மனித மூளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 112.134.63.95 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2976344 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
No edit summary |
||
வரிசை 4:
மனிதனின் [[மூளை]], மற்ற [[பாலூட்டி]]களின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த [[பெருமூளைப் புறணி]]ப் (''cerebral cortex'') பகுதியாகும். [[நரம்பிழையம்|நரம்பிழையத்தால்]] (''neural tissue'') உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் [[முன்மூளை]]யில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற [[விலங்கு]]களில் இருந்து [[மனிதர்|மனிதனைப்]] பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், [[பகுத்தறிவு|பகுத்தறிதல்]], [[கல்வி|கற்றறிதல்]] ஆகியவற்றிக்குக் காரணமான [[மூளையின் முன் மடல்]]கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், [[கண்]] பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
மூளையின் [[படிவளர்ச்சி]]யில், மிக முந்திய சிறிய பாலுட்டியான [[மூஞ்சூறு|மூஞ்சூறில்]] இருந்து [[மனிதக் குரங்கு]] வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை ''மூளைப் பருமனாக்கம்'' (''encephalisation'') என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 [[பில்லியன்]] (5000-10000 கோடி) [[நரம்புக் கலங்கள்|நரம்பணு]]க்களில் (10<sup>11</sup>), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (10<sup>10</sup>) [[புறணிக் கோபுர உயிரணுக்கள்]] (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 [[டிரிலியன்]] (10<sup>14</sup>)
மனித மூளை, தடிப்பான [[மண்டையோடு|மண்டையோட்டின்]] [[எலும்பு]]களாலும், [[மூளை முதுகுத் தண்டுநீர்மம்]] (''cerebrospinal fluid'') என்னும் [[நீர்மம்|நீர்மத்தாலும்]], அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், [[குருதி-மூளை வேலி]] (''blood-brain barrier'') என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், [[இரத்தம்]] மூலம் பரவும் [[நோய்]]களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், [[உள் தலை காயங்கள்]] (''closed head injuries'') எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் [[பக்கவாதம்]] (''stroke''), [[நரம்பு நச்சு]]கள் (''neurotoxin'') எனப்படும் [[வேதியியல்]] [[நச்சுப்பொருள்|நச்சுப் பொருட்களால்]] பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை [[தொற்றுநோய்]]களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களைத்]] தாக்கக் கூடிய பெரும்பாலான [[பாக்டீரியா]] கிருமிகளை, மனித மூளையில் [[குருதி-மூளை வேலி]] என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் [[நுண்ணுயிரி]]களில் இருந்து பெரும்பாலும்
== அமைப்பு ==
வரிசை 17:
மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை [[பெருமூளை அரைக்கோளங்கள்]] (''cerebral hemispheres'') என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி.<ref>[[#refPrinciples|''Principles of Neural Science'']], p 324</ref> பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி [[மூளைத்தண்டு]] என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி [[சிறுமூளை]] (''cerebellum'') என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். [[எலி]], [[சுண்டெலி]]யின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான [[திமிங்கலம்|திமிங்கலமும்]], [[ஓங்கில்|ஓங்கிலும்]] (''dolphin'') மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன.
மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின்
[[Image:Gray728-ta.svg|thumb|250px|left|பெருமூளைப் புறணியின் நான்கு மடல்கள் :
|