எஸ். ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aravindhrajguruஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 34:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள [[மல்லன்கிணறு|மல்லாங்கிணற்றைச்]] சொந்த ஊராகக் கொண்ட இவரது பெற்றோர் சண்முகம், மங்கையர்க்கரசி என்போராவர். இவரது தந்தைவழித் தாத்தா [[திராவிட இயக்கம்|திராவிட இயக்கத்தில்]] பற்றுடையவர். தாய்வழித் தாத்தா [[சைவ சமயம்|சைவ சமயப்]] பற்றுடையவர். இவ்விரு வீடுகளிலும் இலக்கியங்கள், சமூகச் சிந்தனைகளைப் படித்தும், பேசியும் வரும் சூழல் நிலவியதாகக் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியம் பயின்று அதிலேயே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி இடையில் கைவிட்டிருக்கிறார்<ref name="தன்னைப் பற்றி">{{cite web | url=http://www.sramakrishnan.com/?page_id=63 | title=எஸ். ராவின் தளத்தில் அவர் தந்துள்ள சுய அறிமுகம் | accessdate=ஆகத்து 22, 2015 | archive-date=2015-09-26 | archive-url=https://web.archive.org/web/20150926190001/http://www.sramakrishnan.com/?page_id=63 | dead-url=dead }}</ref>.
 
தற்சமயம் மனைவி சந்திரபிரபா, குழந்தைகள் ஹரி பிரசாத், ஆகாஷ் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
வரிசை 41:
இவரது முதல் கதையான "பழைய தண்டவாளம்" [[கணையாழி (இதழ்)|கணையாழியில்]] வெளியாகியிருக்கிறது. 1984இல் எழுதத் தொடங்கிய இவரது எழுத்துக்கள் ஐம்பதிற்கும் கூடிய எண்ணிக்கையில் நூல்வடிவம் பெற்றுள்ளன (விரிவான பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது). [[ஆனந்த விகடன்]] இதழில் இவர் எழுதிய ''துணையெழுத்து'', ''கதாவிலாசம்'', ''தேசாந்திரி'', ''கேள்விக்குறி'' ஆகிய தொடர்கள் தீவிர இலக்கிய வட்டாரம் தாண்டி பரவலான வாசகப் பரப்பை இவருக்கு ஈட்டித் தந்திருக்கின்றன. இவரது சிறுகதைகள் ஆங்கிலம், [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]], பிரான்சியம், கன்னடம், வங்காளம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன."அட்சரம்" என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார்<ref name="தன்னைப் பற்றி" />.
 
"இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ். ராமகிருஷ்ணன்" என்று [[ஜெயமோகன்|ஜெயமோகனும்]], "ஜெயகாந்தன் போல... எஸ். ராமகிருஷ்ணனும் தமிழில் ஒரு மிகப்பெரும் இயக்கம்" என்று மனுஷ்யபுத்திரனும் குறிப்பிட்டுள்ளனர்<ref name="ஜெமோ">{{cite web | url=http://www.jeyamohan.in/24052#.VdjU5PmqoV4 | title=இலக்கியத்தை வாழ்நாள் சேவையாக | accessdate=ஆகத்து 23, 2015 | author=ஜெயமோகன்}}</ref><ref name="மனுஷ்யபுத்திரன்">{{cite web | url=http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ | title=எஸ்.ரா ஒரு இயக்கம் | accessdate=ஆகத்து 23, 2015 | author=மனுஷ்யபுத்திரன் | archive-date=2015-06-25 | archive-url=https://web.archive.org/web/20150625070407/http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ | dead-url=dead }}</ref>. புத்தாயிரத்தின் இலக்கியம் - இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்து ஆண்டுகளில் தமிழ் நாவல்களின் போக்கு பற்றி மதிப்பிடுகையில் [[ந. முருகேச பாண்டியன்]] "எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி, யாமம் ஆகிய இருநாவல்களிலும் கதைசொல்லலில் தொடர்ச்சியறு தன்மை நேர்த்தியுடன் வெளிப்பட்டுள்ளது" என்று கருத்துரைத்துள்ளார்<ref name="ந.மு.பா">{{cite web | url=http://www.kalachuvadu.com/issue-121/page67.asp | title=நெடுங்குருதி, யாமம் பற்றி ந.முருகேச பாண்டியன்| publisher=காலச்சுவடு | work=இதழ் 121 | accessdate=ஆகத்து 23, 2015 | pages=பக்.67}}</ref>.
 
==விருதுகள்==
வாழ்நாள் சாதனையைப் பாராட்டும் முகமாகக் கனடியத் [[தமிழ் இலக்கியத் தோட்டம்]] வழங்கும் 2011ஆம் ஆண்டுக்கான [[இயல் விருது]] எஸ். ராமகிருஷ்ணனுக்கு சூன் 16, 2012 அன்று ரொறொன்ரோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது<ref name="இயல்">{{cite web | url=http://tamilliterarygarden.com/awards/rama | title=தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2011க்கான விருதுகளைப் பெற்றவர்கள் | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>. இதே தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பு 2007இல் புனைவு இலக்கியத்திற்கான விருதை எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் புதினத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது<ref name="யாமம் 2007">{{cite web | url=http://puthu.thinnai.com/?p=27916 | title=யாமத்துக்கு 2007-இல் சிறந்த நாவல் விருது | publisher=திண்ணை | work=நாவல்- விருதுகளும் பரிசுகளும் | date=ஆகத்து 16, 2015 | accessdate=ஆகத்து 23, 2015 | author=என்.செல்வராஜ்}}</ref><ref name="யாமம் 2007 (2)">{{cite web | url=http://tamilliterarygarden.com/awards/lakshmi | title=தமிழியலக்கியத் தோட்டத்தின் 2007க்கான புனைவு இலக்கிய விருது | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>. சாம்சங் இந்தியா நிறுவனமும் [[சாகித்திய அகாதமி|சாகித்திய அகாதமியும்]] இணைந்து ஆண்டுக்கு 8 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் பங்களிப்பைச் செய்தவர்களுக்கு தாகூர் இலக்கிய விருதினை 2009ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கி வந்தன. 2010ஆம் ஆண்டு தமிழுக்கான தாகூர் இலக்கிய விருது ''யாமம்'' புதினத்துக்காக எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது<ref name="தாகூர் விருது">{{cite web | url=http://www.samsung.com/in/news/local/samsung-felicitates-the-winners-of-tagore-literature-awards-2010 | title=2010க்கான தாகூர் இலக்கிய விருதுகள் | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>. பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் நெடுங்குருதி புதினத்துக்கு 2003ஆம் ஆண்டுக்கான ஞானவாணி விருதினை வழங்கியது<ref name="ஞானவாணி">{{cite web | url=http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80502254&edition_id=20050225&format=html | title=நெடுங்குருதிக்கு ஞானவாணி | publisher=திண்ணை | date=பிப்ரவரி 25, 2005 | accessdate=ஆகத்து 23, 2015 | archive-date=2016-03-06 | archive-url=https://web.archive.org/web/20160306041140/http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80502254&edition_id=20050225&format=html | dead-url=dead }}</ref>. இவர் எழுதிய ''அரவான்'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவர் பெற்றுள்ள பிற விருதுகளாவன:
* தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது [[2001]]
* ஈரோடு சிகேகே அறக்கட்டளை வழங்கிய சிகேகே இலக்கிய விருது [[2008]]<ref name="சிகெகெ விருது">{{cite web | url=http://www.jeyamohan.in/520#.VdjMNPmqoV4 | title=எஸ்.ராவுக்கு சி.கெ.கெ விருது | publisher=ஜெயமோகன் | accessdate=ஆகத்து 23, 2015}}</ref>
வரிசை 228:
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.sramakrishnan.com/?page_id=63 எஸ். ராமகிருஷ்ணனின் இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150926190001/http://www.sramakrishnan.com/?page_id=63 |date=2015-09-26 }}
* [http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ மனுஷ்யபுத்திரன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20150625070407/http://www.manushyaputhiran.com/articles/s-ramakrishnan/ |date=2015-06-25 }} "எஸ்.ரா ஒரு மிகப்பெரிய இயக்கம்"
* [http://www.openreadingroom.com/?cat=390 Openreadingroom] 'ஓபன்ரீடிங்ரூம்' தளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள்
* [http://azhiyasudargal.blogspot.in/search/label/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D அழியாச் சுடர்கள்] 'அழியாச் சுடர்கள்' தளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள்
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது