வைகை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
Reference edited with ProveIt
 
வரிசை 2:
 
== வரலாறு ==
வைகை இதழின் இதழ் 1977 ஆகத்தில் வெளியானது. இதன் ஆசிரியராக ஆர். குமாரசாமி இருந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/159245-.html |title=வெங்கட் சாமிநாதன்: கலை நம்பிக்கையின் காந்த சக்தி |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-01-22}}</ref> அவரும் அவருக்குத் துணை சேர்ந்திருந்தவர்களும் சிற்றிதழான [[பிரக்ஞை (சிற்றிதழ்)|பிரக்ஞையை]] முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள். இந்த இதழ் அன்றைய [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழ் அளவில், நல்ல வெள்ளைத் தாளில் அச்சாகி வந்தது. முதல் ஆண்டு ஒவ்வொரு இதழும் 34 பக்கங்கள் ( அட்டை தனி ) சில சமயம் அதிகமாகவும் கொண்டிருந்தது. பின்னர், பக்கங்கள் குறைந்தும் கூடியும் வந்தன. ஒரு இதழ் பத்தே பக்கங்களுடன் இரண்டு கட்டுரைகள் மட்டும் கொண்டு வெளியாகியும் உள்ளது. இதற்கெல்லாம் எழுதுகிறவர்களையே இது குறை கூறியது.
 
முதல் இரண்டு இதழ்களில் வைகை கவிதைகள் வெளியிட்டது. பின்னர், 'கதைகள், கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா' என்று அறிவித்தது. சிந்தனைக் கட்டுரைகள், முக்கியமாகப் புத்தக விமர்சனங்கள் வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எதிர்பார்த்த தரத்துக்குக் கட்டுரைகள் வரவில்லை. ஆகவே, இதழ்கள் காலதாமதத்துடனேயே வெளியாயின.
"https://ta.wikipedia.org/wiki/வைகை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது