தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2740802 160.83.42.136 (talk) உடையது. (மின்)
No edit summary
வரிசை 1:
[[File:Gajalakshmi_in_Tanjore_Painting.png|thumb|250px|தேவிக்கு வெண்மையும், தூண்கள் தங்க வேலைப்பாடுடனும், கற்கள் பதிக்கப்பட்டும், ஓவியத்தின் சில பகுதிகள் புடைப்பாகவும், திரைச்சீலையுடனும் காணப்படும் தஞ்சாவூர் ஓவியப்பாணியில் வரையப்பட்ட கஜலட்சுமி ஓவியம்.]]
[[Image:Sikh Gurus with Bhai Bala and Bhai Mardana.jpg|thumb|250px|[[குருநானக்]]கும் சீடர்களும், ஓர் அரிய தஞ்சாவூர் பாணி ஓவியம்]]
[[File:Thanjavur Painting.jpg|right|thumb|250px|[[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] - [[ருக்மணி]], தஞ்சாவூர் பாணி ஓவியம்]]
 
 
'''தஞ்சாவூர் ஓவியப் பாணி''' என்பது [[தஞ்சை நாயக்கர்கள்|தஞ்சை நாயக்கர்]] காலம் தொட்டு, [[தஞ்சாவூர் மராத்திய இராச்சியம்|தஞ்சை மராட்டியர்]] மற்றும் [[ஆங்கிலேயர்]] ஆட்சிக் காலங்களினூடாகத் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] வளர்ச்சியடைந்து வந்த ஓர் [[தமிழ்நாட்டு ஓவியக் கலை|ஓவியக் கலைப் பாணி]] ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களில் வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களின் [[ஆந்திரா|ஆந்திர]]க்ஆந்திரக் கலைப் பாணியினதும், [[மராட்டி]]யர்களின் மராட்டிய மற்றும் [[முகலாய ஓவியப் பாணி]]யினதும், ஆங்கிலேயரின் மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது.
 
==வரலாறு==
[[சோழர்]] ஆட்சிக்காலத்தில் [[தஞ்சாவூர்]] ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், தஞ்சாவூரின் ராஜூக்கள் சமுதாயத்தினர், [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] நாயக்கர்கள், [[திருச்சி]], மற்றும் [[மதுரை]] நாயுடுக்கள் ஆகிய ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். எனவே அவை இக்காலங்களில் வளர்ந்து செழித்தோங்கியது. தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்">{{cite web | url=http://www.craftclustersofindia.in/site/indexl.aspx?mu_id=3&Clid=679 | title=இந்தியர்களின் கைவினைத்தொழில் | publisher=தமிழ்நாடு- மதுரை சிறு தொழிற்சாலைகள் தயாரிப்பு மேம்பாட்டு அமைப்பு | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> பல நூற்றாண்டுகளாக இக் கலைப் பாணியைக் கால ஓட்டத்துக்குத் தக்கவாறு வளர்த்து வந்தவர்கள் தஞ்சாவூர், மதுரை நகரங்களைத் தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயக்கர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] குடியேறிய [[மூச்சிகள்]] (''moochys'') எனப்படும் ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவார். இந்தப் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாகப்குலத்தொழிலாகப் படைக்கப்பட்டன. இவர்களை அக்காலத்து அரசர்கள் ஆதரித்து வந்தனர். தஞ்சை மராட்டிய மன்னரான [[சரபோஜி மன்னன்|சரபோஜி]] கலைகளில் பெரும் பற்றுக் கொண்டவர். ஓவியர்களுக்குப் போதிய அளவு வாய்ப்புக்களை வழங்கி அவர்களை ஆதரித்து வந்தார்.மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது. இவர் காலத்தில் தஞ்சாவூர் நிர்வாகம் முற்றாகவே ஆங்கிலேயர் வசம் சென்றிருந்தது. எனினும், சரபோஜி பெயரளவில் மன்னராக இருந்தார். இவரது அரண்மனையிலிருந்த ஓவியங்கள் மூலமாக அக்காலத்திய தஞ்சாவூர்ப் பாணிபற்றி அறிந்த ஆங்கிலேயர் பலர் அவற்றை வரைந்தவர்களை அணுகி ஓவியங்களை வரைந்து பெற்றுக்கொண்டனர். இக்காலத்திலேயே ஆங்கிலேயரின் விருப்பத்திற்கு ஏற்ப, மேற்கத்திய நுட்பங்களையும் கலந்து ஓவியங்கள் வரையப்பட்டன. நுட்பங்களில் மட்டுமன்றி, உள்ளடக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பெரும்பாலும் கடவுளரையும், அரசர்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையும் பழக்கம் மாறி, சாதாரண மக்களின் வாழ்க்கையும் ஓவியங்களிலே இடம் பெறத்தொடங்கின. இன்று, இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. அந்த ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.<ref name="அரவக்கோன்"/>
 
இந்தியக்கலை மரபில் ஓவியக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்து செழித்து வரும் சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு கால ஓவியங்களையும், பின்னாளில் தீட்டப்பெற்ற பல்வேறு வகையான ஒவியங்களையும் ஒருங்கே கொண்டு திகழும் ஒரே கோயில் தஞ்சைப் பெரிய கோயிலாகும். இக்கோயிலில் வளர்ந்த இக்கலை பின்னாளில் தஞ்சைப்பாணி ஓவியம் என்னும் ஒரு புதிய ஓவிய மரபை உலகுக்குத் தந்தது. அதுவே தஞ்சாவூர் ஓவியம் என்று தற்போது வழங்கப்படுகிறது. <ref> ந.இராதா, தஞ்சை ஓவியம், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 </ref>
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_ஓவியப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது