மாரடைப்பிற்கு பிந்தைய சிக்கல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி →‎top
 
வரிசை 7:
4 முதல் 24 மணிகளில் [[கூழ்த்தல் நசிவு]] (Coagulative necrosis) துவங்குவது கண்டறியப்பட்டுள்ளது<ref>{{Citation|last=Adigun|first=Rotimi|title=Necrosis, Cell (Liquefactive, Coagulative, Caseous, Fat, Fibrinoid, and Gangrenous)|date=2018|url=https://www.ncbi.nlm.nih.gov/books/NBK430935/|work=StatPearls|publisher=StatPearls Publishing|pmid=28613685|access-date=2018-11-03|last2=Bhimji|first2=Steve S.}}</ref> சோதனையில் கூழ்த்தல் நசிவு இறந்த திசுக்கள் கரும் வண்ணமாற்றமடைந்திருப்பதைக் காணலாம். இந்தக் கட்டத்தில் மிக வழமையான சிக்கல் [[இதய இலயமின்மை]]களாகும்.
 
நாள் 1 முதல் 7 வரை அழற்சி அறிகுறிகளைக் காணலாம். முதல் மூன்று நாட்கள் “கடிய அழற்சி”யைக் காணலாம். நியூட்ரோஃபில் வெள்ளணுக்கருக்கள் குருதியூட்டக்குறை திசுக்களை படையெடுக்கின்றன. இந்தக் கட்டத்தில் முதன்மையான சிக்கல் நார்ச்சத்து [[இதயவுறை அழற்சி]] ஆகும். குறிப்பாக கீழறை சுவர்தாண்டிய சேதத்தில் இதயத்தின் மூன்றடுக்குகளும் (இதயவறை மேற்சவ்வு, இதயத்தசை,இதயவறை அகச்சவ்வு) பாதிக்கப்படுவதால் இதயவுறை அழற்சி ஏற்படுகிறது.இதனால் வீக்கம் ஏற்பட்டு இதயம் [[இதய உறை]]யுடன் உரசுகிறது. நான்காம் நாள் முதல் 7ஆம் நாட்களில் “நாட்பட்ட அழற்சி” ஏற்படுகிறது. நுண்ணோக்கி ஆய்வில் [[பெருவிழுங்கி|இரத்த விழுங்கணுக்கள்]] திசுவை ஆக்கிரமிப்பதைக் காணலாம். இந்த விழுங்கணுக்களின் பணி இறந்த தசைச்செல்களை நீக்குவதாகும். ஆனால், இவ்வாறு இறந்த திசுக்கள் நீக்கப்படுவதால் தசை வலுவிழக்கிறது. இந்த வலுவிழப்பினால் கீழறை சுவருடைதல், கீழறைகளிடையேயுள்ள சுவர் உடைதல், தசை உடைதல் போன்றவை நேரிடுகிறது.
 
வாரங்கள் 1 முதல் 3 வரை மிகுதியான குருதிநுண்குழல்களையும் நார்முன்செல் உட்புகுதலையும் நுண்ணோக்கியில் காணலாம். இழந்த இதயத்தசையணுக்களை நார்முன்செல் அணுக்கள் கொலஜன் 1 வகையாக மாற்றி புதுவளர் சிறுமணித்திசுக்கு வித்திடுகிறது. பல வாரங்களுக்குப் பிறகு இழைமப் பெருக்கம் ஏற்பட்டு கொலஜன் உருவாகிறது. இவ்வாறு இதயத்தசைக்கு மாறாக உருவான கொலஜன் இதயத்தசை போல வலுவானதோ உடன்படுதன்மை கொண்டதோ அன்று. இந்த சமநிலையின்மை காரணமாக கீழறை விரிவடைதல் உண்டாகிறது. இதன் விளைவான இரத்தத் தேக்கத்தால் சுவரில் இரத்த உறைகட்டி ஏற்படுகிறது. இந்த கட்டத்தில் டிரெசுலர் நோய்த்தொகுதி உண்டாகிறது.<ref> Leonard S. Lilly. Pathophysiology Of Heart Disease : a Collaborative Project of Medical Students and Faculty. Philadelphia :Lippincott Williams & Wilkins, 2003.</ref>
"https://ta.wikipedia.org/wiki/மாரடைப்பிற்கு_பிந்தைய_சிக்கல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது