Daniel pandian
பாராட்டுக்கள்
தொகுடேனியல் பாண்டியன், தங்கள் பங்களிப்புகள் நன்று. தொடர்ந்து பங்களியுங்கள்.--சிவக்குமார் \பேச்சு 01:20, 29 ஜூலை 2008 (UTC)
நீங்கள் மிக அழகாக அரியானா கட்டுரையை வளர்த்தெடுத்துள்ளீர்கள். 2 கிலோ 'பைட் அளவாக இருந்த குறுங்கட்டுரையை நீங்கள் விரிவாக்கி 18 கிலோ 'பைட் கட்டுரையாக வளர்த்தெடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி. இயன்றபொழுதெல்லாம் பங்களிக்க வேண்டுகிறேன்.--செல்வா 23:19, 16 ஆகஸ்ட் 2008 (UTC)
- ஆம், நீங்கள் கூறுவதுபோல கட்டுரைகளை விரிவுபடுத்துவது நல்ல பணி. செய்திச் செறிவுடன், பயன்மிக்கக் குறிப்புகளைச் சேர்த்து நல்ல நடையில் விரிவாக்குவது நல்ல பணி. உங்கள் ஆர்வத்துக்கும் பங்களிப்புக்கும் மிக்க நன்றி. --செல்வா 19:08, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
- நீங்கள் என் பயனர் பக்கத்தில் விட்டிருந்த செய்தியைப் பார்த்தேன். மிக்க நன்றி டேனியல் பாண்டியன்.--செல்வா 21:48, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
டேனியல் பாண்டியன், நீங்கள் மிக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இக்கட்டுரையை பெரிதும் விரிவாக்கி முழுநீள கட்டுரையாக ஆக்கி உள்ளீர்கள். உங்களை எத்தனைப் பாராட்டினாலும் தகும். மிக்க நன்றி!! தட்பவெப்பநிலை வார்ப்புருவை ஓரளவுக்கு சரி செய்துள்ளேன். சரியாக உள்ளதா என்று பாருங்கள்.--செல்வா 20:25, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
- உங்கள் கம்போடியா கட்டுரை விரிவாக்கம் அருமை. இவ்வளவு பொறுமையாக முழு நீளக் கட்டுரையொன்றை ஆக்கியிருப்பது பாராட்டத்தக்கது. உங்கள் பணி மேலும் தொடரவேண்டும் என்பது எனது விருப்பம். மயூரநாதன் 04:00, 23 ஆகஸ்ட் 2008 (UTC)
டேனியல் பாண்டியன் உங்கள் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க முன்மொழிந்துள்ளேன். இங்கே பார்க்கவும். இதுவே முதன்முறையாக நான் முன்மொழிந்த சிறப்புக்கட்டுரை. வெற்றிபெற வாழ்த்துகள்! --செல்வா 16:33, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
- டானியல் பாண்டியன், நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகள் அனைத்துமே சிறப்புக் கட்டுரைகளாக்கத் தகுதியானவை. கடைசியாக நீங்கள் விரிவாக்கிய சிகாகோ] கட்டுரை சான்று. வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 01:47, 21 செப்டெம்பர் 2008 (UTC)
பாராட்டுகள்
தொகுடேனியல் பாண்டியன் நீங்கள் விரிவாக்கி சிறப்பு சேர்த்த கட்டுரைகள் யாவுமே மிகவும் அருமை. மிளகு, அசாம் முதலியவற்றை அண்மையில்தான் பார்த்தேன். தமிழ் மக்கள் நன்றியுடன் உங்கள் ஆக்கங்களைப் படித்துப் பயன் பெறுவர். மிக்க நன்றி. தொடர்ந்து பங்காற்றுங்கள்--செல்வா 16:03, 13 நவம்பர் 2008 (UTC)
பாராட்டுப் பதக்கம்
தொகு2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
தொகுவணக்கம் டானியல் பாண்டியன்.
பல நல்ல ஆழமான கட்டுரைகளை ஆக்கி தந்துள்ளீர்கள். நன்றி. நேரம் கிடைக்கும் பொழுது அவ்வாறு தொடந்தால் சிறப்பு.
நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் !
தொகுதானியல் பாண்டியன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்/நத்தார் வாழ்த்துகள் ! அன்புடன் --செல்வா 08:29, 25 டிசம்பர் 2008 (UTC)
முயற்சி
தொகுநீங்கள் //வேலைப்பளு மிக அதிகமாக இருப்பதால் தொடர்ச்சியாக பங்களிக்க முடியவில்லை. மீண்டும் பங்களிக்க முயற்சிக்கிறேன்.// என்று எழுதியிருப்பதில் "முயற்சிக்கிறேன்" என்னும் சொல்லாட்சியைத் தவிர்த்து முயல்கிறேன் அல்லது முயற்சி செய்கிறேன் என்று எழுதுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். முயல் - வினை, முயற்சி -பெயர்ச்சொல். முயற்சிக்கிறேன், தளர்ச்சிக்கிறேன், வளர்சிக்கிறேன் என்றெல்லாம் சொல்லாட்சிகள் இல்லை- அவை பிழையானவை. மிகப் பெரிய எழுத்தாளர்களும் செய்யும் தவறு இது. நம் மொழியை நாம் பிழையின்றி (கூடிய மட்டிலும்) எழுதுவது நல்லது. உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் தயங்காது எடுத்துக் கூறுங்கள். போதாக்குறைக்கு, ஒரு தற்கால அகராதி இதனை ஒரு சொல்லாகவும் கொடுத்து இழிவு செய்திருக்கின்றது! நன்றி. உங்கள் நீர்மூழ்கிக் கப்பல் கட்டுரை அருமை!.--செல்வா 21:49, 28 ஜனவரி 2009 (UTC)
பிழையை திருத்தியமைக்கு நன்றி செல்வா. பொறுத்தருள்க. என் தமிழ் இன்னும் மழலைதான்.--Daniel pandian 23:07, 28 ஜனவரி 2009 (UTC)
ஏவுகணை, எறிகணை, வழிகாட்டு ஏவுகணை, பீரங்கி
தொகு- ஏவுகணை என்பதற்கு missle என்பது சரி என்று கருதுகிறேன். rocket என்பதற்கு ராக்கெட் என்றே குறிப்பிடுவர் என நினைக்கிறேன். தமிழில் rocket என்பதற்கு ஏவுகணை என்ற சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.
- எறிகணை என்பது ஏவப்படும் பொருளையே (shell) குறிக்கிறது. எ.கா எறிகணை வீசப்பட்டது. ஆனால் Ballistic missle பொருந்தும் போல தெரிகிறது (a military siege engine for throwing stones). எறி ஏவுகணை ?? எறிகணைச் செலுத்தி ??
- cruise missle வழிகாட்டு ஏவுகணை எனலாம்
- பீரங்கி என்பது Artillay ஆகும். பீரங்கிக் குண்டை (shell) எறிகணை என்றும் கூறுவதுண்டு.
செல்வா, மலையேற செல்வதாக கூறி இருந்தார். விரைவில் பதில் கிடைக்காமல் போகலாம்.
--Natkeeran 21:32, 5 பெப்ரவரி 2009 (UTC)
விக்கிப்பீடியா பயிற்சி
தொகுவணக்கம் டானியல் பாண்டியன்: உங்களுக்கு நேரச் சிரமம் என்பது தெரியும். எனினும் சிக்காகோ, மற்றும் அண்டிய பகுதிகளில் தமிழ் விக்கிப்பிடியாவை அறுமுகப்படுத்த உங்களால் முடியுமா? ஆகக் கூடியது 2-3 மணித்தியாலங்கள். முடிந்தால் இங்கு விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி பதியவும். நன்றி. --Natkeeran 20:29, 11 பெப்ரவரி 2009 (UTC)
ஒவ்வொன்றாக மொழிபெயர்க்கிறீர்களா
தொகுஒவ்வொரு பட்டியலையும் ஒவ்வொன்றாக மொழி பெயர்க்கிறீர்களா? --Natkeeran 22:56, 20 பெப்ரவரி 2009 (UTC)
இல்லை நற்கீரன். நானே ஒரு நிரலை C++ மொழியில் எழுதியுள்ளேன். அதன் முலம் அதிகமாக உபயோகிக்கும் ஆங்கில வார்த்தைகளை, சொற்றொடர்களை, தமிழில் மொழி பெயர்க்க முடியும். எனது நிரலை மேலும் மேம்படுத்தும் வேலையிலும் ஈடுபடுகிறேன். --Daniel pandian 23:01, 20 பெப்ரவரி 2009 (UTC):-)
விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்
தொகு- விக்கிப்பீடியா:தானியங்கிகள்
- நீங்கள் கேட்ட கையேடு: விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்
- ஆங்கில விக்கியிலும் உண்டு.
- மேலே சொன்ன மாதிரி, பைத்தோன் script பயன்படுத்தினா இலகுவான இதைச் செய்யலாம்.
- மேலும் தகவல் தேவை என்றால் சொல்லுங்கள். --Natkeeran 02:30, 21 பெப்ரவரி 2009 (UTC)
நீங்கள் நாடுகளுக்கான எந்த தமிழ்ப் பெயர் பட்டியலை பயன்படுத்துகிறீர்கள் என்று அறியலாமா? ஏன் என்றால் ஸ்வீடன் என்பதலும் பாக்க சுவீடன் என்பது, மொரிஸ்சியஸ் என்று இல்லாமல் மொரிசியசு என்று சில மாற்றங்கள் உள்ளன. எந்தப் பட்டியல் என்றால் சீர்படுத்தி விடலாம். நன்றி. --Natkeeran 16:19, 21 பெப்ரவரி 2009 (UTC)
- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நாடுகள்/நாடுகளின் தமிழ்ப் பெயர்கள்
- நீங்கள் சொல்வது சரிதா. சற்று அவகாசம் தாருங்கள், நான் இவற்றை சரிபார்த்துக் கூறுகிறேன்.
--Natkeeran 18:25, 21 பெப்ரவரி 2009 (UTC)
தானியல் பாண்டியன் நீங்கள் மிக மிக அருமையாக சூரியன் கட்டுரையை விரிவாக்கியுள்ளீர்கள். என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். இப்படிப்பட்ட கட்டுரைகளே தமிழ் விக்கிப்பீடியாவை மிக முதன்மையான தமிழ் அறிவுக்களமாக திகழ வழிவகுக்கும். நீங்கள் ஆக்கும் ஒவ்வொரு கட்டுரையும் விரிவாகவும் நேர்த்தியாகவும் இருப்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக உள்ளது. நன்றிகள். --செல்வா 03:16, 20 ஏப்ரல் 2009 (UTC)
- நன்றி செல்வா. உங்கள் ஊக்கம் உற்சாகம் அளிக்கிறது. நன்றி.--Daniel pandian 13:34, 20 ஏப்ரல் 2009 (UTC)
மூளை தலைப்புகள் பட்டியல்
தொகுஉங்கள் கவனத்துக்கு: மூளை தலைப்புகள் பட்டியல் --Natkeeran 16:33, 1 ஜூலை 2009 (UTC)
மிக அருமையாக கட்டுரை எழுதியுள்ளீர்கள் தானியேல் பாண்டியன்! முதல் சில பத்திகளில் சிற்சில திருத்தங்கள் செய்துள்ளேன் (சொற்கள், உள்ளிணைப்புகள்). சரிபார்க்க வேண்டுகிறேன். தலையாய கட்டுரைத் தலைப்பில் மிக அருமையாக துவக்கி உள்ளீர்கள். பாராட்டுகள் :)--செல்வா 19:35, 1 ஜூலை 2009 (UTC)
- டேனியல் மூளை கட்டுரை மிக அருமையான வளர்கிறது. வாழ்த்துக்கள் :)--கார்த்திக் 21:00, 1 ஜூலை 2009 (UTC)
Nice work--Ginger 22:05, 1 ஜூலை 2009 (UTC)
நன்றி நண்பர்களே. நாம் அனைவருமே மேலும் பல அறிவியல் கட்டுரைகளை எழுத வேண்டும். --Daniel pandian 16:51, 2 ஜூலை 2009 (UTC)
- மிக மிக அருமையான கட்டுரை, தானியல் பாண்டியன். செல்வா சொன்னது போலத் தலையாய கட்டுரையும் கூட. தேவைப்படும் இடங்களில் சிறு உரை திருத்தங்கள் செய்துவிட்டு முதல் பக்கத்தில் கட்டாயம் இணைக்க வேண்டிய கட்டுரை. -- சுந்தர் \பேச்சு 17:04, 2 ஜூலை 2009 (UTC)
:)
தொகுதானியேல்!! இந்த வாரம் திருநெல்வேலி வாரம் போலும். முதல் பக்க கட்டுரைகள் இரண்டுமே திருநெல்வேலிக்காரர்கலால் எழுதப்பட்டது. கவனித்தீர்களா?? --arafat 07:39, 7 ஜூலை 2009 (UTC)
- அடடா, இப்படி ஒரு ஒத்துமையா :) தமிழ் விக்கியில் புதிய விரிவான நல்ல கட்டுரைகளைக் கண்டிப்பாகத் தொடர்ந்து முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவோம். மனித மூளை கட்டுரை மிக அருமையாக உள்ளது. நன்றி--ரவி 08:47, 7 ஜூலை 2009 (UTC)
- :) நீங்கள் சொன்னபின் தான் கவனித்தேன். உங்கள் கட்டுரை மிக அருமை. உங்கள் பக்கத்தில் குறிப்பு இட நினைத்திருந்தேன். இன்னும் பல நல்ல கட்டுரைகளை எழுதுவோம். --Daniel pandian 13:18, 7 ஜூலை 2009 (UTC)
- கண்டிப்பாக. ஒரு பெரிய List-டே இருக்கின்றது. எழுத்துப்பிழைதான் கொஞ்சம் அதிகம் :(--arafat 14:38, 7 ஜூலை 2009 (UTC)
இந்தக் கட்டுரைகளை விரிவாக்கி மேம்படுத்தத் தரவும், நன்றி
தொகு- மனித உரிமைகள்
- கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்
- நகர்வு சுதந்திரம்
- ஊடகச் சுதந்திரம்
- கூடல் சுதந்திரம்
- அகதி
--Natkeeran 00:50, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
நீர் மின் ஆற்றல் கட்டுரை
தொகுதானியேல் பாண்டியன், நீங்கள் மீண்டுமொரு மிக அருமையான கட்டுரை எழுதியதற்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள். நான் சில நாட்கள் விடுப்பில் இருந்ததால் இன்றுதான் பார்க்க நேர்ந்தது. --செல்வா 16:00, 13 செப்டெம்பர் 2009 (UTC)
பங்களிப்பாளர் அறிமுகம்
தொகுவணக்கம் தானியல், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:49, 5 அக்டோபர் 2009 (UTC)
தமிழ்99
தொகுவணக்கம் தானியல் பாண்டியன். தாங்கள் தமிழ்த் தட்டச்சுக்குப் புதியவர் என்றால் தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய பரிந்துரைக்கிறேன். நீண்ட கட்டுரைகளைக் கைவலி இன்றி விரைவாக எழுதிட இந்த முறை உதவும். முயன்று பாருங்கள். உதவிக்கு: தமிழ்99. நன்றி--ரவி 12:10, 5 அக்டோபர் 2009 (UTC)
வாழ்த்துகள்
தொகுவணக்கம் தானியல்பாண்டியன். அடுத்த இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். நன்றி--ரவி 08:23, 17 பெப்ரவரி 2010 (UTC)
சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 00:03, 19 பெப்ரவரி 2010 (UTC)
முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம்
தொகுமுதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். --செல்வா 00:35, 22 பெப்ரவரி 2010 (UTC)
- நன்றி செல்வா. --Daniel pandian 15:58, 22 பெப்ரவரி 2010 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுவணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)
- தக்க நேரத்தில் வந்து பார்வையிட்டு உதவுவதற்கு மிக்க நன்றி தானியேல் பாண்டியன்! உங்களை மீண்டும் இங்கு காணப்து மிக மகிழ்ச்சியாய் உள்ளது.--செல்வா 01:43, 18 மார்ச் 2010 (UTC)
கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.
தொகுவணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)
மீண்டும் வருக!
தொகுதானியேல் பாண்டியன், ஏப்பிரலில் இருந்து உங்களைக் காணவே இல்லை. வாருங்கள்! இப்பொழுது 25,000 கட்டுரைகளை எட்டியுள்ளோம். நம்புவீர்களோ மாட்டீர்களோ, நேற்றுதான் நல்லாக்கம் தந்டுகொண்டிருந்த உங்களையும் தெரன்சு, கோபி, சிவக்குமார், உமாபதி, கலாநிதி போன்ற பிறபல பயனர்களையும் நினைத்துக்கொண்டிருந்தேன். வியப்பு இன்று உங்கள் வருகை! --செல்வா 22:17, 6 அக்டோபர் 2010 (UTC)
- நன்றி செல்வா. உங்களை போன்ற பெரியோரின் இடைவிடா முயற்சியால்தான் இன்று நாம் இந்நிலையை எட்டியுள்ளோம். என்னால் முடிந்த அளவுக்கு பங்களிக்க விழைகிறேன். --Daniel pandian 15:12, 7 அக்டோபர் 2010 (UTC)
விக்கி மாரத்தான்
தொகுவிக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:26, 27 அக்டோபர் 2010 (UTC)
மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்
தொகுவணக்கம் தானியல். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:26, 2 மே 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சம்மு காசுமீர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 5, 2011 அன்று வெளியானது. |
உதவமுடியுமா?
தொகுதானியல் பாண்டியன், நலமா? உங்களை வெகுநாட்களாகக் காணோமே!! இப்பொழுது உதவி தேவைப்படுகின்றது.விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#Medicine project என்னும் குறிப்பைப் பார்க்கவும். இது மிகவும் பயனுடைய ஒரு திட்டம் போல் தெரிகின்றது. இதற்கு நீங்கள் இயலும்போது உதவமுடியுமா? நானும் பங்களிக்க ஆவலாக உள்ளேன். இப்பொழுது குறுந்தகடு திட்டம் நடக்கின்றது. இதனோடு இதிலும் இயலுமாறு பங்களிக்க முடியுமா என எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 21:06, 24 பெப்ரவரி 2012 (UTC)
தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:07, 24 சூன் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சம்மு காசுமீர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகத்து 30, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த ஆபிரகாம் பண்டிதர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் திசம்பர் 29, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
விக்கித் திட்டம் 100 அழைப்பு
தொகுவணக்கங்க. இம்மாதம் தமிழ் விக்கிப்பீடியர் கூடி ஒரே மாதத்தில் 100 பயனர்கள் 100 தொகுப்புகளைச் செய்யும் சாதனை முயற்சியில் இறங்கி உள்ளோம். நீங்களும் இணைந்து பங்களிக்க வேண்டுகிறேன். உங்கள் பெயர் பதிந்து வைத்தாலும் கூட அனைவருக்கும் உற்சாகம் தொற்றும். மீண்டும் உங்கள் முனைப்பான பங்களிப்புகளை எதிர்நோக்கி...--இரவி (பேச்சு) 15:24, 11 சனவரி 2015 (UTC)
கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு
தொகுஅன்புள்ள தானியல்,
உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.
2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.
இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:
தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.
நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:
இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.
வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.
2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.
அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.
இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.
ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.
இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.
வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.
இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.