கிணறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
எனினும், பாறைகளைக் கொண்ட நிலங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது கடினமானது. அத்தோடு, சொரியலான மண்ணுள்ள இடங்களில் அகழ் கிணறுகள் வெட்டுவது ஆபத்தானது. கரைகள் இடிந்து விழுவதற்கான சாத்தியங்கள் அதிகம். கிணறுகளை இம்முறையில் வெட்டும்போது மனிதர் உள்ளே வேலை செய்வதற்கு வசதியாகத் தொடர்ச்சியாக நீரை இறைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆழம் கூடிய கிணறுகளில் இது மிகவும் கடினமானது. இதனால், இத்தகைய கிணறுகள் தற்காலத்தில், நிலத்தடி நீர் குறைவான ஆழத்தில் இருக்கக்கூடிய இடங்களிலேயே பயன்படுகின்றன.
 
===அடித்துத் துளைக்கும் கிணறு===
இக்கிணறுகள் இறுக்கமில்லாத மண்ணுள்ள இடங்களுக்கு ஏற்றவை. இம்முறையில், கூரான முனை பொருத்தப்பட்டதும், பக்கங்களில் துளைகளைக் கொண்டதுமான ஒரு குழாய் தேவையான ஆழத்துக்கு அடித்து இறக்கப்படும். நிலைக்குத்தாகப் பொருத்தப்படும் இக் குழாயின் மேல் முனையில் பாரமான [[சுமை]] ஒன்றை விழ விடுவதன் மூலம் இக் குழாய் நிலத்துள் படிப்படியாகச் செலுத்தப்படுகிறது. நீர் மட்டத்துக்குக் கீழ் போதிய அளவு துளைத்த பின்னர் [[துளை]] சுத்தம் செய்யப்பட்டு நீரேற்றி பொருத்தப்படும். ஆழம் குறைவான கிணறுகளில் கையால் இயக்கக்கூடிய நீரேற்றிகளைப் பயன்படுத்தலாம். ஆழம் கூடிய கிணறுகளாயின் மின்சார நீரேற்றிகளே விரும்பப்படுகின்றன.
 
[[பகுப்பு:நீர் வழங்கல்]]
"https://ta.wikipedia.org/wiki/கிணறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது