நிக்கோலஸ் ஓட்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
No edit summary
வரிசை 46:
என்றாலும் ஆட்டோ மனத்தளர்ச்சி கொள்ளவில்லை. லென்வார் கண்டுபிடித்த உள்ளெரி என்ஜினையே தான் விரும்பிய வண்ணம் மாற்றியமைப்பதில் தீவிமாக ஈடுபட்டார். விரைவிலேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டு லென்வாரின் என்ஜினை மாற்றியமைத்ததைக் காட்டிலும் முற்றிலும் புதிய என்ஜினை உருவாக்குவதே நலம் என முடிவு செய்து அதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதன் விளைவாக இரண்டு முழுச் சுழற்சியால் இயக்கப்பட்ட லென்வாரின் என்ஜினைவிட முற்றிலும் வேறுபட்ட முறையில் நான்கு சுழற்சியால் இயங்கத்தக்க வகையில் பொறியை வடிவமைத்தார். இதிலும் தீப்பற்ற வைக்க வேண்டிய சிரமங்கள் எழுந்தன. இதனால் நடைமுறைச் சிக்கல் சில எழக்கூடும் எனக் கருதினார். எனவே, இதற்கும் மாறுபட்ட முறையில் காற்று மண்டல என்ஜினை (Atmospheric Engine) உருவாக்கினார். இரண்டு முழுச் சுழற்சியால் இயங்கும் இதை வாயுவால் இயக்க முடிந்தது. இதற்கான புத்தாக்க உரிமை பெற்ற ஆட்டோ யூஜின் லாங்கன் என்பாரின் பொருளுதவியோடு தொழிற்சாலை தொடங்கினார். தொடர் ஆராய்ச்சியின் விளைவாக செப்பமான இரண்டு முழு இயக்க என்ஜினை உருவாக்கி உற்பத்தி செய்தார். இது பாரிசில் நடைபெற்ற உலகப் பொருட்காட்சியில் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது. இதன் சிறப்பு பலராலும் பாராட்டப்பட்டது. விற்பனையும் விரைந்து பெருகியது.
 
எனினும் நான்கு முழு இயக்க என்ஜின் தயாரிப்பிலேயே நாட்டமுடையவராக இருந்தார். இடைவிடாத பெருமுயற்சியின் விளைவாக தீப்பற்ற வைப்பு முறையொன்றைக் கண்டுபிடித்தார். அதன் பயனாக நடைமுறைக்கு உகந்த நான்கு முழு இயக்க என்ஜினை உருவாக்கினார். விரைவிலேயே அதன் புத்தாக்க உரிமையையும் (Patent) பெற்றார். அவர் கண்டுபிடித்த உள்ளெரி என்ஜினின் அடிப்படையிலேயே இன்றளவும் முழு இயக்க உள்ளெரி என்ஜின்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அப்பொறிகளும் இன்றுவரை ஆட்டோவின் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை முஸ்தபா, 1995, பக்கம் 43-44]</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலஸ்_ஓட்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது