ஜுராசிக் வேர்ல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
MS2P (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 69:
விரைவில், அவ்விலங்கு தப்பிவிட்டதாக எண்ணி ஓவனும் இன்னும் இருவரும் அதன் இருப்பிடத்துக்குள் நுழைகின்றனர். தன்னையும் தன் [[அகச்சிகப்பு அலைமாலை|வெப்ப அலைமாலையையும்]] [[உருமறைப்பு|உருமறைத்துக் கொள்ளும்]] அவ்விலங்கு திடீரென வெளிவந்து ஓவனோடு இருந்தவர்களை இரையாக்கிப் பின் தீவின் உட்பகுதிக்குத் தப்பிச்செல்கிறது. அதைக் கொல்லும்படி ஓவன் வலியுறுத்துகிறார். தன் நிறுவனத்தின் முதலீட்டைக் காக்க விரும்பும் மஸ்ரானியோ அதை பிடிக்க [[உயிர்க்கொல்லியல்லாத ஆயுதங்கள்|உயிர்க்கொல்லியல்லாத ஆயுதமேந்திய]] [[தனியார் போர்ப்படை நிறுவனம்|சிறப்புப் படையினரை]] அனுப்புகிறார். அவர்களுள் பலரை இன்டாமினஸ் கொல்கிறது. இதனால் தீவின் வடபகுதியிலுள்ள மக்கள் வெளியேறும்படி கிளேர் ஆணையிடுகிறார்.
 
ஸேக்-கும் கிரே-யும் சுழல்கோள ஊர்தியொன்றில் (gyrosphere) பூங்காவைச் சுற்றிவருகையில் ஒரு தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைகின்றனர். அங்கு வரும் இன்டாமினஸ் அவ்வூர்தியை அழிக்கிறது. இருவரும் தப்புகையில் முதலாம் ''ஜுராசிக் பார்க்''கின் பார்வையாளர் மைய இடிபாடுகளைக் காண்கின்றனர். அங்குள்ள ஒரு 1992 [[ஜீப் ரேங்ளர்|ஜீப் ரேங்ள]]<nowiki/>ரைப் பழுதுபார்த்து அதிலேறி புதிய பூங்காவின் ஓய்வகத்துக்குத் திரும்புகின்றனர். அச்சமயம்  அவர்களைத் தேடும் கிளேரும் ஓவனும் இன்டாமினஸைக் கண்டு மயிரிழையில் தப்புகின்றனர். மஸ்ரானியும் இரு படைவீரர்களும் [[உலங்கு வானூர்தி|சுழலிறகி]]யிலிருந்து இன்டாமினஸை வேட்டையாட முற்படுகின்றனர். ஆனால் அவ்விலங்கு துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பிச்செல்கையில் பூங்காவின் பெரும்பறவைக்கூண்டில் மோதி '''[[டெரெசார்]]''' வகையைச் சேர்ந்த '''[[டெரெனெடான்]]''', '''[[டைமார்ஃபோடான்]]''' ஆகிய பழங்காலப் பறவைக் கூட்டத்தை விடுவித்துவிடுகிறது. அவற்றால் ஏற்படும் விபத்தில் மஸ்ரானி இரு வீரர்களுடன் உயிரிழக்கிறார்.<ref name="May9" /> பின் இவை ஓய்வகப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்துகின்றன. இறுதியாக இவற்றைப் படைவீரர்கள் கொல்கின்றனர்.
 
ஒருவழியாக இரு சிறார்களும் ஓவனையும் கிளேரையும் ஓய்வகத்தில் சந்திக்கின்றனர். இதன்பின் கட்டுப்பாட்டைத் கையிலெடுக்கும் ஹோஸ்கின்ஸ், ராப்டர்களைக் கொண்டு இன்டாமினஸைப் பின்தொடர ஆணையிடுகிறார். வேறுவழியின்றி இணங்கும் ஓவன், ராப்டர்களை விடுவிக்கிறார். இன்டாமினஸைக் கண்டறியும் அத் தொன்மாக்கள், அதனுடன் சமிக்ஞைகளின் வழியே தொடர்புகொள்கின்றன. இன்டாமினஸின் மரபணுவில் ராப்டர் மரபணுக்கூறுகளும் உள்ளதால், ராப்டர் குழுவின் தலைமைப் பொறுப்பு ([[ஆல்ஃபா (அறவியல்)|ஆல்ஃபா]]) தன்னிடமிருந்து இன்டாமினஸுக்குக் கைமாறிவிட்டதை ஓவன் உணர்கிறார். துருப்புகளின் துப்பாக்கிச்சூட்டிலிருந்து இன்டாமினஸ் தப்பிச்செல்கிறது. பெரும்பாலான வீரர்களை ராப்டர்கள் கொல்கின்றன. இதில் சார்லியும் இறக்கிறது. ஹென்றி வூ-வின் ஆராய்ச்சியைக் காக்கும் நோக்கில் ஹோஸ்கின்ஸ் அவரைத் தலைநிலத்துக்குச் சில தொன்மா முளையங்களுடன் அனுப்பிவைக்கிறார். மீதமுள்ள முளையங்களைச் சேமித்துவைக்கையில் அவரை ஓவன், கிளேர், ஸேக், கிரே ஆகியோர் சந்திக்கின்றனர். இன்டாமினஸைப் போலவே பிற கலப்பினத் தொன்மாக்களை உருவாக்கி ஆயுதங்களாகப் பயன்படுத்த எண்ணுகிறார் ஹோஸ்கின்ஸ். திடீரென அங்கு வரும் டெல்டா அவரைக் கொல்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஜுராசிக்_வேர்ல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது