துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
'''துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்''', [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] ஏழு அமீரகங்களுள் இரண்டாவது பெரிய அமீரகமான [[துபாய்|துபாயில்]] அமைந்துள்ள பன்னாட்டு [[வானூர்தி நிலையம்]] ஆகும். இது, [[மையக் கிழக்கு]]ப் பகுதியின் முக்கியமான வானூர்திப் போக்குவரத்து மையமாகவும் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் மையக் கிழக்கு, [[ஆப்பிரிக்கா]] ஆகிய பகுதிகளுக்கு வரும் பறப்புக்களினதும், இப் பகுதிகளிலிருந்து புறப்படும் பறப்புக்களினதும், மொத்த எண்ணிக்கையின் 34% துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பங்கு ஆகும்.
 
துபாயின் குடிசார் வானூர்திப் பயணத் துறையினால் இயக்கப்பட்டு வரும் இவ் வானூர்தி நிலையம், துபாய் அமீரகத்தின் பன்னாட்டு வானூர்தி நிறுவனங்களான "[[எமிரேட்ஸ் எயர்லைன்]]", "[[எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ]]", "[[ஃபிளைதுபாய்]]" போன்றவற்றின் இருப்பிடமாகவும் உள்ளது. அத்துடன் குவைத்திலிருந்து இயங்கும் "[[ஜசீரா எயர்வேய்ஸ்]]", "[[வத்தனியா எயர்வேய்ஸ்]]" போன்றவற்றின் துணை மையமாகவும் உள்ளது. "[[டால்ஃபின் எயர்]]", ""[[ஃபால்க்கன் எக்ஸ்பிரஸ் கார்கோ எயர்லைன்ஸ்]]", "[[அரியா எயர்]]" ஆகிய சிறிய விமான நிறுவனங்களும் இதனைத் தமது முதன்மையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. இவ் வானூர்தி நிலையத்தைத் துணை மையமாகக் கொண்ட பிற வானூர்தி நிறுவனங்களுள், "[[ராயல் ஜோர்தானியன்]]", "[[பிரிட்டிஷ் கல்ஃப் இண்டர் நஷனல் எயர்லைன்ஸ்]]", "[[ஈரான் அசெமான் எயர்லைன்ஸ்]]", "[[எயர்புளூ]]", "[[ஈரான் எயர்]]", "[[ஆப்பிரிக்கன் எக்ஸ்பிரஸ் எயர்வேய்ஸ்]]" என்பனவும் அடங்கும். ''[[சிங்கப்பூர் எயர்லைன்ஸ்]]", "[[யெமேனியா]]", "[[பிமான் பங்ளாதேஷ் எயர்லைன்ஸ்]]", "[[எயர் இந்தியா]]", "[[பாகிஸ்தான் இண்டர்நஷனல் எயர்லைன்ஸ்]]", "[[ஜுப்பா எயர்வேய்ஸ்]]" என்பவற்றை உள்ளடக்கிய பல நிறுவனங்கள் துபாயை இலக்கு நகரமாகக் கொண்டு இயங்குகின்றன. 2008 ஜூன் 8 ஆம் தேதி பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இங்கிருந்து 140 வானூர்தி நிறுவனங்கள், 260 இடங்களுக்கு ஒரு கிழமைக்கு 5,100 பறப்புக்களை இயக்கி வருகின்றன.
 
இவ் வானூர்தி நிலையத்தில் இருந்து, [[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]], [[தென் அமெரிக்கா]], [[கிழக்காசியா]], [[தென்கிழக்காசியா]], [[தெற்காசியா]], [[ஆஸ்திரலேசியா]], [[ஆப்பிரிக்கா]] ஆகிய பகுதிகளுக்குப் பறப்புக்கள் உள்ளன. இதற்குத் துணையாக [[அல் மக்தூம் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] என்ற பெயரில் புதிய வானூர்தி நிலையம் ஒன்று துபாயில் கட்டப்பட்டு வருகிறது. 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந் நிலையம் எதிர் காலத்தில் துபாய்க்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
 
 
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துபாய்_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது