மணி விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
"ஷஷ்டியப்த பூர்த்தி" எனும் இந்த மணி விழாவில் இந்து ஆகமம், புராணங்களின் வழியில் 5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 எனும் வரிசையில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. முக்கியமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக [[பிரம்மா]], [[விஷ்ணு]], [[உருத்திரன்]], [[மார்க்கண்டேயன்]], [[திக்பாலகர்கள்]], [[சப்தசிரஞ்சீவிகள்]], ஆயுள் தேவதை, வருஷம், அயனம், [[நட்சத்திரம்]], [[கணபதி]], [[நவக்கிரகம்]], அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜை செய்வது சிறப்பானதாகும்.
 
இதில் [[தீட்சை|சிவ தீட்சை]] எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவபூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும், பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1-ம், ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தாபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும்.
 
இந்த வழிபாட்டிற்குப் பின்பு தைல தானம், ஆஜ்யதானம், உதகபாத்ர தானம், வஸ்திர தானம், நவதானிய தானம், பூ தானம், கோ தானம், தில தானம், தீப தானம், ருத்ராட்சம் அல்லது மணி தானம், எனும் தச தானம் செய்து உமா மகேஷ்வர பூஜை எனும் வயோதிகத் தம்பதி [[பாத பூஜை]] செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/மணி_விழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது