தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:ucanca teide.jpg|thumb|250px|இசுப்பெயினில் தெனெரைபில் அமைந்துள்ள [[டெய்டே தேசியப் பூங்கா]]. வருவோர் தொகை அடிப்படையில் உலகில் இரண்டாவது பெரியது.]]
'''தேசியப் பூங்கா''' என்பது, ஒரு [[அரசு|அரசால்]] அறிவிக்கப்பட்ட அல்லது அதற்கு உரிமையான, இயற்கை நிலங்களையோ அல்லது ஓரளவு இயற்கை நிலங்களையோ கொண்ட ஒரு ஒதுக்ககம் ஆகும். இது மனிதருடைய [[பொழுதுபோக்கு]], கேளிக்கை போன்ற தேவைகளுக்காகவும், [[விலங்கு]]கள் அல்லது சூழல் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவும் ஒதுக்கப்படுவதுடன், பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. தேசியப் பூங்காக்கள் அமைப்பது தொடர்பான எண்ணங்கள் முன்னரேயே இருந்தனவாயினும், முதன் முதலாக உருவாக்கப்பட்ட தேசியப் பூங்கா 1872 ஆம் ஆண்டில் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் உருவாக்கப்பட்ட [[யெலோஸ்ட்டோன் தேசியப் பூங்கா]] ஆகும். ஒரு பன்னாட்டு நிறுவனமான [[இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம்|இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியமும்]] (இ.பா.ப.ஒ) அதன் [[பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம்|பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையமும்]] தேசியப் பூங்காக்களைத் தமது பகுப்பு II என்னும் வகையுள் சேர்த்து வரையறுத்துள்ளன. இ.பா.ப.ஒ வின் வரைவிலக்கணத்துள் அடங்கும் உலகின் மிகப்பெரிய தேசியப்பூங்கா [[வடகிழக்கு கிரீன்லாந்து தேசியப் பூங்கா]] ஆகும்.
 
==வரைவிலக்கணம்==
1969 ஆம் ஆண்டில் இ.பா.ப.ஒ (), தேசியப் பூங்காக்கள் ஒப்பீட்டளவில் பெரியவையாக இருக்கவேண்டும் எனவும், குறிப்பிட்ட வரைவிலக்கணத்துக்கு அமையும் இயல்புகளைக் கொண்டவையாக இருக்கவேண்டும் எனவும் அறிவித்தது. இதன்படி ஒரு தேசியப் பூங்கா பின்வரும் இயல்புகளைக் கொண்டிருக்கவேண்டும்:
 
* மனிதர் பயன்படுத்தியதனாலோ அல்லது வாழ்ந்ததினாலோ மாற்றங்களுக்கு உட்படாத, ஒன்று அல்லது பல சூழல்மண்டலங்களைக் கொண்டிருக்கவேண்டும். இங்குள்ள தாவர விலங்கு இனங்கள், [[புவிப்புறவியல்]] களங்கள் மற்றும் வாழிடங்கள் என்பன [[அறிவியல்]], [[கல்வி]] பொழுதுபோக்கு போன்ற அடிப்படைகளில் சிறப்புப் பெற்றவையாக இருக்கவேண்டும் அல்லது மிகுந்த அழகுடன் கூடிய இயற்கை [[நிலத்தோற்றம்]] கொண்டவையாக இருக்கவேண்டும்.
* நாட்டின் அதி உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு இப்பகுதியை மனிதர் பயன்படுத்துவதையும், வாழ்வதையும் தடுக்கவேண்டும் அல்லது கூடிய விரைவில் அகற்றவேண்டும். அத்துடன், பூங்கா அமைப்பதற்குக் காரணமாக இருந்த [[சூழலியல்]], புவிப்புறவியல் அல்லது [[அழகியல்]] அம்சங்களை மதிப்பதற்கான இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
* அகத்தூண்டல், கல்வி, பொழுதுபோக்கு போன்ற தேவைகளுக்காக சிறப்பு நிபந்தனைகளின்கீழ் பார்வையாளர்களை அனுபதிக்கலாம்.
 
[[பகுப்பு:தேசியப் பூங்காக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேசியப்_பூங்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது