடிப்புக்குப் பிந்திய கட்டத்தில், ஒரு ஒலிப்பதிவு மேற்பார்வையாளர் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைக் கேட்டு மீள ஒலிப்பதிவு செய்யவேண்டிய பகுதிகள் எவை என முடிவு செய்வார்.
 
== மேற்கோள்கள் ==
[[பகுப்பு:திரைப்படம்]]
{{reflist}}
 
[[பகுப்பு:ஒலிச்சேர்க்கை]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிச்சேர்க்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது