சரோஜா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: == விமர்சனம் == சென்னையிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க,...
(வேறுபாடு ஏதுமில்லை)

12:39, 16 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

விமர்சனம்

சென்னையிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க, ஐதராபாத்துக்கு கிளம்புகிறார்கள் நண்பர் பட்டாளமான எஸ்.பி.பி. சரண், பிரேம்ஜி, ஷிவா, வைபவ். நள்ளிரவில் வழி தவறி ஓரிடத்தில் இவர்களது வேன் சென்றடைகிறது.அங்கு இவர்களது வேனுக்கு இடையில் வந்துவிழுகிறார் போஸ் வெங்கட். குண்டு காயத்துடன் இருக¢கும் அவரை காப்பாற்ற நண்பர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கிடையே ஐதராபாத்தில் புகழ்பெற்ற தொழிலதிபர் பிரகாஷ் ராஜ். பிளஸ் டூ படிக்கும் இவரது மகள் வேகாவை பணத்துக்காக ஒரு கும்பல் கடத்துகிறது. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் போலீஸ் அதிகாரி ஜெயராம்.

வில்லன் சம்பத், போஸை கொல்கிறார். இதை மறைந்து பார்க¢கும் சரண் அண்ட் கோ அதிர்ச்சி அடைகிறார்கள். அங்கிருந்து உயிர் தப்பினால் போதும் என கிளம்புகிறார்கள். அப்போது சரண், தனது பர்ஸை வில்லன்கள் இடத்தில் தவற விட்டதை அறிந்து அதிர்கிறார். 'அந்த பர்ஸ்ல என்னோட முழு விவரமும் இருக்கு. அட்ரஸ் தேடி வந்து நம்மள கொல்வாங்கடா' என புலம்புகிறார். பர்ஸை எடுக்க திரும்ப அதே இடத்துக்கு நண்பர்கள் கிளம்புகிறார்கள். அப்போதுதான் அங்கு வேகாவை கடத்தி வைத்திருப்பது தெரிகிறது. வேகாவையும் காப்பாற்றிக் சரண் அண்ட் கோ தப்பித்தார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரோஜா_(திரைப்படம்)&oldid=594537" இலிருந்து மீள்விக்கப்பட்டது