அடையாளச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''அடையாளச் சின்னம்''' (Logo) என்பது, [[வணிக நிறுவனம்|வணிக நிறுவனங்கள்]], பிற அமைப்புக்கள் போன்றவற்றையும் சில சமயங்களில் [[தனியாள்|தனியாட்களைக்]] கூடப் பொதுமக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பயன்படும் ஒரு வரைபடக் குறியீடு ஆகும். அடையாளச் சின்னங்கள் முழுதும் ஒரு வரைபடமாகவோ அல்லது குறித்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் பெயரை உட்படுத்திய அடையாள எழுத்துருக்களாகவோ இருக்கலாம். சில அடையாளச் சின்னங்கள் பண்புருவாக (abstract) அமையும். அருகில் உள்ள "[[சேஸ் வங்கி]]"யின் அடையாளச் சின்னம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். [[ஐ.பி.எம்]]. [[கொக்கா கோலா]] ஆகிய நிறுவனங்களின் அடையாளச் சின்னங்கள் அடையாள எழுத்துருக்களைக் கொண்ட அடையாளச் சின்னங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.
 
அச்சுக்கோர்த்து அச்சிடும் பழைய காலத்தில் அடையாளச் சின்னங்கள் தனித்துவமாக ஒழுங்கு படுத்தப்படும் அச்சுருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டன. தற்காலத்தில், அடையாளச் சின்னங்கள் வணிகக் குறியீடு என்பதற்கு ஈடான பொருளில் பயன்பட்டு வருகின்றது<ref name="wheeler_dbi_pg4">Wheeler, Alina. ''Designing Brand Identity'' ©2006 John Wiley & Sons, Inc. (page 4) ISBN 978-0-471-74684-3</ref>.
 
==வரலாறு==
 
பல்வேறு கண்டுபிடிபுக்களும், தொழில்நுட்பங்களும், அடையாளச் சின்னங்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றியுள்ளன. இவற்றுள் [[உருளை முத்திரை]]கள், [[நாணயம்|நாணயங்கள்]]<ref>Herodotus. ''Histories'', I, 94.</ref><ref>A. Ramage, "Golden Sardis," King Croesus' Gold: Excavations at Sardis and the History of Gold Refining, edited by A. Ramage and P. Craddock, Harvard University Press, Cambridge, 2000, p. 18.</ref>, [[படவெழுத்து]] மொழிகளின் பரவல், [[நீர்க்குறி]]கள்,<ref name="meggs58">{{Cite book | last = Meggs | first = Philip B. | authorlink = Philip B. Meggs | title = A History of Graphic Design | publisher = John Wiley & Sons, Inc. | year = 1998 | location = | edition = Third | pages = 58 | isbn = 978-0471291985}}</ref>, அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பன அடங்கும்.
 
18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, மேற்கத்திய சமூகங்களை [[வேளாண்மைச் சமூகம்|வேளாண்மைச் சமூக]] நிலையில் இருந்து, தொழிற் சமூக நிலைக்கு மாற்றியது. [[ஒளிப்படம்|ஒளிப்படமும்]], அச்சுத் தொழில்நுட்பமும், [[விளம்பரத்துறை]]யின் துரித வளர்ச்சிக்கு வித்திட்டன. எழுத்துருக்களையும், படங்களையும் ஒரே பக்கத்தில் இருக்கும்படி செய்யத்தக்க நிலையும் ஏற்பட்டது. எழுத்துருக்களில்கூடப் பல புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றின் வடிவம், வெளிப்படுத்தும் தன்மை என்பவற்றில் அக்காலத்தில் நூல்களை அச்சிடுவதற்காகப் புழக்கத்தில் இருந்த அடிப்படையான எழுத்துருக்களுக்கும் அப்பால், தடித்த எழுத்துருக்கள், அலங்கார எழுத்துருக்கள் போன்ற பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
 
 
கலைகளின் நோக்கங்களும் விரிவடைந்து வந்தன. வெளிப்படுத்தல், அழகூட்டல் என்பவற்றோடு கூடிய கலையம்சம் கொண்ட கதை சொல்லல் போன்ற நிலையில் இருந்து, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றின் வணிகத் தயாரிப்புக்களையும் வேறுபடுத்திக் காட்டும் ஒன்றாகவும் வளர்ச்சியடைந்ததுகலைகள் வளர்ச்சியடைந்தன. [[வணிகக் கலை]] தொடர்பான [[ஆலோசனை நிறுவனம்|ஆலோசனை நிறுவனங்களும்]], வணிகக் குழுக்களும் ஒழுங்கமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்தன. 1890 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் 8,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த 700 [[கல்லச்சு]]முறை (lithography) அச்சகங்கள் இருந்தன. ஆக்கங்களுக்கான பெருமையும் தனிப்பட்ட கலைஞர்களுக்கு அன்றி அவர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களுக்கே உரித்தாயின.
 
 
1800 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் அச்சக நிறுவனமான ரூச்சன், 1850 ஆம் ஆண்டில் நியூ யார்க்கின் கோசேப் மோர்சு, 1870 ல் ப்ரான்சின் யோல்சு செரெட் இங்கிலாந்தின் பிரெடெரின் வாக்கர் போன்ற நிறுவனங்கள் காட்சிக் கலைகள், கல்லச்சு நுட்பம் என்பவற்றில் புத்தாக்கங்களைச் செய்தனர். இதன் மூலம் வண்ணப் படங்களை அச்சிடுவதில் பல முன்னேற்றங்கள் உருவாயின. அச்சுச் செலவு குறைந்து படிப்பறிவு வீதம் அதிகரித்ததுடன், காட்சிக்கலைகள் தொடர்பான பாணிகளும் மாற்றமடையலாயின. விக்டோரிய அழகூட்டல் கலைகள், வணிகச் சார்பான அச்செழுத்துப் பாணிகள், முறைகள் என்பவற்றையும் தழுவி விரிவடைந்தது.
 
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:சின்னங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அடையாளச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது