கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
→‎"கறி" சொல் பயன்பாடு: மிளகு எனும் பொருளில்
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
 
== "கறி" சொல் பயன்பாடு ==
"கறி" எனும் தமிழ் சொல் ஆங்கிலத்தில் மட்டுமன்றி இன்று உலகளாவிய ரீதியில்அளவில் பல்வேறு மொழிகளிலும் பயன்படும் ஒரு சொல்லாகும்.
 
இந்த “கறி” எனும் உணவு பதார்த்தம் தமிழர்களின் அன்றாட உணவில் பிரதான இடம் வகிப்பதாகும். இந்த “கறி” அடுப்பில் வேகவைத்து (கறியாக சமைத்து) உணவுக்காக பெறப்படுபவற்றை குறிக்கிறது. இவ்வாறு கறியாக சமைத்து உண்ணும் உணவு வகைகளை இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுத்தலாம். ஒன்று சைவ உணவு. மற்றொன்று அசைவ உணவு. இதில் அசைவு உணவு என்பது மாமிச உணவு வகைகளை குறிக்கும். அதனை "மச்சக்கறி" என அழைக்கும் வழக்கும் உள்ளது. சைவ உணவு என்பது அசைவம் அல்லாத மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கும். இவ்வாறு மரம், செடி, கொடி போன்றவற்றில் இருந்து கறியாக சமைத்து சாப்பிடுவதற்கு பயன்படுபவற்றையே '''மரக்கறிகள்''' என அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ஒரு சமுதாயத்தினர் இந்த உணவை கறியமுது என்றே அழைக்கின்றனர். அதாவது அமுதத்தைப் போன்ற கறி என்பதாகும்.
 
== சங்க இலக்கியத்தில் மிளகைக் குறிப்பதற்குக் "கறி" சொல் பயன்பாடு ==
சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ''கறி ''[[மிளகு|மிளகைக்]] குறிக்கப் பயன்பட்டுள்ளது. ''மிளகு'' எனுஞ்சொல் நான்குமுறை மட்டுமே வந்துள்ளது.<ref>{{Cite web|url=https://sangamtranslationsbyvaidehi.com/|title=Sangam Poems Translated by Vaidehi|last=Vaidehi|website=Sangam Poems Translated by Vaidehi|language=en|access-date=2021-10-15}}</ref>
# சந்தன மரத்தில் படரும் மிளகுக்கொடி - கறி வளர் சாந்தம் – [[அகநானூறு]] 2-6
# மிளகு பரவியுள்ள மலை - கறி இவர் சிலம்பின் – அகநானூறு 112-14
# கிரேக்கர்கள் கப்பலில் பொன்னும் பொருளும் கொண்டுவந்து மிளகை வாங்கிச் செல்லுதல் - யவனர் தந்த வினை மாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகநானூறு 149-10
# முரட்டுக் குரலையுடைய வயதான மானொன்று மிளகுக் கொழுந்தைத் தின்ன விரும்பாமை - அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ – அகநானூறு 182-14
# பாறைமீது படர்ந்துள்ள மிளகுக்கொடி - துறுகல் நண்ணிய கறி இவர் படப்பை – அகநானூறு 272-10,
# மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் அடுக்கத்து – [[நற்றிணை]] 151-7
# வளர்ந்த மிளகுக்கொடியில் உறங்கும் [[கானாங்கோழி]] – வாரணம் முதிர் கறி யாப்பில் துஞ்சும் நாடன் – Natrinai 151-7, நற்றிணை 151-7
# மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் அடுக்கத்து – [[குறுந்தொகை]] 90-2
# மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் அடுக்கத்து – குறுந்தொகை 288-1
# மிளகு வளரும் மலைமேல் - கறி வளர் சிலம்பின் – [[ஐங்குறுநூறு]] 243-1
# மிளகு வளரும் மலையில் – கறிய கல் – ஐங்குறுநூறு 246-1
# மிளகு வளரும் மலையில் - கறி வளர் சிலம்பில் – [[கலித்தொகை]] 52-17
# மிளகொடு சமைத்த சோற்றுடன் ஊன் துவையல் - ஊன் துவை கறி சோறு உண்டு – [[புறநானூறு]] 14-14
# மிளகு வளரும் மலையில் - கறி வளர் அடுக்கத்து – புறநானூறு 168-2
# வீடுகளில் குவிந்திருக்கும் மிளகு - மனைக் குவைஇய கறி மூடையால் – புறநானூறு 343-3
# மலையிலுள்ள சந்தனமும் மிளகும் - சிலம்பின் கறியொடும், சாந்தொடும் – [[பரிபாடல்]] 16-2
# கொத்தாக இருக்கும் பச்சை மிளகுத் [[துணர்]] - காய்த்துணர்ப் பசுங்கறி – [[மலைபடுகடாம்]] 521
# கொடியில் காய்த்துத் தொங்கும் மிளகுத்துணர் - கறிக் கொடிக் கருந்துணர் – [[திருமுருகாற்றுப்படை]] 309
# [[பலா]] மரத்தில் படர்ந்திருக்கும் மிளகுக்கொடிகள் - பைங்கறி நிவந்த பலவின் – [[சிறுபாணாற்றுப்படை]] 43
# [[மாதுளை]] பிளந்து [[வெண்ணெய்]]யும் மிளகும் சேர்த்து - நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து – [[பெரும்பாணாற்றுப்படை]] 307
# [[இஞ்சி]], [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]], பச்சை மிளகும் இன்னபிறவும் - இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் – [[மதுரைக் காஞ்சி|மதுரைக்காஞ்சி]] 289
# மூடைமூடையாய் வந்திறங்கிய கருமிளகும் - காலின் வந்த கருங்கறி மூடையும் – [[பட்டினப் பாலை|பட்டினப்பாலை]] 186
 
== கறியின் வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது