நாடாளுமன்ற முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Form of government parliamentary.png|right|400px|thumb|அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கும் [[அரசியல் சட்ட முடியாட்சி]]கள் சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன. நாட்டுத் தலைவரிலும் கூடிய அதிகாரம் கொண்ட [[நாடாளுமன்றக் குடியரசு]]கள் செம்மஞ்சள் நிறம் தீட்டப்பட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையுடன் நாடாளுமன்றம் இணைக்கப்பட்டுள்ள [[சனாதிபதிமுறைக் குடியரசு]]கள் பச்சை நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளன.]]
'''நாடாளுமன்ற முறை''' என்பது ஒரு அரசாட்சி முறைமை ஆகும். இம்முறையில், [[நிறைவேற்றுப் பிரிவு (அரசு)|நிறைவேற்றுப் பிரிவைச்]]சேர்ந்த [[அமைச்சர்]]கள் [[சட்டவாக்க சபை]]யில் இருந்து தெரியப்படுகின்றனர். இவர்கள் சட்டவாக்க சபைக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பர். இதன் மூலம் சட்டவாக்கம், நிறைவேற்றல் ஆகியவற்றுக்கான பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளன. இந்த அரசாட்சி முறைமையில் [[அரசுத் தலைவர்]] நடைமுறையில் தலைமை நிறைவேற்றுனர் ஆகவும் தலைமைச் சட்டவாக்குனர் ஆகவும் செயல்படுவார்.
 
[[சனாதிபதி முறை]]யுடன் ஒப்பிடுகையில், நாடாளுமன்ற முறையில், நிறைவேற்றல், சட்டவாக்கப் பிரிவுகளிடையே அதிகாரம் தெளிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதில்லை. ஆனால், இம்முறையில் அரசுத் தலைவருக்கும், நாட்டுத் தலைவருக்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் உண்டு. "பிரதம அமைச்சர்" அல்லது "பிரதமர்" அரசுத் தலைவராக இருப்பார். நாட்டுத் தலைவர் பதவி பெரும்பாலும் ஒரு சடங்குமுறைப் பதவியாக இருப்பது வழக்கம். மக்களால் அல்லது நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்படும் சனாதிபதி அல்லது [[அரசியல்சட்ட முடியாட்சி]]யில் இருப்பது போல ஒரு பரம்பரையாக வரும் அரசர் அல்லது அரசி நாட்டுத் தலைவராக இருப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/427063" இருந்து மீள்விக்கப்பட்டது