உருசியாவின் மூன்றாம் பீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
பீட்டர் [[கீல்]] என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார், [[ஓல்ச்ட்டீன் -கொட்டோர்ப்]]பின் டியூக் ஆன கார்ல் ஃபிரீட்ரிக். தாயார் உருசியாவின் முதலாம் பீட்டருக்கும், அவரது இரண்டாவது மனைவி [[உருசியாவின் முதலாம் கத்தரீன்|முதலாம் கத்தரீனுக்கும்]] பிறந்த அன்னா பெட்ரோவ்னா என்பவராவார். இவர் பிறந்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இவரது தாயார் இறந்துவிட்டார். 1739 ஆம் ஆண்டில் இவரது தந்தையும் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பீட்டர், கார்ல் பீட்டர் உல்ரிக் என்னும் பெயருடன், ஓல்ச்ட்டீன் -கொட்டோர்ப்பின் டியூக் ஆனார். இது அவரை [[உருசியா]], [[சுவீடன்]] ஆகிய இரண்டு நாடுகளின் அரசுரிமைக்குமான ஆரிசு ஆக்கியது.
 
அன்னாவின் சகோதரியான எலிசபெத் உருசியப் பேரரசியானதும், பீட்டரை செருமனியில் இருந்து உருசியாவுக்கு வரவழைத்து, 1742 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் தனது வாரிசாக அறிவித்தார். இதற்கு முன்னர் 1742 ல், [[உருசிய-சுவீடன்சுவீடியப் போர் (1741-1743)|உருசிய-சுவீடன்சுவீடியப் போரின்போது]] உருசியப் படைகள் பின்லாந்தைக் கைப்பற்றி வைத்திருந்த காலத்தில் 14 வயதாயிருந்த பீட்டர் பின்லாந்தின் அரசராக அறிவிக்கப்பட்டார். பிள்ளைகள் இன்றி இறந்துபோன சுவீடனின் பத்தாம் சார்லசின் கீழிருந்த ஆட்சிப் பகுதிகளுக்கான வாரிசு உரிமை அடிப்படையிலேயே இந்த அறிவிப்புச் செய்யப்பட்டது. அக்டோபர் 1742 ஆம் ஆண்டில் ஏறத்தாழ இதே நேரத்தில், சுவீடன் நாடாளுமன்றம் அந்நாட்டின் அரசுரிமைக்கான வாரிசாக பீட்டரைத் தெரிவு செய்தது. பீட்டர் உருசியாவின் அரசுரிமைக்கான வாரிசாகத் தெரிவு செய்யப்பட்டதை சுவீடன் நாடாளுமன்றம் அறிந்திருக்கவில்லை. சுவீடனின் தூதர் [[செயின்ட் பீட்டர்சுபர்க்]]குக்கு வந்தபோது, சுவீடனின் தெரிவை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக இளம் வயதினரான பீட்டரின் சார்பில் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_மூன்றாம்_பீட்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது