யமுனை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
 
 
'''யமுனை ஆறு''' (''Yamuna River'') வட [[இந்தியா|இந்தியாவின்]] முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் [[இமய மலை|இமய மலையில்]] அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, [[தில்லி]], [[ஹரியானா]] ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[அலகாபாத்]] நகரில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுடன்]] கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]], [[ஆக்ரா]] ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான [[தாஜ் மஹால்]] யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற [[பனிக்கட்டி]] மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் [[உத்ரகாண்ட்]] ம மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள [[பாந்தர்பூஞ்ச்]] சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் [[அலகாபாத்தி]]ல் [[திாிவேணி]] என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை [[கும்பமேளா]] நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை.
 
வரிசை 29:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{அரியானா}}
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/யமுனை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது