றுப்உல் காலீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
'''ரப் அல் காலி''' ({{lang-ar|الربع الخالي}}) என்பது உலகத்தின் மிகப் பெரிய [[பாலைவனம்|பாலைவனங்களுள்]] ஒன்று. இது [[சவூதி அரேபியா]], [[ஓமான்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[யேமன்]] ஆகிய நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியதாக அரேபியத் தீவக்குறையின் தெற்கு நோக்கிய மூன்றில் ஒரு பகுதியை மூடியுள்ளது. [[நெடுங்கோடு]]கள் 44°30′ −56°30′E க்கும், [[அகலக்கோடு]]கள் 16°30′ −23°00′N க்கும் இடையில் அமைந்துள்ள இப்பாலைவனம் 650,000 [[சதுர கிலோமீட்டர்]]கள் (250,000 [[சதுர மைல்]]கள்) பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. இது [[நெதர்லாந்து]], [[பெல்சியம்]], [[பிரான்சு]] ஆகிய மூன் று நாடுகளும் சேர்ந்த நிலப்பகுதியின் பரப்பளவிலும் கூடுதலானதாகும். அமெரிக்காவின் [[டெக்சாசு]] மாநிலத்தின் பரப்பளவுக்கு இப்பாலைவனம் ஏறத்தாழச் சமமானது.
 
அண்மைக்காலம் வரை அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத இப் [[பாலைவனம்]] 1,000 [[கிலோமீட்டர்]]கள் (620 [[மைல்]]) நீளமும், 500 கிலோமீட்டர்கள் (310 மைல்) அகலமும் கொண்டது. இப் பகுதிகளில் வாழும் பெதூன் இன மக்கள் கூட இப் பாலைவனத்தின் விளிம்புப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். தற்காலத்தில், புவியிடங்காட்டு முறைமைகளைப் பயன்படுத்திச் பாலைவனத்தினுள் சுற்றுப் பயணங்களை ஒழுங்கு செய்யும் நிறுவனங்கள் உள்ளன. [[பேட்ரம் தாமசு]], [[சென். சான் பில்பி]] என்போர் முறையே 1931 ஆம் ஆண்டிலும், 1932 ஆம் ஆண்டிலும் செய்த பயணங்களே இப் பகுதியில் மேல்நாட்டினர் செய்த முதல் பயணங்கள் ஆகும். 1946 ஆம் ஆண்டுக்கும், 1950 ஆம் ஆண்டுக்கும் இடையில் [[வில்பிரட் தீசிசர்]] என்பார், இப் பகுதியைப் பலமுறை கடந்துள்ளார்.
 
[[பகுப்பு:பாலைவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/றுப்உல்_காலீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது