குடல்வாலழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 40:
==மருத்துவம்==
 
இந்நோய்க்கு பெரும்பாலும் அறுவை மருத்துவமே சிறந்தது. அடி வயிற்றின் வலதுபுறம் திறந்து, குடல் வால் முழுமையாக அகற்றப்படும். நவீன மருத்துவ யுகத்தில் லேப்ராஸ்கோப் (Laprascope) மூலம், வயிற்றில் சிறு துளையிட்டு, அதன் மூலம் குடல் வால் அகற்றம் (Appendicectomy) செய்யப்படுகிறது. நோயாளி உடனே வீட்டிற்கு திரும்பி விடலாம். சற்று மருத்துவச் செலவு அதிகமானாலும், பரவலாக இம்மருத்துவம் தற்சமயம் செய்யப்படுகிறது. சில நோயாளிகளுக்கு அறுவைச் மருத்துவம் செய்ய இயலாத நிலை ஏற்படும். அந்நோயாளிகளுக்கு நுண்ணுயிர் கொல்லிகள் (AntiBiotics) மூலம் மருத்துவம் செய்யலாம். பொதுவாக வயிற்று வலி என்றதும், வீட்டில் உள்ளோர், கை வைத்தியம் செய்கிறேன் என்று விளக்கெண்ணெய் எடுத்து அடிவயிற்றில் தடவி விடுவர். குடல் வால் அழற்சி இதனால் குணமாகாதது மட்டுமல்ல, நோயின் தீவிரம் அதிகமாகி உயிருக்கே [[ஆபத்து]] உண்டாகும். கடைசியில் விளக்கெண்ணைக்கும் கேடே ஒழிய, பிள்ளை பிழைத்த பாடில்லை என்ற நிலையே ஏற்படும்.
 
வேறு சிலரோ, நாமக்கட்டியை உரைத்து அடிவயிற்றில் தடவுவர். கடைசியில் கோவிந்தா, கோவிந்தா என்று கூவும் நிலையே உண்டாகும். சிலர் இது போன்று வயிற்று வலி வந்தவுடன் சூடு என்பார்கள். இது போன்ற மூடநம்பிக்கைகளையும், கை வைத்தியம் போன்றவற்றைத் தவிர்த்து, சரியான மருத்துவத்தின் மூலம் 100 சதவீதம் நோயாளியை குணப்படுத்தலாம்.
"https://ta.wikipedia.org/wiki/குடல்வாலழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது