எலிசவேத்தா பெட்ரோவ்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
'''யெலிசவேத்''', '''எலிசபெத்''' என்றும் அறியப்படுகின்ற '''எலிசவேத்தா பெட்ரோவ்னா''' ({{lang-ru|Елизаве́та (Елисаве́т) Петро́вна}}) ({{OldStyleDate|29 December|1709|18 December}} – {{OldStyleDate|5 January 1762||25 December 1761}}), 1741 தொடக்கம் 1762ஆம் ஆண்டுவரை [[உருசியா]]வின் [[பேரரசி]]யாக இருந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் [[ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்]] (1740–1748), [[ஏழாண்டுப் போர்]] (1756 – 1763) என்னும் இரண்டு போர்களை நடத்தினார். 1762 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது உருசியப் பேரரசு 4 [[பில்லியன்]] [[ஏக்கர்]]கள் பரப்பளவுக்கு மேல் பரந்து இருந்தது. இது 16 மில்லியன் [[சதுர கிலோமீட்டர்]]களுக்கும் மேற்பட்டது ஆகும்.
 
இவரது [[உள்நாட்டுக் கொள்கை]]களால், பிரபுக்களுக்கு உள்ளூராட்சியில் அதிக முக்கியத்துவம் ஏற்பட்டதுடன், அவர்கள் பேரரசுக்குச் செய்யவேண்டிய சேவைகளும் குறைக்கப்பட்டிருந்தன. இவர், [[லொமொனோசோவ்]] என்பவர் [[மாசுக்கோப் பல்கலைக்கழகம்|மாசுக்கோப் பல்கலைக்கழகத்தை]] நிறுவுவதற்கும், [[சுவாலோவ்]] என்பவர் [[செயின்ட் பீட்டசுபர்க்பீட்டர்சுபர்க்]]கில் நுண்கலை அக்கடமியை உருவாக்குவதற்கும் ஊக்கம் அளித்தார். இவர் தனக்குப் பிடித்த கட்டிடக்கலைஞரான [[பார்த்தோலோமியோ ராசுட்ரெல்லி]]யின் [[பரோக் கட்டிடக்கலை|பரோக்]] பாணியிலான பாரிய திட்டங்களுக்கும் பெருமளவு பணத்தைச் செலவு செய்தார். இத்திட்டங்கள் குறிப்பாக [[பீட்டரோஃப்]], [[சார்சுக்கோயே செலோ]] ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. மாரிகால அரண்மனையும், சிமோல்னி தேவாலயமும் இவரது காலத்தில் அமைக்கப்பட்ட முக்கியமான கட்டிடங்களாகும். பொதுவாக, பலராலும் விரும்பப்பட்ட உருசிய ஆட்சியாளர்களுள் இவரும் ஒருவர். [[செருமனியர்]]களை அரசில் அனுமதிக்காததும், இவர் காலத்தில் ஒருவருக்குக்கூட உருசியாவில் கொலைத் தண்டனை அளிக்கப்படாததும் இதற்கு முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
 
[[பகுப்பு:உருசியாவின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/எலிசவேத்தா_பெட்ரோவ்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது