நளினி அம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 33:
== இளமையும் கல்வியும் ==
நளினி அம்பாடி [[கேரளம்|கேரளத்தைச்]] சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை [[ஊட்டி]]யிலுள்ள [[லாரன்ஸ் பள்ளி]]யில் படித்தார். பின்னர் [[தில்லி]]யின் சிறீராம் சீமாட்டி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று ஐக்கிய அமெரிக்கா சென்றார். அங்கு வர்ஜீனியாவின் வில்லியம் & மேரி கல்லூரியில் உளவியலில் முதுகலை (எம்.ஏ) பட்டம் பெற்றார். [[சமூக உளவியல்|சமூக உளவியலில்]] ஆய்வு செய்து [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்]] 1991இல் முனைவர் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இவருடைய முனைவர் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்த இராபர்ட் ரோசன்தாலுடன் மெல்லிய துண்டு முடிவுகள் என்ற உளவியல் நெறிமுறையில் ஆய்வுகள் மேற்கொண்டார்.<ref name="Thin slices of expressive behavior as predictors of interpersonal consequences: A meta-analysis"/><ref>{{cite web|url=http://blogs.scientificamerican.com/psysociety/2013/10/29/nalini-ambady/|title=Rest In Peace, Nalini Ambady.|last=Tannenbaum|first=Melanie|date=|website=|publisher=Scientific American|url-status=live|archive-url=|archive-date=|access-date=30 October 2013}}</ref>
 
==கல்விப் பணி==
[[மாசச்சூசெட்ஸ்]] மாநிலத்தில் ஆர்வர்டு பல்கலைக்கழகம், புனித சிலுவை கல்லூரி மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி உள்ளார். 2011இல் கலிபோர்னியாவின் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மாறினார்.<ref name="CV" />
 
நளினி அம்பாடி உள்ளுணர்வுகள் குறித்து சிறப்புக் கல்வி பெற்றார். அவரது ஆய்வு மனிதர்கள் புதிய மனிதர்கள், நிகழ்வுகள் குறித்து சொற்கள் இல்லாமலே குறிப்புகளை உணர்வதாக கண்டறிந்தது. பார்த்த கணத்திலே உணரப்படும் முடிவு பலநாட்கள் பழகிய பின்னர் பெறப்படும் முடிவினை ஒத்தும் சரியானதாகவும் இருந்தது.<ref name="Fox">{{cite news|url=https://www.nytimes.com/2013/11/05/science/nalini-ambady-psychologist-of-intuition-is-dead-at-54.html|title=Nalini Ambady, Psychologist of Intuition, Is Dead at 54|last=Fox|first=Margalit|date=4 November 2013|newspaper=The New York Times|accessdate=12 November 2013}}</ref> அம்பாடியும் அவரது வழிகாட்டி ரோசன்தாலும் இந்த உடனடி சொல்லற்ற குறிப்புகளின் உணர்விற்கு "மெல்லிய-துண்டுகள்" என்ற கலைச்சொல்லை உருவாக்கினர். இதனை, எழுத்தாளர் [[மால்கம் கிளாட்வெல்]] தமது ''பிளிங்க்: தி பவர் ஆப் திங்கிங் விதவுட் திங்கிங்'' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
=== SPARQ மையம் நிறுவுதல் ===
இசுட்டான்போர்டு பல்கலையில் பணியாற்றுகையில் அம்பாடி ''நிகழ் உலக வினாக்களுக்கு சமூக உளவியலின் விடைகள் மையம்'' (Center for Social Psychological Answers to Real-World Questions) SPARQ மையத்தை நிறுவலானார். இந்த மையம் துவக்கத்தில் சமூக உளவியலின் முன்னோடியாக அறியப்படும் [[கர்ட் லெவின்]] நினைவாக லெவின் மையம் என அழைக்கப்பட்டது. இதன் கட்டமைப்பின் போது அம்பாடிக்கு இரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும் தமது நோயை பொருட்படுத்தாது இதனை நிறுவிட பெரும் முயற்சிகள் எடுத்தார். ஆயினும் இது அவரது மறைவிற்குப் பிறகே அலுவல்முறையாக 2014இல் திறக்கப்பட்டது.<ref>{{Cite journal|last=Conner|first=Alana C.|date=2014-02-28|title=Stanford SPARQ Sparks Change|url=https://www.psychologicalscience.org/observer/stanford-sparq-ignites-change|journal=APS Observer|language=en-US|volume=27|issue=3}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நளினி_அம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது