நீர்மூழ்கிக் கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
ஒரு சில மணி நேரம் மட்டுமே மூழ்கக்கூடிய மிகச்சிறிய கலங்களில் இருந்து, நீரின் அடியிலேயே 6 மாதங்கள் வரை தங்கி இருக்கவல்ல மிகப் பெரிய நீர்மூழ்கிக் கலங்கள் (உதாரணம்: [[ரஷ்யா]]வின் [[டைப்பூன் வகை நீர்மூழ்கிகள்]]) வரை பல்வேறு அளவுகளில் நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. நீர்மூழ்கிக் கப்பல்கள், மனிதர்கள் உயர் தொழில்நுட்ப உதவியின்றி மூழ்கக்கூடிய ஆழத்தை விட, பல நூறு மடங்கு ஆழத்தில் மூழ்கக் கூடியவை.
 
பல பெரிய நீர்மூழ்கிகப்பல்கள் உருளை வடிவிலான உடலையும், கூம்பு வடிவிலான முனைகளையும், கப்பலின் நடு உடலில் நெடுமட்டமாக உள்ள கட்டமைப்பில் தகவல்தொடர்பு கட்டுபாட்டு அறை மற்றும் [[பெரிஸ்கோப் கருவி]] ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இந்நெடுமட்ட கட்டமைப்பு துடுப்பு (fin) என்றும் அழைக்கப்படுகிறது. சூழலும் விசிறி வடிவிலான உந்துக்கருவி (அல்லது [[நீர்த்தாரை]]) மற்றும் பல்வேறு நீரியக்க கட்டுப்பாட்டு துடுப்புகள், சரளைகள்[[சரளை]]கள் ஆகியவை கப்பலின் கடையில் காணப்படுகின்றன. சிறிய, வெகு ஆழம் மூழ்கவல்ல, சிறப்பு நீர்மூழ்கிகள் குறிப்பிடத்தக்க வகையில் மேல்கூறிய வடிவங்களிலிருந்து மாறுபடுகின்றன.
 
== படைத்துறை பயன்பாடு ==
நீர்மூழ்கிக் கப்பல்கள் போரில், பகைவர் கப்பல்களை தாக்குதல், [[விமானந்தாங்கிக் கப்பல்]]களின் பாதுகாப்பு அரணாக விளங்குதல், முற்றுகையை முறியடித்தல், எறிகணை தளமாக செயல்படுதல், அணுகுண்டு தாக்குதல்தாக்குதலில் ஈடுபடுதல், நீரில் இருந்தபடியே நிலப்பகுதியை தாக்குதல் (உதாரணமாக வழிகாட்டப் பட்ட ஏவுகணை மூலம்), இரசியமாக சிறப்பு படைகளை முக்கிய பகுதிகளில் இறக்கி வியுகம் அமைத்தல் ஆகிய பல பணிகளை செய்ய வல்லவை.
 
[[Image:Typhoon3.jpg|thumb|300px|left| ரஷ்யாவை சார்ந்த டைபூன் வகை நீர்மூழ்கிக் கப்பல் உலகிலே பெரிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பல்]]
[[இரண்டாம் உலகப் போர்| இரண்டாம் உலகப் போரில்]] நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே பெரிதும் உபயோகப்படுத்தப் பட்டன. இக்கப்பல்களில், [[நீர்மூழ்கிக் குண்டு]]களும், மேல்தளத் [[துப்பாக்கி]]களும், போர்கருவிகளாக பயன்படுத்த பட்டன.
 
[[20ம் நூற்றாண்டு|20ஆம் நூற்றாண்டின்]] துவக்கத்தில் நீர்மூழ்கிக் கப்பல்கள் [[கடல் கண்ணிவெடிகளைகண்ணிவெடி]]களை பகைவர் [[கப்பல் போக்குவரத்து]] அதிகமாக இருக்கும் இடங்களில் பதிப்பதில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மேலும் பல இரகசிய நடவடிக்கைகளிலும், [[ஒற்றர்]]களை கொண்டு செல்லும் பணியிலும் பயன்படுத்தப்பட்டன. பகைவர் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில், நீர்மூழ்கிக் கப்பல்கள் சரக்கு கலமாகவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு பொருள்களை தருவிக்கும் கலமமாகவும் பயன்படுத்தப்பட்டன.
 
[[Image:U-47.jpg|thumb|300px|right| பிரபல ஜெர்மானிய கடல்படை தளபதி Günther Prien அவர்களின் U-47 வகை ஜெர்மானிய நீர்மூழ்கிகப்பல்.]]
வரிசை 24:
அறிவியல் முன்னேற்றங்களான [[நீர்மூழ்கி எறிகணை]]கள், [[ அணுக்கருத்திறன் பெற்ற எவுகணை]]கள் மற்றும் [[நீர்மூழ்கி வழிகாட்டப்பட்ட எவுகணை]]கள் ஆகியவை நீர்மூழ்கிக் கப்பல்கள் நவின இராணுவத்தின் இன்றியமையா அங்கமாக ஆக்கியிருக்கின்றன. தற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர்நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.
 
நீர்மூழ்கிக் கப்பல்களின் முக்கிய பலமாக கருதப்படுவது அவை நீண்ட கால அளவு பகைவரறியாமல் நீருள் மூழ்கியிருக்கும்/பயணப்படும் திறனே. ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்கடியே இயக்கப்படும்போது ஒலி பெரும் எழுப்பினமையால் அதனை பகைவர் கண்டுபிடிப்பது எளிதானதானதுஎளிதாக அமைந்தது. நீர் சிறந்த ஒலி கடத்தி; வெகு தொலைவில் இருந்தே ஆரம்பகால நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணிப்பது சாத்தியமானது. தற்காலத்தைய புதுமையான நீர்மூழ்கிக் கப்பல்கள் பல இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப் படுவதால், மேம்பட்ட உந்துங்கருவிகள் வடிவமைப்பு, தரமுயர்த்தப்பட்ட ஒலி காப்பு அமைப்புகள், மற்றும் மிகக்குறைவான ஒலி எழுப்பும் சிறப்பான இயந்திரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன. இதன் காரணமாக இந்நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்கடியே இயக்கப்படும்போது அதனை பகைவர் கண்டுபிடிப்பது கடினம். இந்நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்க மிகச்சிறந்த தொழில்நுட்பம் தேவையாகும்.
 
[[ ஊடொலிக் கும்பா]] என்னும் கருவி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்தை கண்டறிய பயன்படுத்தப் படுகிறது. இக்கருவி பொருள்களின் மீது மோதி திரும்பி வரும் ஒலி எதிரொலிகளை கணித்து அப்பொருளின் இருப்பிடம், திசைவேகம் ஆகியவற்றை அறிய வல்லது. இரண்டாம் உலகப் போருக்கு பின் இக்கருவி வான் போக்குவரத்திலும், நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தை கண்காணிப்பதிலும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீர்மூழ்கிக்_கப்பல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது