சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== வரலாறு==
சம்மு மற்றும் காசுமீர் பகுதியை முதன்முறையாக [[மொகலாயர்|மொகலாய]] பேரரசர் [[அக்பர்]] [[1586]] ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான [[பகவன் தாஸ்]], [[முதலாம் இராமசந்திரா I]] ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காசுமீர் பகுதியை ஆண்டு வந்த [[துருக்கியர்|துருக்கிய ]] ஆட்சியாளரான [[யூசூப் கான்]] படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் இராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட [[இந்து]] தேவதையான [[ஜம்வா மாதா]]வின் பெயரில் [[ஜம்மு(நகர்)|ஜம்மு]] நகரை நிறுவினார்.
 
[[1780]] ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான [[ரஞ்சித் தியோ]]வின் மறைவுக்கு பின், சம்மு காசுமீர் பகுதி [[சிக்கிய கூட்டரசு |சீக்கியரால்]], [[ரஞ்சித் சிங்]] என்பவரால் பிடிக்கப்பட்டது. அதன்பின் [[1846]] வரை சிக்கிய ஆதிக்கத்தில் இருந்து வந்தது. <ref name=imperialgazet-gulabsingh> ''Imperial Gazetteer of India, volume 15''. 1908. "Kashmir: History." page 94-95.</ref> ரஞ்சித் தியோவின் கிளையில் தோன்றிய [[குலாப் சிங்]] சிக்கிய அரசரான ரஞ்சித் சிங்கின் அவையில் முக்கிய பங்காற்றி, பல போர்களில் வெற்றி பெற்றமையை அடுத்து ரஞ்சித் சிங், 1820 இல் குலாப் சிங்கை ஜம்மு பகுதியின் ஆட்சியாளராக அறிவித்தார். மிகத் திறமையான பல படைத்தலைவர்களை கொண்ட குலாப் சிங் மிக விரைவாக தனது செல்வாக்கை உயர்த்தினார். [[படைத்தலைவர் சொரோவார் சிங்]] மூலம் காசுமீருக்கு கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள [[லடாக் ]] பகுதியையும், [[பால்டிசான்]] பகுதியையும் கைப்பற்றினார். <ref name=imperialgazet-gulabsingh/>
 
[[Image:NWFP-காசுமீர் 1909-a.jpg|thumb|1909 ஆம் ஆண்டின் ஜம்மு காசுமீர் மாகாணத்தின் வரைபடம்]].
1845 ஆம் ஆண்டில் [[முதலாவது ஆங்கிலேய- சீக்கிய போர்]] வெடித்த போது, போரில் எவ்வித பங்கும் கொள்ளாமல் இருந்த குலாப் சிங், 1846 ஆம் ஆண்டு நடைபெற்ற சொப்ரோன் போருக்கு பின் இருதரப்புக்கும் அமைதியை கொண்டு வரும் நடுநிலையாளராகவும், ஆங்கிலேய ஆலோசராகவும் மாறினார். இதன் விளைவாக இரண்டு உடன்பாடுகள் ஒப்பு கொள்ளப் பட்டன. முதலாவது ஒப்பந்தத்தின் படி, ஆங்கிலேயர் போரால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு (1.5 கோடி ரூபாய் ) ஈடாக [[லாகூர் மாகாணம்| மேற்கு பஞ்சாப்]] பகுதியை தம்வசம் கொண்டனர். இதன் மூலம் பஞ்சாப் பேரரசு தனது பெருமளவு நிலப்பகுதியை இழந்தது. இரண்டாவது ஒப்பந்தத்தின் படி குலாப் சிங் முன்பு பஞ்சாப் பேரரசை சார்ந்த நிலப்பகுதியில் உள்ளடக்கிய காசுமீர் பகுதிக்கு அரசராக சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ஆக்கப்பட்டார். புதிய காசுமீர் அரசு நிறுவப்பட்டது.<ref name=imperialgazet-gulabsingh/> 1857 குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மைந்தன் [[ரன்பீர் சிங்]] மேலும் பல பகுதிகளை வென்று காசுமீர் அரசுடன் இணைத்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது