ஏணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|150px|ஒரு ஏணி '''ஏணி''' என்பது, பொதுவாக குறித்த இடை...
 
No edit summary
வரிசை 1:
[[Image:Ladder and telegraph pole.jpg|thumb|150px|ஒரு ஏணி]]
'''ஏணி''' என்பது, பொதுவாக குறித்த இடைவெளியில் ஒன்றுக்கு ஒன்று இணையாக வைக்கப்பட்ட இரண்டு நீளமான [[கம்பு]]களில், அவற்றுக்குக் குறுக்கே ஒரு முனையில் இருந்து மறு முனை வரை பொருத்தப்பட்ட சிறிய [[கோல்]]கள் அல்லது தட்டையான படி போன்ற துண்டுகளை இணைத்து உருவாக்கிய ஒரு அமைப்பு ஆகும். ஒரு இடத்திலிருந்து அதற்கு மேலே அல்லது கீழேயுள்ள இன்னொரு இடத்துக்குச் செல்வதற்கு இது பயன்படுகின்றது. மிகப் பழைய காலத்திலிருந்தே ஏணிகளை [[மனிதர்]]கள் பயன்படுத்தி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. முதலில் உருவாக்கப்பட்ட ஏணிகள் நீண்ட ஒற்றை [[மரக்கொம்பு]]கள் அல்லது [[மூங்கில்]] கழிகளில் குறுக்கே குறுகிய குட்டையான கம்புகளைக் கட்டி உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும். தற்காலத்திலும் இவ்வாறான ஏணிகள் பயன்பாட்டில் உள்ளன. குறுகிய கழிகள் பலவற்றை அடுக்கடுக்காக வைத்து அவற்றின் ஒத்த முனைகளை இரண்டு கயிறுகளில் தொடுத்து நூலேணிகள் அமைக்கும் வழக்கமும் உண்டு.
 
 
==ஏணி செய்யப் பயன்படும் பொருட்கள்==
 
முற்காலத்தில், மரம், மூங்கில் போன்ற பொருட்களே ஏணி செய்வதற்குப் பயன்பட்டன ஆயினும், அண்மைக் காலங்களில் வேறு பல பொருட்களையும் இதற்குப் பயன்படுத்துகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் [[அலுமீனியம்]] ஏணி செய்வதற்குப் பயன்படத் தொடங்கியது. இதன் வலிமை, துருப்பிடிக்காத தன்மை, எடைக் குறைவு, நீடித்து உழைக்கும் தன்மை, தீயில் எரியாத தன்மை, நீரினால் பாதிக்கப்படாமை, முடிப்புப்பூச்சு தேவை இல்லாமை என்பவற்றால், அலுமீனியம் ஏணிகளுக்கு விரும்பப்படும் ஒரு பொருளானது. அண்மைக் காலங்களில் [[கண்ணாடியிழை நெகிழி]]ப் பொருட்களைப் பயன்படுத்தி ஏணிகள் செய்கின்றனர்.
 
[[பகுப்பு:பயன்படு பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது