வாருங்கள், Ragunathanp! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Ragunathanp, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 13:16, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

வணக்கம்தொகு

ரகுநாதன்,

விக்கிப்பீடியாவுக்கு தங்களது பங்களிப்புகள் கண்டு மகிழ்கிறேன். புதிய கட்டுரைகளைத் தொடங்கும் முன் ஏற்கனவே அந்தத் தலைப்பில் கட்டுரை உள்ளதா என்று தேடி பார்த்துவிட்டு தொடங்குகள் (16 வயதினிலே போல). அதே போல ஆங்கிலத்தில் தலைப்புகள் வைக்க வேண்டாம். தமிழில் வைத்து விடுங்கள் (லார்சன் அன்ட் டூப்ரோ பொல). ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.--சோடாபாட்டில் 19:25, 31 ஆகஸ்ட் 2010 (UTC)

வாழ்த்துக்கள்தொகு

ரகுநாதன், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் கண்டு மகிழ்கிறேன். மேலும் பங்களிக்க என் வாழ்த்துகள். புதிய பக்கங்களை உருவாக்கும் போது குறைந்த பட்சம் ஒரு நான்கைந்து வாக்கியங்களாவது வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். --சோடாபாட்டில் 14:43, 6 செப்டெம்பர் 2010 (UTC)

காப்புரிமைதொகு

ரகுநாதன், நீங்கள் மற்றவர்களின் வலைப்பதிவுகளில் உள்ள திரை விமர்சனங்களை எடுத்து விக்கிப்பீடியாவில் இடுகிறீர்கள். (உதாரணம்: அயன் பட விமர்சனத்தைன் இங்கிருந்து எடுத்துள்ளீர்கள். இது காப்புரிமை (copyright) மீறும் செயலாகும். விக்கியில் பிறரது ஆக்கங்களை அப்படியே இடுவதில்லை). இனிமேல் இப்படி செய்யாதீர்கள். கதைச் சுருக்கத்தை உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுங்கள்.--சோடாபாட்டில் 07:41, 16 செப்டெம்பர் 2010 (UTC)

கவனம்தொகு

  இதனை கவனியுங்கள்
ரகுநாதன். மேலே சொன்னதை மீண்டும் உங்களிடம் சொல்கிறேன்.
  • தமிழ் விக்கிபீடியாவில் திரை விமர்சனங்களை இடுவதில்லை. கதைச் சுருக்கத்தை மிகையில்லாத வார்த்தைகளில் எழுத வேண்டும்
  • பிறரது வலைப்பதிவுகளிலிருந்து விமர்சனங்களை எடுத்து இங்கே இடாதீர்கள்.

--சோடாபாட்டில் 13:06, 16 செப்டெம்பர் 2010 (UTC)

public listed companyதொகு

ரகுநாதன்,

public listed company என்பதற்கு “பொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம்” என்ற தொடரை பயன்படுத்துங்கள்.--சோடாபாட்டில் 20:07, 17 செப்டெம்பர் 2010 (UTC)

ஆங்கில சொற்களை தமிழில் மொழிபெயர்க்க உதவும் தளங்கள் - விக்‌ஷனரி, அகராதி, தமிழ் கியூப். --சோடாபாட்டில் 20:10, 17 செப்டெம்பர் 2010 (UTC)

பாராட்டுகள்தொகு

இப்போது நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. எனது பாராட்டுகள். :-) --சோடாபாட்டில் 05:44, 26 அக்டோபர் 2010 (UTC)

மேற்கோள் சுட்டல்தொகு

கனிமொழி கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்களைக் கண்டேன். அவை எவ்வித மேற்கோளுமின்றி (Reference) சேர்க்கப்பட்டுள்ளன. எனவே மிகைப்பாடான சொற்றொடர்களை நீக்கியுள்ளேன். இங்கு நமது சொந்தக் கருத்துகளை இடக்கூடாது. மேலும் செய்தித்தாள்களில் வந்ததானாலும் அதற்கு எச்செய்தித்தாள் என மேற்கோள் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் தகவல் மூலங்களை கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலாவது குறிப்பிடலாம். --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 12:53, 6 மே 2011 (UTC)

கவனம்தொகு

நீங்கள் மொழிபெயர்ப்புக் கருவியைக் கொண்டு உருவாக்கும் கட்டுரைகள் இலக்கணம் மற்றும் எழுத்துப் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. தமிழ் விக்கியில் ஏற்றும் அளவுகு அவற்றில் தரம் போதாது. நீங்கள் பதிவேற்றிய கட்டுரைகள் நீக்கப்பட்டு வருகின்றன. தயவு செய்து மொழிபெயர்ப்புக் கருவியினை பயன்படுத்தாது, பிழையற்ற தமிழில் கட்டுரைகளை எழுதுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 12:45, 22 சூன் 2011 (UTC)

வார்ப்புரு கட்டுரைகள்தொகு

வெறும் வார்ப்புருக்களை மட்டுமே இட்டு உருவாக்கும் கட்டுரைகள் அவசியமற்றவை. ஒரு வரி கூட எழுதாமல் ஆங்கில விக்கியில் இருந்து நகலெடுத்து ஒட்டப்படும் வார்ப்புருக் கட்டுரைகள் நீக்கப்பட்டுவிடும் என்பதை கவனத்தில் கொள்க. (ஹென்றி கிஸ்ஸிங்கர் நீக்கப்பட்டது.) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:47, 23 சூன் 2011 (UTC)

குப்பை கொட்டாதீர்கள்!தொகு

இரண்டு நிர்வாகிகள் எச்சரித்த பின்னரும் நீங்கள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவியைப் (ஆல்ஃபா) பயன்படுத்தி தரமற்ற கட்டுரைகளைப் பதிவேற்றி வருகிறீர்கள். 3 வரிகளையும் முடிந்த வரை திருத்தியாவது எழுத முயலுங்கள். அப்படியே பதிவேற்றுவது நன்றன்று. பிரான்கோசி Barré-சினௌச்சி என்று விக்கிப்பீடியா கொள்கைக்கு முரணான வகையில் தலைப்பையும் இட்டுள்ளீர்கள்.

நீங்கள் இவண்ணம் செய்வது கட்டுரைகளை அதிகரிக்க வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கிலேயே என்று நினைக்கிறேன். அதே சமயத்தில் 2 வரிக் கட்டுரையானாலும் அவை தரமாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:21, 23 சூன் 2011 (UTC)

இணைப்புதொகு

ஆங்கில விக்கியிலிருந்து மீண்டும் வார்ப்புருக் கட்டுரைகளை இடத் தொடங்கியுள்ளீர்கள். ஆனால், இப்போது ஓரளவு மொழிபெயர்த்தே எழுதுகிறீர்கள். மேலும், ஒரு கட்டுரையைத் தொடங்குகையில் அதற்கான ஆங்கில விக்கி இணைப்பையும் கொடுங்கள். எ.கா. [[en:NH 47]] என்று கொடுங்கள். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:49, 16 சூலை 2011 (UTC)

அதே போல, இறுதியாக ==மேற்கோள்கள்== என்று ஒரு பகுதியைத் தொடங்கி அதற்குள் {{Reflist}} என்ற வார்ப்புருவை இடவும். ஒருவர், உங்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருக்கமுடியாது. இங்கு ஏராளமான பணிகள் உள்ளன. நிறைய கட்டுரைகளை எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்துடனோ வேறு பிற எண்ணத்துடனோ இவ்வாறு கட்டுரைகள் உருவாக்காதீர்கள்.

முன்னேற்றம்தொகு

பரவாயில்லை. தற்போது எழுதும் கட்டுரைகளில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஏதேனும் ஐயம் இருப்பின் கேட்கத் தயங்கவேண்டாம். எனது பயனர் பக்கத்தில் என்னைத் தொடர்பு கொள்வதற்கு பல வழிகளைக் கொடுத்துள்ளேன். :) பயன்படுத்திக் கொள்ளவும். :) நன்றி. நான் பேசியதில் ஏதேனும் மனக்குறை உங்களுக்கு ஏற்பட்டிருப்பின் வருந்துகிறேன். Happy editing. :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 18:41, 18 சூலை 2011 (UTC)

ஒரு சிறிய நினைவூட்டல்: {{Reflist}} -ஐ மறக்க வேண்டாம். :) வெட்டியார் கட்டுரையில் இடமறந்துவிட்டீர்கள். நான் இட்டுள்ளேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 09:58, 19 சூலை 2011 (UTC)

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் ஆங்கில விக்கியிக்கு இணைப்பு கொடுக்க மறந்து விடாதீர்கள். --குறும்பன் 16:29, 22 சூலை 2011 (UTC)

திரு.குறும்பன் திரு.சூர்யபிரகாசு.ச.அ அவர்களே புகைப்படம்(போட்டோ) எவ்வாறு நான் உருவாக்கும் கட்டுரையில் இணைப்பது தெரியபடுத்தவும் --ரகுநாதன்

[[file:filename|thumb|கீழே காட்ட வேண்டிய பெயர் ]] உதாரணம்: [[File:Thiruchendur2.jpg|right|thumb|250px|திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்]]மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:13, 11 ஆகத்து 2011 (UTC)

தகவல் தந்தைமைக்கு நன்றி திரு மரு. பெ. கார்த்திகேயன்

கூகுள் தமிழாக்கக் கருவி மூலம் எவ்வாறு கட்டுரை உருவாக்குவது?

வருத்தம்தொகு

திரு சோடாபாட்டில் நான் எழுதிய கலங்கரை விளக்கம் சென்னை, இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூர் மேலும் பல கட்டுரைகளை அழிக்கப்பட்டுள்ளது, என் அழிக்கப்பட்டது என்று தெரியபடுத்தவும். நான் திருத்தி கொள்வதற்கு. மேலும் என்னுடைய அக்கௌன்ட் ஒரு நாள் தடுக்கபட்டிருந்தது கபிலன் என்னுடையா நண்பன் இருவரும் ஒரே கம்ப்யூட்டர் தான் பயன்படுதுகிறோம், எனவே எங்களுடை அக்கௌன்ட் லாக் செய்யாதிர்கள்.--ரகுநாதன்

உங்களை ஒன்றரை வருட காலமாக பல வழிகளிலும் கேட்டுக்கொண்டாயிற்று. ஓரளவு தரமான கட்டுரைகளை எழுதுங்கள் என்று. விகுதிகள் இல்லாமல் அப்படியே பிற கட்டுரைகளில் இருந்து வாக்கியங்களைப் படியெடுத்து, ஆங்கில வார்ப்புருக்களைச் சேர்த்து கட்டுரை எண்ணிக்கையை கூட்டும் வகையில் தரமற்றக் கட்டுரைகளை அதிகளவில் உருவாக்குவதே ஒன்றரை வருட காலமாக உங்கள் வழக்கமாக உள்ளது. இதுவரை பலரால் பல முறை எச்சரிக்கப்பட்டு விட்டீர்கள். kabilank, Ragu2011 இரண்டும் நீங்கள் பயன்படுத்தும் கைப்பாவை கணக்குகள் என்பன தெளிவாகின்றன. உங்கள் தரமற்ற கட்டுரைகள் அழிக்கப்பட்டால் பின்பு வேறு கணக்குகளைப் பயன்படுத்தி அதே போன்ற கட்டுரைகள் உருவாக்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். எனது நண்பர்/ஒரே கணினி பயன்படுத்துகிறார் வழக்கமாக கைப்பாவை ஆட்டுவித்து சிக்குபவர் அனைவரும் சொல்லும் கதையினைச் சொல்கிறீர்கள். இதுவே உங்களுக்கு இறுதி எச்சரிக்கை. குறைந்த பட்ச தமிழ் தரமின்றி, மீண்டும் படியெடுத்து +தகவல்பெட்டி படியெடுத்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் உடனுக்குடன் அழிக்கப்படும். வேறு ஏதேனும் கணக்கு ஏற்படுத்தினால் அதுவும் இக்கணகும் உடனடியாக காலவரையன்று தடை செய்யப்படுவீர்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:11, 18 திசம்பர் 2011 (UTC)

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புதொகு


வணக்கம் ரகுநாதன். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. எனது கட்டுரைகளைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்தமைக்கு மகிழ்ச்சி. விக்கியில் புத்தாக்கம் செய்ய இயலாது. எனவே நான் நூல்களில் நிறைய தேடுவேன். பெரும்பாலும் அத்தலைப்புகளில் விக்கியில் தேடி இல்லையென்ற பின்பே புதுக் கட்டுரைகளைத் தொடங்குவேன். இணையத்திலும் நிறைய தேடினால் கிடைக்கும். முழு தகவலும் கிடைத்தபின்பு தட்டச்சுகிறேன். விக்கியின் விதிமுறைகளைப் படித்து அதற்கேற்ப உருவாக்கலாம். நான் பெரும்பாலும் நூல்களில் இருந்தே கட்டுரைகளைத் தொகுக்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:56, 2 ஏப்ரல் 2012 (UTC)

முதற்பக்கக் கட்டுரை திட்டம்தொகுகிராம மின்சாரவசதி நிறுவன அமைப்பு - தலைப்பு மாற்ற வேண்டுகோள்தொகு

  • நண்பரே வணக்கம் "Rural Electrification Corporation Limited (REC)" என்ற ஆங்கில கட்டுரையின் தமிழ் வழி கட்டுரையின் ("கிராம மின்சாரவசதி நிறுவன அமைப்பு") தலைப்பை மாற்ற வேண்டும்
  • ஏனெனில் "Rural Electrification Corporation Limited (REC)" என்ற ஆங்கில பெயரை தமிழாக்கம் செய்வோமாயின் அது ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம் என்று அழைக்கப்படும்
  • எனவே இக்கட்டுரையை ("கிராம மின்சாரவசதி நிறுவன அமைப்பு") ---- ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம் என்ற புதிய கட்டுரைக்கு வழிமாற்றும் செய்யலாம்

நன்றி கருப்பன்.முனியப்பன் Muniyankaruppan (பேச்சு) 03:18, 30 நவம்பர் 2012 (UTC)

மீண்டும் வருக!!!தொகு

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண மகிழ்ச்சி!

வணக்கம், Ragunathanp!

 
வருக! வருக!

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்.

நீங்கள் என்னைப் போன்றவர் என்றால், பங்களிக்க இயலாத காலத்திலும் அண்மைய மாற்றங்களைக் கவனித்தவாறே இருந்திருப்பீர்கள். எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளை அறிய நமது ஆண்டு அறிக்கைகளைப் பாருங்கள். குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைக் காணுங்கள்.

பலரும் இணைந்து பங்களிக்கும் போது, அவ்வப்போதாவது வந்து செல்லும் போது, ஏற்கனவே இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். உங்களைப் போன்றோரிடம் இருந்து புதுப்பயனர்களும் நிறைய கற்றுக் கொள்ள இயலும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இதற்கு மேல் உங்களுக்குத் தெரியாதா என்ன :) ? உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அன்புடன்...

--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:58, 28 அக்டோபர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ragunathanp&oldid=1941091" இருந்து மீள்விக்கப்பட்டது