சாத்பூரா மலைத்தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:सतपुड़ा
சிNo edit summary
வரிசை 1:
'''சத்புரா மலைத்தொடர்''' மத்திய [[இந்தியா]]வில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது கிழக்குக் [[குஜராத்]]தில் [[அரபிக் கடல்|அரபிக் கடலுக்கு]] அருகில் தொடங்குகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி, [[மகாராஷ்டிரா]], [[மத்தியப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்களூடாகச் சென்று [[சட்டிஸ்கர்|சட்டிஸ்கரில்]] முடிவடைகிறது. இம் மலைத்தொடர் [[விந்திய மலைத்தொடர்|விந்திய மலைத்தொடருக்கு]]த் தெற்கே அதற்கு இணையாகச் செல்கிறது. ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ள இவ்விரு மலைத்தொடர்களும், [[சிந்து-கங்கைச் சமவெளி]]யையும் அமைந்த வட இந்தியாவையும் பாகிஸ்தானையும், தெற்கில் அமைந்துள்ள [[தக்காண மேட்டுநிலம்|தக்காண மேட்டுநிலத்தில்]] இருந்து பிரிக்கின்றன. இவ்விரு மலைத்தொடர்களுக்கும் இடையிலான தாழ்ந்த பகுதியில் ஓடும் [[நர்மதை ஆறு]] சத்புரா மலைத்தொடரின் வடக்குச் சரிவிலிருந்து வடிந்தோடும் நீரை அரபிக் கடலை நோக்கி எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் மேற்கு முனைப் பகுதியின் தெற்குச் சரிவிலிருந்து வடியும் நீரை [[தப்தி ஆறு]] எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் நடுப்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்து நீர் [[கோதாவரி ஆறு|கோதாவரி]] ஆற்றினூடாக வடிகிறது. இத்தொடரின் கிழக்கு முனைப்பகுதி நீர் [[மகாநதி]] ஊடாக வடிகிறது. இவ்விரு ஆறுகளும் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கின்றன. சத்புரா மலைத்தொடரின் கிழக்கு முனையருகில், இது [[சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்|சோட்டா நாக்பூர் மேட்டுநிலக்]] குன்றுகளைச் சந்திக்கின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சாத்பூரா_மலைத்தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது