தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
==வரலாறு==
[[சோழர்]] ஆட்சிக்காலத்தில் [[தஞ்சாவூர்]] ஓவியங்கள் தோற்றம் பெற்றன. 16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை, மராத்திய மன்னர்கள், தஞ்சாவூரின் ராஜூக்கள் சமுதாயத்தினர், [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] நாயக்கர்கள், [[திருச்சி]], மற்றும் [[மதுரை]] நாயுடுக்கள் ஆகிய ஆட்சியாளர்கள் தஞ்சை ஓவியங்களுக்கு ஆதரவு தந்தனர். எனவே அவை இக்காலங்களில் வளர்ந்து செழித்தோங்கியது. தஞ்சை ஓவியங்கள் அரண்மனைகளின் உட்பகுதிகளை அலங்கரித்தன.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்">{{cite web | url=http://www.craftclustersofindia.in/site/indexl.aspx?mu_id=3&Clid=679 | title=இந்தியர்களின் கைவினைத்தொழில் | publisher=தமிழ்நாடு- மதுரை சிறு தொழிற்சாலைகள் தயாரிப்பு மேம்பாட்டு அமைப்பு | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> பல நூற்றாண்டுகளாக இக் கலைப் பாணியைக் கால ஓட்டத்துக்குத் தக்கவாறு வளர்த்து வந்தவர்கள் தஞ்சாவூர், மதுரை நகரங்களைத் தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயக்கர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] குடியேறிய [[மூச்சிகள்]] (''moochys'') எனப்படும் ஓவியத் தொழில் புரியும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவார். இந்தப் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாகப் படைக்கப்பட்டன. இவர்களை அக்காலத்து அரசர்கள் ஆதரித்து வந்தனர். தஞ்சை மராட்டிய மன்னரான [[சரபோஜி மன்னன்|சரபோஜி]] கலைகளில் பெரும் பற்றுக் கொண்டவர். ஓவியர்களுக்குப் போதிய அளவு வாய்ப்புக்களை வழங்கி அவர்களை ஆதரித்து வந்தார்.மற்ற ஓவியப் பாணிகளைபோல இல்லாமல் தஞ்சாவூர் ஓவியப் பாணி ஓவியத்துடன் கைவினைக் கலையும் கலந்து ஒரு புதிய வடிவம் கொண்டதாக மலர்ந்தது. இவர் காலத்தில் தஞ்சாவூர் நிர்வாகம் முற்றாகவே ஆங்கிலேயர் வசம் சென்றிருந்தது. எனினும், சரபோஜி பெயரளவில் மன்னராக இருந்தார். இவரது அரண்மனையிலிருந்த ஓவியங்கள் மூலமாக அக்காலத்திய தஞ்சாவூர்ப் பாணிபற்றி அறிந்த ஆங்கிலேயர் பலர் அவற்றை வரைந்தவர்களை அணுகி ஓவியங்களை வரைந்து பெற்றுக்கொண்டனர். இக்காலத்திலேயே ஆங்கிலேயரின் விருப்பத்திற்கு ஏற்ப, மேற்கத்திய நுட்பங்களையும் கலந்து ஓவியங்கள் வரையப்பட்டன. நுட்பங்களில் மட்டுமன்றி, உள்ளடக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. பெரும்பாலும் கடவுளரையும், அரசர்களையும் அடிப்படையாகக் கொண்டு வரையும் பழக்கம் மாறி, சாதாரண மக்களின் வாழ்க்கையும் ஓவியங்களிலே இடம் பெறத்தொடங்கின. இன்று, இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. அந்த ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.<ref name="அரவக்கோன்"/>
 
இந்தியக்கலை மரபில் ஓவியக்கலை பல்லாயிரம் ஆண்டுகளாய் வளர்ந்து செழித்து வரும் சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டு கால ஓவியங்களையும், பின்னாளில் தீட்டப்பெற்ற பல்வேறு வகையான ஒவியங்களையும் ஒருங்கே கொண்டு திகழும் ஒரே கோயில் தஞ்சைப் பெரிய கோயிலாகும். இக்கோயிலில் வளர்ந்த இக்கலை பின்னாளில் தஞ்சைப்பாணி ஓவியம் என்னும் ஒரு புதிய ஓவிய மரபை உலகுக்குத் தந்தது. அதுவே தஞ்சாவூர் ஓவியம் என்று தற்போது வழங்கப்படுகிறது. <ref> ந.இராதா, தஞ்சை ஓவியம், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997 </ref>
வரிசை 23:
தொடக்க காலத்தில் இவ்வோவியங்களில் வண்ணங்கள் அதிகப் பரப்பில் பயன்படுத்தப்பட்டன.அவற்றில் வெளிறிய வண்ணக் கலவைகளுக்கும் இடம் இருந்தன. இதற்கான வண்ணங்கள் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டன. இதற்காக இலை, தழை, காய்கறி, சுண்ணாம்புக்கல், கடுக்காய், சங்கு, நவச்சாரம், மஞ்சள், போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.<ref name="அரவக்கோன்">{{cite web | url=http://tamilnenjamhifs.blogspot.in/2009/05/blog-post_16.html | title=தஞ்சாவூர் ஓவியங்கள் | work=அரவக்கோன் | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> இவற்றிலிருந்து தயாரிக்கப்படும் வண்ணங்கள் தான், காலத்தால் அழியாத ஓவியங்களாக இன்றளவும் கோலோச்சி நிற்கின்றன. இந்த வண்ணங்கள் ஓவியத்தில் தீட்டப்பட்ட பிறகு, வெளிப்புறக் கோடுகளுக்காக பொதுவாகக் கரும்பழுப்பு பயன்படுத்தப்படுகின்றது. சிவப்பு பின்னணி வண்ணத்திற்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், கரும்பச்சையும் பயன்படுத்தப்படுகின்றது. பெண் கடவுள்களுக்கு மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்பட்டாலும் கடவுள்களுக்கு வண்ணம் மாறுபடும்: கிருஷ்ணருக்கு நீலமும், நடராஜருக்கு வெள்ளையும் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்"/>
 
தஞ்சாவூர் ஓவியங்களின் தூண்கள், உடைகள், வில்வளைவு கைச்சிம்மாசனங்கள் ஆகியவை வெவ்வேறு வண்ணங்களிலுள்ள தங்க இலைகள் மற்றும் இரத்தினங்களை கொண்டு அழகுபடுத்தப்பட்டு செய்யப்படுகின்றன. படங்களில் பதிக்கப்படும் கற்களும் கையாலேயே செய்யப்பட்டுள்ளன. வெறும் ரசக் கண்ணாடியை, வண்ணம் ஏற்றிய கற்களாக மாற்றப்படுகிறது. இதை, தேய்ப்புக்கல் என்கின்றனர்.<ref name="ஆர்.ரங்கராஜ் பாண்டே">{{cite web | url=http://www.dinamalar.com/News_Detail.asp?Id=93559 | title=காலத்தால் அழியாத தஞ்சாவூர் ஓவியங்கள் | publisher=தினமலர் | work=ஆர்.ரங்கராஜ் பாண்டே | date=செப்டம்பர் 26,2010 | accessdate=அக்டோபர் 23, 2012}}</ref> பின்னர், அவை ஆடம்பரம் மிகுந்த, காண்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிக அளவில் தங்க வேலைப்பாடுகள் கொண்டதாகவும், அழுத்தம் கூடின ஒளிர் வண்ணங்களால் தீட்டப்பட்டதாகவும் மாறத் தொடங்கின. உருவங்களைச் சுற்றிய கோடுகளின் வெளிப்புறத்தில் வரிசையான புள்ளிகளும், மேல்பகுதியில் நெளிநெளியாகத் தொங்கும் [[சரிகை]] திரைச்சீலைகளும், செல்வச் செழிப்பை மிகைப்படுத்திக் காண்பித்தன. மலர்களும், மலர் மாலைகளும் இயற்கையிலிருந்து விலகி ஒரு அலங்காரம் கூடிய விதத்தில் அமைந்திருந்தன.
 
தஞ்சாவூர் ஓவியங்களின் மேற்புறத்தில் பறக்கும் மனித உருவங்களைக் காணலாம். அவை மையத்தில் அமைந்திருக்கும் கடவுள் உருவத்தின் மேல் மலர் தூவியபடி அமைந்திருக்கும். இந்திய ஓவிய, சிற்பங்களில் பறக்கும் மனித உருவங்கள் என்பது புதியது அல்ல. ஆனால் இந்த உருவங்கள் தமது தோளின் பின்புறத்தில் முளைத்த இறக்கைகளை விரித்தபடி படைக்கப்பட்டிருக்கும். இந்த வடிவம் ஈரானிய, கிருஸ்துவ மரபுகளிலிருந்து பெறப்பட்டிருக்கக் கூடும். கிருஷ்ணரை குழந்தையாக உருவகப்படுத்தும் ஓவியங்களின் மேற்புறத்தில் காணப்படும் வடிவமைக்கப்பட்ட மேகக் கூட்டத்தின் பின்னாலிருந்து இவ்வித உருவங்கள் மேலெழும்பி பூக்கூடையிலிருந்து மலர்களை இறைப்பதைக் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_ஓவியப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது