தமிழ்ச் சிற்றிதழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''சிற்றிதழ்'''
 
தமிழில் [[ஆனந்த விகடன்]] என்ற இதழ் வணிக இதழாக பெரும் வெற்றி அடைந்தமையே சிற்றிதழை உருவாக்கியது. ஆனந்த விகடனில் [[கல்கி]], [[துமிலன்]], தேவன், எஸ்.வி.வி. போன்று ஏராளமான எழுத்தாளர்கள் நகைச்சுவையாக எழுதினார்கள். அவற்றைப் பல்லாயிரம் பேர் வாங்கிப் படித்து வந்தனர். அப்போது திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்த வத்தலக்குண்டுக்காரரான சி.சு.செல்லப்பா என்பவர் இம்மாதிரி பொழுதுபோக்குகளை வெறுப்பவராக இருந்தார். மனிதர்கள் பற்களைக் காட்டி ‘ஹஹஹ’ என்ற ஒலியை எழுப்பி குலுங்குவதன் காரணமே அவருக்குத் தெரியாது. ஆகவே அந்த விளைவு வாசகர்களில் முற்றிலும் நிகழாத வண்ணம் ஒரு இதழை ஆரம்பிக்க முடிவு செய்தார். தன் இதழில் படங்களே வராது என்பதைக் காட்டும் முகமாக அதற்கு அவர் எழுத்து என்று பெயரிட்டார். 1958-ல் தொடங்கிய இவ்விதழே தமிழ்ச் சிற்றிதழ்களின் விதை” என [[ஜெயமோகன்]] இணைய இதழில் எழுதிய “சிற்றிதழ்கள்-ஓர் ஆய்வறிக்கை” எனும் கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.
 
 
வணிக இதழ்களின் செயல்பாட்டில் பிடித்தமில்லாத நிலையிலும், ஒரு படைப்பாளன் தனது படைப்புகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை வெளியிடப்படாமல் நிராகரிக்கப்படும் நிலையிலும் தனது கருத்துக்களை மாற்று வழியில் வெளிப்படுத்த விரும்பியவர்கள் கொண்டு வந்ததுதான் பெரும்பான்மையான சிற்றிதழ்கள். இந்தச் சிற்றிதழ்களின் பெயர்கள் கூட சற்று வித்தியாசமாக இருக்கும். சில சிற்றிதழ்களுக்கு ஓரெழுத்துத் தலைப்பாக ‘அ’, ‘ஓ’, ‘ழ’ என்று பெயரிடப்பட்டன. சில சிற்றிதழ்களுக்கு ‘சுண்டெலி’, ‘வெட்டிப்பயல்’, ‘மாமியா’ என்று நகைச்சுவையாகப் பெயர்கள் வைக்கப்பட்டது. ‘இலக்கிய வட்டம்’, ‘கசடதபற’, ‘சதங்கை’, ‘சூறாவளி’ என்று சிறப்பான பெயர்கள் கூட சில சிற்றிதழ்களுக்கு வைக்கப்பட்டன.
 
 
குறுகிய வட்டத்துக்குள் குறைவான வாசகர்களைக் கொண்டு கையெழுத்துப்[[கையெழுத்து]]ப் பிரதியாகவோ, குறைந்த அளவிலான அச்சுப்பிரதியாகவோ அந்த சிற்றிதழ் வெளிக்கொண்டு வருபவரது கருத்துக்களையும், அவருடைய கருத்துக்களைச் சார்ந்துள்ள கருத்துக்களையும் அதிகமாகக் கொண்டு வெளியாகி வருவது என்கிற ஒரு வரையறைக்குள்தான் இந்த சிற்றிதழ்கள் இருக்கின்றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் அச்சிலும், படைப்பிலும் தரம் சற்று குறைவாகத்தான் இருக்கின்றன என்கிற கருத்து பரவலாக இருக்கிறது.
பெரிய இதழ்களில் கிடைக்காத நல்ல மதிப்பு மிக்க படைப்புகள் மட்டுமே இடம்பெறக் கூடிய ஒரு சில சிறப்பான சிற்றிதழ்களும் உண்டு. இந்த சிற்றிதழ்கள் தரம் மிக்க படைப்புகளை வெளியிட்டு இலக்கியச் சூழலில் ஒரு புதிய மாற்றத்தைக் கூட கொண்டு வந்தது. இதன் மூலம் சிற்றிதழ்களில் வெளியான பல படைப்புகள் மிகப்பெரும் பாராட்டுக்கும், விமர்சனத்துக்கும் கொண்டு வரப்பட்டன. இந்த சிற்றிதழ்களுக்காகத் தனியாக வாசகர்கள் உருவானதுடன் வாசகர் அமைப்புகளும் கூட துவங்கப்பட்டது. இந்த சிற்றிதழ்களில் அதிகமான இதழ்கள் வணிக நோக்கமின்றி வெளியிடப்படுவதாலும், தரமில்லாதிருப்பதாலும் பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இந்த சிற்றிதழ்கள் துவங்கப்பட்ட சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ நிறுத்தப்பட்டு விடுகின்றன. சில இதழ்கள் மட்டும் தங்கள் வாழ்க்கையை நீடிக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.
 
 
இருப்பினும், “சிற்றிதழ் என்றாலே சிறந்த இதழ் என்றுதான் அர்த்தம். இதைத்தான் தற்போது சீரிதழ் என்றும் சொல்லி வருகிறார்கள். எனவே சிறந்த கருத்துக்களைச் சொல்லக்கூடிய எல்லா இதழ்களும் சிறந்த இதழ்கள்தான். இதில் சிறந்த இதழ் என்று பிரிக்க வேண்டிய அவசியமில்லை. எதிர்காலத்தில் தமிழ்ச் சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்” என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர் கவிஞர் வதிலை பிரபா.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ச்_சிற்றிதழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது