பொரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
விரிவாக்கம்
 
வரிசை 11:
 
==தயாரிப்பு முறை==
செடியிலேயே நன்கு முற்றிய நெற்கதிர்களை நீரில் சில நிமிடங்கள் ஊறவைக்கப்படுகிறது. பிறகு நீரிலிருந்து எடுத்து 8-10 மணி நேரம் உலரவைக்கப்படுகிறது. அதன் பின்னர் 190-210°செ வெப்ப நிலையில் 40-45 நிமிடங்கள் சூடான மணலுடன் சீராக வறுக்கப்படுகிறது. இம்முறையில்நெல்லின் உள்ளே அடர்ந்த மாவுப்பொருள் உள்ளது. நீரின் [[கொதிநிலை]]க்கு மேலான வெப்பத்துக்கு சுடும்போது நெல்லின் உறுதியான புறப்பொருளுக்கு உள்ளே[[அழுத்தம்|உயர் அழுத்த]] [[நீராவி]] உருவாகிறது. கூடவே மாவுப்பொருளின் [[மூலக்கூறு|மூலக்கூறுகளும்]] உடைந்து நீரோடு வேதி இயக்கத்தில் உருகுகிறது. இந்நிலையில் நெல் பெரிதாகி,மணி வெடிக்கிறது. அப்போது உள்ளிருக்கும் மாவுப்பொருளும் [[புரதம்|புரதப்பொருளும்]] [[காற்று]] நிறைந்த நுரைக்[[கூழ்மம்|கூழ்மமாகி]] வெளிவருகிறது. வெளிவந்த கூழ்மம் அடுத்த விநாடி குளிர்ந்து திடமாகி மொறுமொறுப்பான மென்மையாகி, வெண்மையான பொரியாக மாறுகிறது. பின்னர் சலித்து மணலையும் உமியையும் நீக்கி பயன்பாட்டுக்கு வருகிறது. நவீன முறைகளில், மின்சமையற்கலங்களிலும் பொரிக்கப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பொரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது