விக்கிப்பீடியா:கலந்துரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 206:
"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று! உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம்! அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை! அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்! <br /> இயலவில்லை எனில் நாம் (விக்கியர்) அனைவரும் இணைந்து திட்டமான, தரமான பெயர்களைத் தயாரித்து அரசுக்களிப்போம்! தமிழ் விக்கியில் கிட்டத்தட்ட 10000 பயனர்கள் பதிந்துள்ளதாக அறிந்தேன். இருப்பதோ 118 தனிமங்கள் (அடையாளம் காணப்பட்டவை) மட்டுமே! 84 பேருக்கு ஒரு தனிமம் மட்டுமே! அவ்வெண்பத்துநால்வரும் (முடிந்தால்) அல்லது குறைந்தபட்சம் 10 பேராவது இணையம் மூலம் குழுவாகச் செயல்பட்டு குறிப்பிட்ட தனிமங்குறித்து விரிவாக ஆய்ந்து ஒரு தூய்தமிழ்ப் பெயரிட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.<br />இது குறித்து நிர்வாகி அவர்கள் கட்டுரைப்போட்டி வலைவாசல் பக்கத்திற்குச் செல்ல ஓர் அறிவிப்பை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டது போல, இக்குழுவாக்கத்திற்கு ஓர் அறிவிப்பு தேவை!<br />
--[[பயனர்:Surya Prakash.S.A.|சூர்ய பிரகாசு.ச.அ.]] 15:12, 25 ஜூன் 2010 (UTC)
 
---
அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் இளங்குமரன். [["எழுத்தேணி அறக்கட்டளை"]]யின் நிறுவனர். சிங்கப்பூரில் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றேன். நிறைய எழுத ஆசைதான். சற்று குழப்பமாகவே உள்ளது. ஒருமுறை எழுதத் தொடங்கிவிட்டால் பழக்கத்திற்கு வந்துவிடும் என நினைக்கின்றேன். நன்றி எழுதுகின்றேன்.
நண்பர்களையும் எழுதத் தூண்டுகின்றேன்.
---
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா ஆவணக்காப்பகம்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:கலந்துரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது