பிட்யின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பிட்யின்''' என்பது பொது [[மொழி]]யொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும். ஒருவருடைய மொழி இன்னொருவருக்குத் தெரியாத நிலையில் வணிகத் தொடர்பு கொள்ளும்போதோ, இரண்டு வெவ்வேறு மொழி பேசும் குழுக்கள் அவர்களுக்குத் தெரியாத மொழியொன்றைப் பேசும் இன்னொரு நாட்டில் இருக்கும்போதோ இத்தகைய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிட்யின் மொழி அடைப்படையில் மொழிசார் தொடர்புகளுக்கான ஒரு எளிமையான முறையாகும். இது தேவையேற்படும் அந்த நேரங்களிலேயே உருவாவதாகவோ, அல்லது குழுக்களிடையேயுள்ள சில வழக்காறுகளின் அடிப்படையில் உருவாவதாகவோ அமையக்கூடும். பிட்யின் மொழிகள் எவருக்கும் [[தாய்மொழி]]யாக இருப்பதில்லை, ஆனால் இது ஒரு இரண்டாம் மொழியாகப் பயன்படுகின்றது.<ref>See {{Harvcoltxt|Todd|1990|p=3}}</ref><ref>See {{Harvcoltxt|Thomason|Kaufman|1988|p=169}}</ref> இம்மொழி, பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளில் இருந்து பெறப்படும் [[சொல்|சொற்கள்]], ஒலிகள், உடற்சைகைகள் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது. பிற மொழிகளோடு ஒப்பிடும்போது, பிட்யின் மொழிக்குக் குறைவான மதிப்பே உள்ளது.<ref>{{Harvcoltxt|Bakker|1994|p= 27}}</ref>
பிழையாகப் பேசப்படும் எல்லாமே பிட்ஜின் மொழிகள் ஆவதில்லை. எல்லாப் பிட்யின் மொழிகளுமே அவற்றுக்கெனத் தனியான முறைகளைக் கொண்டுள்ளன. அதனால் அம்மொழிகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அம்முறைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியம்.<ref>{{Harvcoltxt|Bakker|1994|p=26}}</ref>
 
==சொற்பிறப்பு==
 
''பிட்யின்'' என்னும் சொல்லின் மூலம் பற்றித் தெளிவாக எதுவும் தெரியவில்லை. 1850 ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சில் காணப்படுகின்றது. இது எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பது குறித்துப் பல கருத்துக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கீழே கானலாம்:
 
* ஆங்கிலச் சொல்லான ''பிசினஸ்'' என்பதன் பிழையான சீன மொழி உச்சரிப்பு.
* வணிகம் என்னும் பொருள்தரும் போத்துக்கேய மொழிச்சொல்லிலிருந்து உருவானது
* ''மக்கள்'' என்னும் பொருள்தரும் ''பிடியன்'' என்னும் கொச்சைச் சொல்லிலிருந்து உருவானது.
* புறாவுக்கான ஆங்கிலச் சொல்லான ''பிஜன் (pigeon)'' என்பதிலிருந்து தோற்றம் பெற்றது.<ref>{{Citation |title=pidgin|encyclopedia= ''The Cambridge Encyclopedia of Language'' |publisher=Cambridge University Press |date=1997}}</ref>
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிட்யின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது