காட்சிக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
[[படிமம்:Arcunan Thapas-1.jpg|thumb|200px|காட்சிக் கலைகளுள் ஒன்றான சிற்பக்கலை. தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்துச் சிற்பங்களுள் ஒன்று]]
[[படிமம்:Chinesischer Maler des 12. Jahrhunderts (II) 001.jpg|thumb|200px|காட்சிக் கலைகளுள் ஒன்றான ஓவியக்கலை. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனத்து ஓவியம்.]]
'''காட்சிக் கலை''' (Visual arts) என்பது காட்சி அம்சத்துக்கு முதன்மை கொடுக்கும் கலை வடிவத்தைக் குறிக்கும். [[வரைதல்]], [[ஓவியம்]], [[சிற்பம்]], [[வடிவமைப்பு]], [[கைப்பணி]], நவீன காட்சிக் கலைகள் ([[ஒளிப்படம்]], [[நிகழ்படம்]], [[திரைப்படம்]]), [[கட்டிடக்கலை]] என்பன காட்சிக் கலைகளுக்கு எடுத்துக்காட்டுகள். நிகழ்த்து கலை, கருத்துருசார் கலை, நெசவுக் கலை போன்ற பல்வேறு பிற கலைத்துறைகளும், பிற அம்சங்களுடன் சேர்த்துக் காட்சி அம்சங்களையும் கொண்டிருப்பதனால், இந்த வரைவிலக்கணத்தை இறுக்கமாக எடுத்துக்கொள்ள முடியாது. காட்சிக் கலைகளுள், தொழிற்றுறை வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு, உள்ளக வடிவமைப்பு, அலங்கரிப்புக் கலை போன்ற பயன்படு கலைகளும் அடங்குகின்றன.<ref>{{cite web |url=http://www.georgebrown.ca/centres/AD/index.aspx |title=Centre for Arts and Design in Toronto, Canada |publisher=Georgebrown.ca |date=2011-02-15 |accessdate=2011-10-30 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20111028075227/http://www.georgebrown.ca/centres/AD/index.aspx |archivedate=28 October 2011}}</ref><ref>[http://www.buzzle.com/articles/different-forms-of-art.html ''Different Forms of Art – Applied Art''] {{Webarchive|url=https://web.archive.org/web/20170623143359/http://www.buzzle.com/articles/different-forms-of-art.html |date=2017-06-23 }}. Buzzle.com. Retrieved 11 December 2010.</ref>
 
மேலே குறிப்பிட்டபடி, காட்சிக் கலை என்பது தற்காலத்தில் [[நுண்கலை]]களையும், அதனுடன் சேர்த்து, பயன்படு கலைகள் போன்றவற்றையும் உள்ளடக்கினாலும், எல்லாக் காலத்திலுமே இதே நிலை இருந்ததில்லை. 20 நூற்றாண்டுத் தொடக்கத்தின் [[கலை கைவினை இயக்கம்|கலை கைவினை இயக்கக்]] காலத்துக்கு முன், [[பிரித்தானியா]]விலும் மேற்குலகின் பிற இடங்களிலும், கலைஞன் என்னும் சொல் ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகளில் ஈடுபடுபவர்களை மட்டுமே குறித்தது. இது கைவினையையோ அல்லது பயன்படு கலைகளையோ குறிக்கவில்லை. நாட்டார் கலை வடிவங்களையும், உயர் கலை வடிவங்களையும் ஒரு சேர மதித்த "கலை கைவினை இயக்கக்" கலைஞர்கள் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டையும் வலியுறுத்தத் தவறவில்லை. அக்காலக் கலைப் பள்ளிகளும், இரண்டையும் வேறுவேறாக நோக்கியதுடன், கைவினைஞர்கள் கலைத்தொழில் செய்பவர்களாகக் கொள்ளமுடியாது என்னும் கொள்கையைக் கொண்டிருந்தன. எனவே கைவினை, பயன்படு கலைகள் போன்றவை கலை என்ற வரம்புக்குள்ளேயே வராதபோது காட்சிக் கலைகள் என்ற வகைப்பாட்டுக்குள் இருந்திருக்க முடியாது.<ref>[http://wwar.com/masters/movements/arts_and_crafts_movement.html Art History: Arts and Crafts Movement: (1861–1900). From World Wide Arts Resources] {{Webarchive|url=http://arquivo.pt/wayback/20091013011648/http://wwar.com/masters/movements/arts_and_crafts_movement.html |date=13 October 2009 }}. Retrieved 24 October 2009.</ref>
"https://ta.wikipedia.org/wiki/காட்சிக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது