சகுந்தலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
காலம் செல்கிறது, சகுந்தலாவிற்கு துஷ்யந்தன் ஏன் இன்னும் தன்னைத் தேடி வரவில்லை என்று தெரியவில்லை, முடிவில் தன்னுடைய தந்தை மற்றும் சிலருடன் தலைநகரத்திற்கு செல்ல தீர்மானிக்கிறாள். போகும் வழியில் அவர்கள் ஒரு சிறிய பரிசலில் ஆற்றைக் கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது, ஆற்றின் அடர்நீலத்தால் கவரப்பட்ட சகுந்தலா தண்ணீரில் தன்னுடைய கையை விடுகிறாள். அவளுடைய மோதிரம் அவளுக்குத் தெரியாமலேயே விரலில் இருந்து நழுவிவிடுகிறது.
 
துசுயந்தனின் அரண்மனைக்கு வந்த பின்னர் சகுந்தலா மிகுந்த கவலையடைகிறாள். தன்னுடைய கணவன் தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாததையும், தன்னைக் குறித்த எதையும் அவரால் நினைவுபடுத்திக்கொள்ள முடியாததையும் கண்டு திகைக்கிறாள்.<ref>{{Cite journal|last=Glass|first=Andrew|date=June 2010|title=Vasudeva, Somadeva (Ed. and Tr.), The Recognition of Shakúntala by Kālidāsa Olivelle, Patrick (Ed. and Tr.), The Five Discourses on Worldly Wisdom by Visnuśarman Mallinson, Sir James (Ed. and Tr.), The Emperor of the Sorcerers...|url=https://www.ebscohost.com|journal=Indo-Iranian Journal |doi=10.1163/001972409X12645171001532}}</ref> தான் அவருடைய மனைவிதான் என்று அவருக்கு நினைவுபடுத்த அவள் முயன்றாலும், மோதிரம் இல்லாமல் துசுயந்தனால் இவளை அடையாளம் காண இயலவில்லை. அவமானமடைந்த அவள் காட்டிற்குத் திரும்பி, தன்னுடைய மகனைக் கூட்டிக்கொண்டு காட்டின் ஒரு பகுதியில் குடியேறுகிறாள். இவளுடைய மகன் பரதன் வளரும்வரை அங்கேயே தன்னுடைய காலத்தை செலவிடுகிறாள். காட்டு விலங்குகளால் மட்டுமே சூழப்பெற்ற பரதன் பலம்பொருந்திய இளைஞனாகவும், புலிகள் மற்றும் சிங்கங்களின் வாய்களைப் பிளந்து அவற்றின் பற்களை எண்ணிவிடும் திறன்கொண்டவனாகவும் வளர்கிறான்.<ref>{{Cite book|title=Shakuntala Recognized|url=https://archive.org/details/shakuntalarecogn0000kali|last=Kalidasa|publisher=iUniverse|others=Translated by G.N. Reddy|year=2000|isbn=0595139809|location=Victoria, BC, Canada }}</ref><ref>{{Cite journal|last=Yousaf|first=Ghulam-Sarwar|date=2005|title=RELIGIOUS AND SPIRITUAL VALUES IN KALIDASA'S SHAKUNTALA|url=https://www.academia.edu/10239314|journal=Katha|access-date=March 8, 2016}}</ref>
 
== அங்கீகாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/சகுந்தலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது