அடிவளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 [[கிலோமீட்டர்]] (10 [[மைல்]]கள்) ஆகும். [[வெப்பவலயம்|வெப்பவலயப்]] பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் [[கோடை]]யில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு [[மாரி (காலம்)|மாரி]] காலங்களில் தெளிவற்றதாக உள்ளது. புவிமேற்பரப்புடன் உள்ள உராய்வினால் காற்றோட்டத்தில் தாக்கத்தை விளைவிக்கும் அடிவளிமண்டலத்தின் கீழ்ப்பகுதி [[கோள்சார் எல்லைப் படலம்]] (planetary boundary layer) எனப்படும். நில அமைப்பு, நேரம் ஆகியவற்றைப் பொறுத்து இப் படலத்தின் தடிப்பு சில நூறு மீட்டர்களில் இருந்து 2 கிலோமீட்டர்கள் வரை இருக்கும்.
 
==அமுக்கத்தினதும், வெப்பநிலையினதும் அமைப்பு==
அடிவளிமண்டலத்தின் வேதியியல் அமைப்பு சீரானது. எனினும் நீராவியின் பரம்பல் சீராகக் காணப்படுவதில்லை. ஆவியாதல் மூலம் நீராவி உருவாதல் மேற்பரப்பிலேயே நடைபெறுகிறது. அத்துடன், உயரம் கூடும்போது அடிவளிமண்டலத்தில் வெப்பநிலை குறைந்து செல்வதுடன், வெப்பநிலை குறையும்போது [[நிரம்பல்நிலை ஆவியமுக்கம்|நிரம்பல்நிலை ஆவியமுக்கமும்]] குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய நீராவியின் அளவு, உயரம் கூடும்போது குறைந்து செல்கிறது. ஆகவே நில மேற்பரப்புக்கு அருகில் கூடிய நீராவி காணப்படுகின்றது.
 
[[பகுப்பு:வளிமண்டலம்]]
"https://ta.wikipedia.org/wiki/அடிவளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது