நிவர் புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''நிவர் புயல்''' (''Cyclone Nivar'') என்பது [[வங்காள விரிகுடா|வங்கக் கடலில்]] உருவாகியுள்ள மிகவும் சக்திவாய்ந்த [[சூறாவளி|புயல்]] ஆகும். இப்புயல் தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், 25 நவம்பர், 2020 அன்று [[தமிழ்நாடு|தமிழகத்தை]] தாக்கும் என்றும் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால், நவம்பர் 25 வரை மீனவர்கள் யாரும், மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று [[சென்னை வானிலை ஆய்வு மையம்]] எச்சரித்துள்ளது. இப்புயல் [[மாமல்லபுரம்]]- [[காரைக்கால்]] இடையே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. இதனால் 100 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும் என்றும் [[புதுச்சேரி]], வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் [[சென்னை வானிலை ஆய்வு மையம்]] தெரிவித்துள்ளது.
 
== வரலாறு ==
நவம்பர் 23 ஆம் தேதி, [[சென்னை]]க்குத் தென்கிழக்கே வங்கக் கடலில் 520 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, நவம்பர் 24 தீவிரப் புயலாக நிலைப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
 
== முன்னேற்பாடுகள் ==
* இப்புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் 24 நவம்பர் 2020 அன்று மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
* பெரிய ஏரிகளில் நீர் கொள்ளளவு பாதுகாக்கப்பட்ட அளவில் இருப்பதைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். 24, 25 ஆகிய தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால், மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நீர்படாதவாறு பொதுமக்கள் கவனமாக வைத்துக் கொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
 
=== முன்னெச்சரிக்கை செய்யப்பட்ட பகுதிகள் ===
{{HurricaneWarningsTable
| TRW=
** [[புதுச்சேரி]]
*** [[காரைக்கால்]]
 
** [[தமிழ்நாடு]]
*** [[செங்கல்பட்டு]]
*** [[விழுப்புரம்]]
*** [[கடலூர்]]
*** [[தஞ்சாவூர்]]
*** [[திருவாரூர்]]
*** [[நாகப்பட்டினம்]]
*** [[புதுக்கோட்டை]]
}}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நிவர்_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது