கட்டமைப்பியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கட்டமைப்பியம்''' (Structuralism) என்பது, ஒரு குறிப்பிட்ட துறையை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பகுதிகளைக் கொண்ட சிக்கலான ஒன்றாக எடுத்துக்கொண்டு பகுத்தாய்வு செய்ய முயலும் [[மனித அறிவியல்]] சார்ந்த ஒரு அணுகுமுறை ஆகும். இது [[மொழியியல்|மொழியியலில்]] [[பேர்டினண்ட் டி சோசர்]] (1857-1913) என்பவர் செய்த ஆய்வுகளிலிருந்து தொடங்கியது. எனினும் பிரெஞ்சு அறிஞர்கள் இது பலதுறைகளிலுமான பரந்த பயன்பாட்டுக்கு உகந்தது என்பதை உணர்ந்து கொண்டனர். வெகு விரைவிலேயே இந்த மாதிரி [[மானிடவியல்]], [[உளவியல்]], [[உளப்பகுப்பாய்வியல்]], [[கட்டிடக்கலை] போன்ற பல துறை ஆய்வுகளிலும் பயன்படலாயிற்று. இது கட்டமைப்பியம் ஒரு வழிமுறையாக மட்டுமன்றி ஒரு அறிவுசார் இயக்கமாகவே உருவாவதைக் கோடிகாட்டியது. இது 1960களில் பிரான்சில் இருப்பியலியம் (existentialism) வகித்த இடத்தைப் பிடித்துக்கொண்டது.<ref name = "Sturrock"/>
 
1970களில் இது திறனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. இவர்கள் இக் கொள்கை இறுக்கமானது எனவும் வரலாற்றுப் போக்குக்கு முரணானது எனவும் குற்றஞ்சாட்டினர். எனினும் [[மைக்கேல் போக்கல்ட்]], [[ஜாக் லாக்கான்]] போன்ற பல கட்டமைப்பியக் கோட்பாட்டாளர்கள் தொடர்ந்தும் கண்ட ஐரோப்பிய மெய்யியலில் செல்வாக்குச் செலுத்தி வந்தனர். அத்துடன் இக் கோட்பாட்டைக் கண்டித்தவர்களின், முக்கியமாக பின்கட்டமைப்பிய வாதிகளின், பெரும்பாலான அடிப்படை எடுகோள்கள் கட்டமைப்பியத்தின் தொடர்ச்சியே அன்றி வேறல்ல.<ref name="Sturrock">John Sturrock, ''Structuralism and Since'', Introduction.</ref>
 
அலிசன் அசிட்டர் என்பவருடைய கருத்துப்படி, அறிவுசார் போக்கை உருவாக்கிய கட்டமைப்பியம் தொடர்பில் நான்கு பொது எண்ணக்கருக்கள் உள்ளன.
வரிசை 7:
# கட்டமைப்பிய வாதிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கட்டமைப்பு உண்டு என நம்புகின்றனர்.
# கட்டமைப்பிய வாதிகள், ஒருமித்து இருப்பதற்கான கட்டமைப்பு விதிகள் குறித்தே கவனம் செலுத்துகின்றனரேயன்றி மாற்றங்கள் குறித்து அல்ல.
# மேற்பரப்புக்கு அல்லது பொருள் தருவதுபோல் தோற்றமளிப்பதற்குப் பின்னணியில் இருக்கும் உண்மையான பொருள் கட்டமைப்பு ஆகும்.<ref>Assiter, A 1984, 'Althusser and structuralism', The British journal of sociology, vol. 35, no. 2, Blackwell Publishing, pp.272-296. </ref>
 
==வரலாறு==
கட்டமைப்பியம் 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, [[மொழி]], [[பண்பாடு]], [[சமூகம்]] போன்றவற்றை ஆய்வு செய்யும் துறைகளில் ஒரு புகழ் பெற்ற அணுகுமுறையாக வளர்ச்சியடைந்தது. மொழியியல் தொடர்பாக பேர்டினண்ட் டி சோசர் செய்த ஆய்வுகளே கட்டமைப்பியத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படுகின்றது. கட்டமைப்பியம் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல்லான "structuralism" என்பதை, பிரான்சு நாட்டவரான மானிடவியலாளர் [[குளோட் லெவி-இசுட்ராசு]] (Claude Lévi-Strauss) என்பவரின் ஆக்கங்களில் முதலில் கையாளப்பட்டது. இது பிரான்சில் கட்டமைப்பிய இயக்கத்தின் தோற்றத்துக்கு வித்திட்டதுடன், [[லூயிசு அல்தூசர்]], உளப்பகுப்பாய்வாளர் [[ஜாக் லாக்கன்]], கட்டமைப்பிய மார்க்சியவாதி [[நிக்காசு போலன்டாசு]] போன்ற சிந்தனையாளர்களுடைய ஆக்கங்களுக்கும் உந்து சக்தியாக அமைந்தது. கட்டமைப்பியம் [[குறியியல்|குறியியலோடு]] (semiotics) நெருக்கமான தொடர்பு கொண்டது.
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[செயற்பாட்டுக் கட்டமைப்பியம்]]
* [[கட்டமைப்பியப் பொருளியல்]]
* [[கட்டமைப்பியல் திரைப்படக் கோட்பாடு]]
* [[கட்டமைப்பியம் (உளவியல்)]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/கட்டமைப்பியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது