அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
===படைத்துறை, போர் அருங்காட்சியகங்கள்===
படைத்துறை அருங்காட்சியகங்கள் [[படைத்துறை]]யின் வரலாற்றை எடுத்துக் காட்டுவதற்காக உருவாக்கப்படுகின்றன. இவை பொதுவாக ஒரு நாட்டை மையப்படுத்தியே அமைவது வழக்கம். இத்தகைய அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாடு ஈடுபட்ட [[போர்]]கள் தொடர்பான காட்சிப் பொருட்கள் இடம்பெறும். இக் காட்சிப் பொருட்களில், [[ஆயுதம்|ஆயுதங்கள்]], பிற படைத்துறைச் சாதனங்கள், [[சீருடை]]கள், போர்க்காலப் [[பரப்புரை]]கள், போர்க்காலங்களில் மக்களின் வாழ்க்கை என்பன தொடர்பானவை அடங்கும். படைத்துறை அருங்காட்சியகங்கள் ஒரு குறித்த இடப்பகுதியை அல்லது ஒரு குறித்த படைத்துறைப் பிரிவை மட்டும் மையப்படுத்தி அமைவதும் உண்டு. [[படைத்துறை வானூர்தி]]கள், [[போர்த்தாங்கி]]கள் என்பவற்றுக்கான அருங்காட்சியகங்கள் இவற்றுள் அடங்குவன.
 
===இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள்===
இயற்கை வரலாற்று அருங்காட்சியகங்கள், இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்கள் என்பன இயற்கை உலகு தொடர்பான அம்சங்களைக் காட்சிக்கு வைக்கின்றன. இவை இயற்கை பண்பாடு என்பவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துகின்றன. [[தொன்மா]]க்கள், பண்டைக்கால வரலாறு, [[மானிடவியல்]] போன்றவை தொடர்பான காட்சிப்பொருட்களை இத்தகைய அருங்காட்சியகங்களில் காண முடியும். கூர்ப்பு, [[சூழலியல்]] தொடர்பான விடயங்கள், [[உயிரிப்பல்வகைமை]] போன்றவை இயற்கை அறிவியல் அருங்காட்சியகங்களில் சிறப்பான கவனத்தைப் பெறும் விடயங்களாக இருக்கும். இத்தகைய அருங்காட்சியகங்களுக்கு இலண்டனில் உள்ள [[இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இலண்டன்|இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்]], [[இயற்கை வரலாற்றுக்கான ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகம்]], சிமித்சோனிய நிறுவனத்தின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள [[இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம், வாசிங்டன்|இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம்]], நியூ யார்க் நகரில் உள்ள [[இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம், நியூ யார்க்|இயற்கை வரலாற்றுக்கான அமெரிக்க அருங்காட்சியகம்]] என்பவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது