சந்திரமலர் ஆனந்தவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
ஐந்து பெண் பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் இவர் நான்காவது பெண் பிள்ளை. சந்திரமலரின் தகப்பனார் இரயில்வே அலுவலராகப் பணி புரிந்தார். சந்திரமலர் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கினார். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போதுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் ஆசிரியர் தொழிலுக்குள் போவதையே பெருமையாகக் கருதினர். பெண்களுக்கு ஆசிரியர் தொழில்தான் சிறந்தது என்று பெற்றோரும் விரும்பினர்.
 
1960 ஆம் ஆண்டு காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்கு சந்திரமலருக்கு இடம் கிடைத்தது. [[பேராக்]] [[ஈப்போ]] வில் இரண்டு ஆண்டு காலம் பயிற்சி பெற்றார். பின்னர் பினாங்கு மாநிலக் காவல் துறையில் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சேர்க்கப் பட்டார். அவருக்குக் காவல் துறையின் சீருடைகள் அணியாத உளவுத் துறையில் இடம் கிடைத்தது. அவருடைய பெரும்பாலான பணிகள் உளவுத் துறையைச் சார்ந்தவை. தற்காப்புக் கலையான ஜூடோவில் சந்திரமலர் தேர்ச்சி பெற்று இருந்ததால் அவருக்கு உளவுத்துறை வழங்கப்பட்டது.<ref>[https://www.youtube.com/watch?v=bl2bSz-b4NI My Story : Chandramalar, The Woman of Steel.]</ref>
 
=== ஜூடோ தற்காப்புக் கலை பயின்றவர் ===
"https://ta.wikipedia.org/wiki/சந்திரமலர்_ஆனந்தவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது