புடைப்புச் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:mahishasuramarthini.jpg|thumb|300px250px|தமிழ் நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்துப் புடைப்புச் சிற்பம். மகிடாசுரமர்த்தினி.]]
'''புடைப்புச் சிற்பம்''' என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு [[சிற்பம்|சிற்பவகை]] ஆகும். இச் சிற்பங்களில் செதுக்கப்படும் உருவங்கள் பின்னணியோடு ஒட்டியே இருக்கும். இதனால் இச் சிற்பங்களில் ஓரளவு [[முப்பரிமாணம்|முப்பரிமாணத்]] தன்மை காணப்பட்டாலும், உருவங்களின் ஒரு பக்கம் மட்டுமே தெரியக் கூடியதாக அமைந்திருக்கும். தனித்து நிற்கும் [[முழு உருவச் சிற்பம்|முழு உருவச் சிற்பங்களைப்]] போல் எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியாது. எனினும் புடைப்புச் சிற்பங்களின் புடைப்பின் அளவு பல்வேறாக அமைந்திருப்பது உண்டு. மிகச் சிறிய அளவே புடைத்துக் காணப்படும் சிற்பங்களும், உருவங்களின் பெரும் பகுதிகள் தெரியக் கூடியவாறு அமைந்த சிற்பங்களுக்கும் எடுத்துக் காட்டுகள் ஏராளமாக உண்டு.
 
==வகைகள்==
[[Image:Qajari relief.jpg|thumb|rightleft|250px|பாரசீகத்துத் தாழ் புடைப்புச் சிற்பம்.கசர் காலத்தைச் சேர்ந்த பேர்செப்போலிசு பாணியில் அமைந்தது. இன்றைய ஈரானின் தாங்கோ சவாசி என்னும் இடத்தில் உள்ளது.]]
புடைத்திருக்கும் அளவை அடிப்படையாகக் கொண்டு புடைப்புச் சிற்பங்கள் "தாழ் புடைப்புச் சிற்பங்கள்", "உயர் புடைப்புச் சிற்பங்கள்" என இருவகையாக உள்ளன. எனினும், இவற்றுக்கு இடையேயான எல்லை தெளிவானது அல்ல. எவ்வளவு புடைத்திருந்தால் அது உயர் புடைப்புச் சிற்பம் என்று தெளிவான வரையறை கிடையாது. ஒரே சிற்பத்திலேயே இரண்டு வகைகளும் காணப்படுவது உண்டு. முன்னணியில் இருக்கும் முக்கியமான உருவங்கள் கூடிய அளவுக்குப் புடைத்திருக்க, பின்னணிக் காட்சிகள் தாழ் புடைப்புச் சிற்பங்களாக அமைந்திருப்பதைக் காண முடியும்.
 
வரிசை 9:
 
==பொருட்கள்==
[[Image:ac.marbles.jpg|thumb|250px|பண்டைக் கிரேக்கத்தைச் சேர்ந்த உயர் புடைப்புச் சிற்பம் ஒன்று]].
புடைப்புச் சிற்பங்கள் [[கல்]], [[மரம்]], [[உலோகம்]] முதலிய பல்வேறு பொருட்களில் உருவாக்கப்பட்டு உள்ளன. மரத்தில் செதுக்கு வேலைகளைச் செய்வது இலகுவாக இருப்பதால் காலத்தால் முந்திய புடைப்புச் சிற்பங்கள் மரத்தால் ஆனவையாகவே இருந்திருக்கும். ஆனாலும், மரச் சிற்பங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடையாது ஆகையால் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பழைய புடைப்புச் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. மரம், கல் முதலிய பொருட்களில் செதுக்குவதன் மூலம் பகுதிகளை அகற்றிப் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்படும் வேளை, உலோகத்தாலான புடைப்புச் சிற்பங்கள் அச்சுகளில் [[உருக்கி வார்த்தல்|உருக்கி வார்க்கப்படுவதன்]] மூலமோ, [[உலோகத் தகடு]]களைப் பின்புறம் அடிப்பதன் மூலமோ உருவாக்கப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/புடைப்புச்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது